1.கண்களை இமைக்காது பார்த்தல்

எப்போதெல்லாம் நீ உனக்கும் மற்றவர்களுக்கும் வேற்றுமையை உணர்கிறாயோ அப்போதெல்லாம் நீ மோலோட்டமாய் இருக்கிறாய் என்பதை தெரிந்து கொள். உன்னை பிரபஞ்சத்தின் பாகமாக உணர வில்லை என்பதை அறிந்து கொள். உள்ளே பார், மேல்மட்டத்தினால் ஏமாற்றப்படாதே.

முதல் படி – மற்றவர்களின் உள்ளே பார்
உட்கார்ந்து மற்றவரின் கண்களுக்குள் பார். எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக கண்களை இமை. எதையும் நினைக்காமல் ஆழ்ந்து பார்.
நீ எதையும் நினைக்கவில்லையென்றால், வெறுமனே கண்களுக்குள் பார்த்துக் கொண்டிருந்தால் விரைவில் அலைகள் மறைந்து விடும். கடல் தெரிய ஆரம்பிக்கும். கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தால் விரைவில் அந்த மனிதன் மறைந்து போவதை, உருவம் மறைந்து போவதை நீ உணர்வாய். கடல் போன்ற ஏதோ ஒன்று பின்னே உள்ளதை இந்த மனிதன் கடலின் அலை போல இருப்பதை, அறியாத ஒன்றின் மறைந்திருக்கும் ஏதோ ஒன்றின் அலை போல உணர்வாய்.

இதை முதலில் மனிதர்களுடன் செய். ஏனெனில் நீ இந்த வகை அலைகளுடன்
அருகில் இருக்கிறாய். பின் விலங்குகளுடன் செய்து பார். ஒரு சிறிது வேறுபாடு இருக்கும். பின் மரங்களுடன் செய்து பார். மேலும் வேறுபட்ட விதமான அலைகளாக இருக்கும். பின் பாறைகளுடன் முயன்று பார்.

இரண்டாவது படி – விரைவில் நீ உன்னை சுற்றியுள்ள கடலைப் பற்றிய விழிப்பு பெறுவாய். பின் நீ ஒரு அலை என்பதை நீ பார்ப்பாய். உன்னுடைய ஆணவம் ஒரு அலை போன்றது என்று காண்பாய்.
அந்த ஆணவத்திற்குப்பின் பெயரற்ற ஒன்று மறைந்திருக்கிறது. கடல் அதேதான், அலைகள் மட்டுமே எழும், விழும். பல பிறக்கும், அசையாத ஒன்று அதேதான்.

2. பாதுகாக்கும் ஹரா

வாரம் முழுவதும் இயந்திரத்தனமாக வேலை செய்தபடி இருப்பதால் வார இறுதி நாட்களில் நிற்கக் கூட முடியாத அளவுக்கு சோர்வடைந்து விடுகிறேன் நான். என்ன செய்வது

நேரம் – ஒவ்வொரு நாள் இரவும் தூங்கப்போவதற்கு முன் செய்யும் இறுதியான செயல். காலை எழுந்தவுடன் செய்யும் முதல் செயல்

காலம் – 4 – 5 நிமிடங்கள்.

முதல் படி – படுக்கையில் உட்கார்ந்து கொண்டு உனது உடலிலிருந்து 6
அங்குலங்கள் தள்ளி, உனது உடலைச் சுற்றி, உனது உடலைப் போலவே ஒரு ஹரா இருப்பதாக கற்பனை செய்து கொள். உன்னைச் சுற்றி உன்னை பாதுகாக்க அது ஒரு கவசம் போல இருப்பதாக நினைத்துக் கொள். இதை உணர்ந்த படியே, தூங்கச் செல்.
வெளியிலிருந்து எந்த எண்ணமும் உள்ளே வர முடியாத படி, வெளியிலிருந்து எந்த பதட்டமும் உன்னுள் நுழைய முடியாத படி, ஒரு போர்வை போல அந்த ஹரா உன்னை பாதுகாப்பதாக நினைத்தபடியே தூங்கி விடு. வெளியிலிருந்து வரும் எந்தவித அதிர்வும் உன்னை தொட முடியாது. நீ தூங்கி விடுவாய். ஆனால் அந்த கற்பனை உனது தன்னுணர்வற்ற மனதினுள் சென்று அளபரிய ஆற்றலாகவும் சக்தியாகவும் மாறும்.

இரண்டாவது படி – காலையில்
காலையில் தூக்கம் கலைந்தவுடன் உடனே கண்களை திறந்து விடாதே. உன்னைச் சுற்றி உன்னை பாதுகாக்கும் உனது ஹராவை உணர்ந்து பார். இதை 4 அல்லது 5 நிமிடங்களுக்கு செய். பின் எழுந்து கொள்.

மூன்றாவது படி – எல்லா நேரமும்
குளிக்கும் போதும், டீ குடிக்கும் போதும் இதை நினைவு கொள், காரிலோ, ரயிலிலோ ஆபிஸூலோ எதையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் சமயங்களில் எல்லாம் இந்த உணர்வினுள் சென்று பாதுகாப்பாக உணர்.
இது போன்ற சக்தி முழுமையாக காலியாவது பலருக்கு நிகழ்கிறது. ஏனெனில் நமக்கு எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது என்று தெரிவதில்லை. மற்றவர் வெறுமனே அங்கிருப்பதில்லை, அவர்கள் தங்களது இருப்பை தொடர்ந்து மெலிதான அதிர்வுகளாக ஒலிபரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். யாரோ உன்னை கடந்து போகிறார்கள், உன்மேல் ஏதோ சக்தியை சகதி போல வீசிவிட்டுப் போகிறார்கள். உன்னைச் சுற்றி பாதுகாப்பு கவசம் இல்லையென்றால் நீ பெற்றுக் கொள்பவனாக இருந்தால் வம்புதான்.
மேலும் தியானம் ஒருவரை பெற்றுக் கொள்பவனாக மாற்றும்.
ஆகவே நீ தனியாக இருந்தால் சரிதான். உன்னைச் சுற்றி தியானம் செய்பவர்கள் இருந்தால் மிகவும்சரி. அப்படி இல்லாமல் நீ இந்த உலகில், சந்தை கூட்டத்தில் இருந்தால், உன்னைச் சுற்றியுள்ள மக்கள் தியானம் செய்பவர்களாக இல்லாமல் இருப்பதோடு மிகவும் வேதனையோடும் பதட்டத்தோடும் இருப்பார்கள். நீ அந்த சக்தியை வாங்க ஆரம்பிப்பாய். தியானம் செய்ய ஆரம்பித்தபின் ஒருவர் தன்னைச்
சுற்றி பாதுகாப்பு வளையம் போட்டுக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் அது தானாகவே நடக்கும். சில நேரங்களில் நடக்காது. அப்படி அது உனக்கு தானாகவே நடக்காவிட்டால் நீ அதை உருவாக்க வேண்டும். அது மூன்று மாதங்களுக்குள் வந்துவிடும். மூன்று வாரங்களிலிருந்து மூன்று மாதங்களுக்குள் நீ மிகவும் சக்தி வாய்ந்தவனாக உணர்வாய்.