தளர்வு மற்றும் விடுவிப்பதன் மூலமாக பதட்டத்தை வெளியே விடுவது.

சக்தி பாயட்டும்.

சக்தி எப்போதும் அன்பு என்கிற பொருளைத் தேடித்தான் ஓடுகிறது.

எப்போதெல்லாம் உங்கள் சக்தி எங்கோ தடைப்பட்டிருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் அன்புதான் சக்தியை ஓடவைக்கிற ரகசியம்.

அன்பான ஒரு பொருளை தேர்ந்தெடுங்கள். எந்தப் பொருளாக வேண்டுமானாலும்
இருக்கட்டும். அது ஒரு காரணம் அவ்வளவுதான். நீங்கள் ஒரு மரத்தை அன்போடு தொட்டால்கூட அந்த சக்தி பாயத்துவங்கும். காரணம் எங்கெல்லாம் அன்பு இருக்கிறதோ,
சக்தி அதை நோக்கிபாயும். தண்ணீர் கீழ்நோக்கி பாய்வதைப்போல, நீர் கடல் இருக்கிற பக்கத்தை தெரிந்துகொண்டு கடலின் எல்லையை நோக்கி நகரத்துவங்கும்.

எங்கெல்லாம் அன்பு இருக்கிறதோ,
சக்தி அந்த `அன்பின்எல்லை’ யை அறிந்துகொண்டு அதை நோக்கி நகரும்.

மஸாஜ் உங்களுக்கு உதவும், அதை அன்போடு செய்தால் அது உதவும். அல்லது எதுவுமே உதவும்.

ஒரு கல்லை அன்போடு உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஆழ்ந்த ஈடுபாடு இருக்கவேண்டும். அதன்மீது ஆழ்ந்த அன்பை செலுத்துங்கள். அந்த கல் இருப்பதற்காக விசுவாசத்தோடு, உங்கள் அன்பை அது ஏற்றுக் கொண்டதற்காக நன்றியோடு கண்களை மூடுங்கள்.
திடீரென்று உங்கள் நாடி துடிப்பை உணர்வீர்கள். சக்தி நகரத் துவங்கும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக….. உங்களுக்கு எந்த பொருளும் தேவையில்லை. உண்மையில் – நீங்கள் யாரையோ விரும்புவதாக நினைத்தாலே
ஒரு சக்தி உங்களுக்கு வரும். பிறகு அந்த யோசனையைகூட தூக்கிப் போட்டுவிடலாம்.,
அன்புகனிந்து இருங்கள், சக்தி உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும்.

அன்பு என்பது ஓட்டம், நாம் உறைந்து போகிறோம் காரணம் நாம் அன்பு செலுத்துவதில்லை.

அன்பு என்பது கனிவானது, அந்த கனிவிருக்கும்போது உறைந்துபோவது என்பது நடக்காது. அன்பு இல்லாதபோது, எல்லாமே உறைந்துபோகும். உங்கள் சக்தி மிகவும் பலவீனமாக இருக்கும்.

அதனால் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும். அன்பு கனிவானது, வெறுப்பும் கூட கனிவானதே. அலட்சியம் என்பது கெட்டியானது.
அதனால் சிலசமயம் நீங்கள் வெறுப்பைக் காட்டும்போதுகூட,
சக்தி உங்களுக்குள் ஓடும். ஆனால் அந்த சக்தி என்பது அழிவானது. கோபத்தில் ஒருவித சக்தி ஓடும்.  – அதனால்தான் சிலசமயங்களில் சிலருக்கு கோபத்திற்கு பிறகு நன்றாக இருப்பதைப்போல உணர்வார்கள்.  ஏதோ ஒன்றை வெளியே கொட்டிவிட்டதைப்போல.
அது அழிவுபூர்வமானது,
அதுவே அன்புபூர்வமாக வெளியாகிருந்தால் அது ஆக்கபூர்வமாக இருந்திருக்கும்.
ஆனாலும் எப்படியோ சக்தி வெளிப்படுவதே ஒரு நல்லதுதான்.

நீங்கள் அலட்சியமாக இருந்தால், எதுவும் நகராது. ஆகவே உங்களை உருக்கி, கனிவாக்கும் எதுவுமே நல்லதுதான். நீங்கள் உடம்பைபிடித்து அழுத்திசெய்யும் மஸாஜ்
வேலைசெய்கிறீர்கள் என்றால் அந்த வேலையைவிட, அங்கு உங்கள் அன்புதான் முக்கியம். இப்போது இதே காரியத்தை ஒரு கல்லை வைத்து முயற்சிசெய்யுங்கள். அந்த கல்லை தடவிக் கொடுங்கள், என்ன நடக்கிறது என்று பாருங்கள். அன்பை பொழிந்து
கொண்டேயிருங்கள்.

அதேபோல ஒரு மரத்தை வைத்து முயற்சிசெய்யுங்கள். ; ஏதோ நடக்கிறது என்பதை உணரும்போது, மெளனமாக அமர்ந்து முயற்சிசெய்யுங்கள்..
நீங்கள் நேசிக்கிற யாரையாவது, அல்லது எதையாவது நினையுங்கள். ஒரு மனிதன்,
ஒரு பெண், ஒரு குழந்தை, அல்லது ஒரு மலர். நினைவில் கொள்ளுங்கள் அந்த மலர் என்பது ஒரு யோசனைதான்.  திடீரென்று ஒரு சக்தி உங்களுக்குள் ஒடுவதை உணர்வீர்கள்.

பிறகு அந்த யோசனையை தூக்கிப் போடுங்கள். ஒருநாள் சாதாரணமாக மெளனமாக அமர்ந்து அன்போடு இருங்கள், எது குறித்தோ, அல்லது யாரையோ குறிப்பிடும்படியாக இல்லை. அந்த அன்பான மனநிலையில் மெளனமாக அமர்ந்திருக்கும்போது, அந்த அன்போடு ஒரு சக்தி ஓடுவதை உணர்வீர்கள். பிறகு உங்களுக்கு எது சாவி என்பது தெரியும்.  அன்புதான் சாவி. அன்புதான் அந்தஓட்டம்.