தளர்வு மற்றும் விடுவிப்பதன் மூலமாக பதட்டத்தை வெளியே விடுவது

தொண்டைசுத்தகரிப்பு

உங்கள் குழந்தை பருவத்திலிருந்து
நீங்கள் விஷயங்களை சொல்லும் விதம் எப்படி அமையவேண்டுமோ அப்படியில்லை
– நீங்கள் எதை வெளிப்படுத்த விரும்புகிறீர்களோ அதை உங்களால் தெரிவிக்க முடியவில்லை – நீங்கள் எதை செய்யவிரும்புகிறீர்களோ அதை செய்யமுடியவில்லை – அந்த வெளிப்படுத்த முடியாத சக்தி உங்கள்
தொண்டையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. தொண்டைதான் வெளிப்படுத்துதலின் மையமாகும். அது உட்கொள்வதை முழங்கும் மையம் மட்டுமல்ல, நம் பேச்சுக்கும் அதுதான் மையம். ஆனால் பலர் அதை உட்கொள்வதை முழுங்கும் மையமாகத்தான் நினைக்கிறார்கள். அதன் பயனில் பாதிதான் அது, மற்றபாதி, அதிக முக்கியமானது உபயோகப்படுத்தப் படாமலேயே கிடக்கிறது.

நீங்கள் அதிக சொல்லாற்றலோடு
வெளிப்படுத்த நீங்கள் சில விஷயங்கள் செய்யவேண்டியிருக்கிறது.

நீங்கள் ஒருவரை விரும்பினால், நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்களோ,
அதை சொல்லுங்கள். அவை முட்டாள் தனமாக தெரியலாம்; சில சமயங்கள் முட்டாள்தனமாகவே இருப்பதும் நல்லதுதான்.
அந்த சமயத்தில் உங்களுக்குள் என்ன தோன்றுகிறதோ அதை சொல்லுங்கள்,
கட்டுபடுத்தி வைக்காதீர்கள். நீங்கள் ஒருவரை விரும்பினால், அதில் முழுமையாக ஈடுபடுங்கள். கட்டுபடுத்திக் கொள்ளாதீர்கள்.  நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள், ஏதோ சொல்ல நினைக்கிறீர்கள்,
உடனே சூடாக சொல்லிவிடுங்கள்! குளிர்ந்த கோபம் கொடுமையானது, சூடான கோபமல்ல – காரணம் குளிர்ந்த கோபம் ஆபத்தானது. ஆனால் அதுதான் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.: கோபமாக இருக்கும்போதுகூட
அமைதியாக இரு, ஆனால் அப்போது அதன் விஷம் உங்கள் உடல் அமைப்புக்குள்ளேயே தங்கிவிடும்.
சத்தம் போடுவது சிலசமயங்களில் நல்லது, அப்படித்தான் எல்லாவிதமான உணர்ச்சிகளும்.

ஒவ்வொரு இரவும், உட்கார்ந்து கொண்டு அசைந்தாட ஆரம்பியுங்கள். அந்த அசைந்தாடுதல் எப்படி
இருக்க வேண்டுமென்றால் நீங்கள் ஒருபுறம் அசையும்போது, உங்கள் ஒரு ஆசனப்பகுதி தரையை தொடவேண்டும்.
நீங்கள் இன்னொருபுறம் அசையும்போது இந்த ஆசனப்பகுதி தரையை தொடவேண்டும்.
ஒருசமயத்தில் ஒருபகுதிதான் தரையை தொடவேண்டும், இரண்டுபகுதியும் ஒன்றாக அல்ல.

நம்மில் இருக்கும் சக்தியை
தாக்க முதுகுத்தண்டின் அடிமட்டத்தை தொடுவதற்கான புராதனமுறை இது.

தொண்டையில் ஏதோ முட்டுகிறது. அங்கு ஏதோ ஒரு சக்தி மோதுகிறது, மேலும் அதை
உங்களால்  கட்டுபடுத்த முடிகிறது, உங்கள் கட்டுப்பாட்டை உடைக்க அதிக வெள்ளமான சக்தி தேவைப்படுகிறது.
அப்போது உங்கள் கட்டுப்பாடு குறைந்து. சக்தியின் பலம் அதிகமாகிறது. அப்போது உங்களால் அதை கட்டுபடுத்த முடியாமல் போய்விடும். அதனால் அணை உடைகிறது. இதற்காகவே இந்தப் பயிற்சி. இதை ஒரு பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் செய்யுங்கள்.

இந்த பயிற்சியை செய்யும் போது
பத்து நிமிடங்கள் கழித்து, கொஞ்சம் பக்கத்திற்குப் பக்கம் அசைந்தாடுங்கள்’
பிறகு `அல்லா… அல்லா’’ என்று சொல்லுங்கள் `அல்லா` நீங்கள் ஒருபுறம் சாயும்போது, மறுபடியும் `அல்லா’ நீங்கள் இன்னொருபுறம் சாயும்போது. போகபோக உங்களுக்கு அதிகபலம் கூடுவதாக உணர்வீர்கள் பிறகு அந்த
`அல்லா’ வின் ஒலி உரக்க எழும்பும். பத்து நிமிடங்களுக்கு பிறகு ஒருகட்டத்தில் நீங்கள்
`அல்லா’ என்று உரக்கசத்தமிட்டுக் கொண்டிருக்கும்போது, உங்களுக்கு வியர்த்து கொட்ட துவங்கும்;
உங்களுக்குள்ளிருக்கும் சக்தி சூடாகும். பிறகு `அல்லா’ `அல்லா’ என்பது கிறுக்குதனமாக மாறும். அணை உடையும்போது ஒருவர் பைத்தியமாகிறார்.

இந்த இரண்டு வார்த்தைகள் மிகவும் நல்லது. அவைகளுக்கு
ஒரே எழுத்துக்கள்தான், ஆங்கிலத்தில் dam என்கிறவார்த்தை – நீங்கள் ஒரு திசையில் படித்தால் அதற்கு ஒரு
அர்த்தம், மறுதிசையில் படித்தால் அதற்கு வேறுஅர்த்தம்.; அதை இன்னொரு புறமாக படியுங்கள்: அது mad.

நீங்கள் ரசிப்பீர்கள். விசித்திரமாக இருக்கும் ஆனால் நீங்கள் ரசிப்பீர்கள்! பிறகு இதை இரண்டுமுறை செய்யலாம் – காலையில், கூட; காலையில் இருபது நிமிடங்கள் மாலையில் இருபது நிமிடங்கள்.