இறப்பின் மர்மங்களும் அதைப் பற்றிய நிஜங்களும் இம்மாதமும் தொடர்கிறது…..

பல மணி நேரங்கள் நாங்கள் தொடர்ந்து கவனித்ததில் இறப்பிற்க்கு மிக அருகே சென்று விட்டவரின் உடலின் தோல் நிறம் நுரை நிறம் போன்று சிறிதளவு ஒளி வீசக் கூடியதாக மங்கலான கண்ணாடி போன்று மாறுகிறது. இந்த ஒளி வீசும் தன்மை அவருடைய சக்தி  வட்டத்தைத் பொறுத்து மாறுபடும். சக்தி மையத்திற்க்குள் செல்வதும் அது மாறுவதும் நமது உணர்வில் ஏற்படும் மிகநுட்பமான விளைவுகள். அதை நம்மால் கவனிக்க முடியும். ஆனால் அதை சொல்வதற்க்கு நம்முடைய மொழியில் சில வார்த்தைகளே உள்ளன அல்லது வார்த்தைகளே இல்லை. சக்திவட்டம் நெருக்கமாகி செறிவுநிலையடைவதையே நாம் உடல்இறப்பு எனறு வரையறுக்கிறோம். நான் கவனித்த வகையில் தலையிலும் இதயம் இருக்கும் இடத்திலும் வெப்பம் அதிகமாவதையும் உடலின் கீழ்பகுதியிலும் கை கால்களிலும் சக்தியற்று போவதையும் உணர்ந்திருக்கிறேன். இறந்து கொண்டிருக்கும் மனிதன் இந்த செயல்பாட்டிற்கு தன்னை முழுமையாய் அனுமதித்து
ஆழமாக அதனுள் செல்கையில், அப்படி அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படும்போது
அவனைச் சுற்றியுள்ள ஒளியானது நாடிதுடிப்பைப் போன்று துடிப்பதை நான் கண்கூடாக
பார்த்திருக்கிறேன். அந்த அடுத்த நிலையை நான் புனிதம், அருள், தெய்வீகம், சக்தி என
அழைக்கிறேன்.

மனிதன் உணர்வுடன் இறக்கும்போது அவனது சுவாச முறை மாறு படுகிறது 

இந்த காலகட்டமானது, ஒரு குறிப்பிட்ட தன்னுணர்வு
தன்னை இறப்பினுள் செலுத்திக் கொண்டு அதில் நிலைபெற எடுத்துக் கொள்ளும் நேரத்தைப்
பொறுத்தும் உடலைப் பொறுத்தும் சில நிமிடங்களிலிருந்து சில நாட்கள் வரை ஆகலாம். சுவாச முறையில் நுட்பமான மற்றும் வெளிப்படையான வேறுபாடுகள் தோன்றும். “சைனஸ் ஸ்டோக் சுவாசம்” என்றழைக்கும் முறை சுவாசத்தில் வரும். இந்த
முறையில் மெதுவான சீரான சுவாசம் வரும், பின் சில வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை சுவாசிப்பது இல்லாமல் இருக்கும், பின் ஆழமான வேகமான சுவாசம் தொடரும்.

நான், இந்த இறப்பின் செயல்பாட்டில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தவந்த, அதில் ஆர்வமுள்ள ஒரு ஆர்வமுள்ள பெண்மணி இறக்கும் சமயத்தில், அவருடன் இருந்தேன். அவர் இறக்கும் தருவாயில் மரணத்தை மிக நெருங்கி விட்ட நிலையில் அவர் அந்த இருப்பின் தளத்திலிருந்து திரும்பி தன்னுடைய தன்னுணர்வை தொட்டு, தன்னுடைய சுவாச முறையை கவனித்து, ஓ, இதுதான் நிச்சயமாக அந்த சைனஸ் ஸ்டோக் என்று
முணுமுணுத்தார். பின் தன்னுடைய கண்களை மூடிக் கொண்டு என்றாவது ஒருநாள் நாமும்
தெரிந்துகொள்ளப் போகும் அந்த தான் எதுவோ அந்த தன்னுடைய இருப்பிற்க்குள் திரும்பும்
விதமாக அமைதியாக இறந்தார்.

இறக்கப்போகும் மனிதருக்கு சுவாசம் மெதுவானதாக, விரைவானதாக, திணறலாக என்று பல விதங்களிலும் மாறி மாறி வரும். சில நேரங்களில் சுவாசம் வெளிவிடுதலில் முனகல் இருக்கும். இந்த சப்தங்கள் அந்த சமயத்தில் பயங்கரமானதாக தோன்றினாலும் அவை அவர் இறக்கப் போகிறார் என்பதன் அறிகுறி அல்ல. காற்று சுவாசப் பாதையின் ஆழம் வரை சென்று வருவதால் ஏற்படும் ஒலிதான் அது.

நுரையீரலின் காற்றுப் பைகளில் நீர் கோத்துக் கொள்வதால் கொப்பளிக்கும் சப்தம் வரலாம். இதுவும் கேட்பதற்க்கு கர்ணகொடூரமாக இருக்கலாம். இறக்கப் போகும் மனிதரின் கூட இருந்து அவர்களுக்கு உதவி செய்து அவர்களை கவனிக்கும் எங்களுக்கு அவர்கள் இது போன்ற சப்தங்கள் செய்தால் அவர்கள் ஆழமாக தளர்வு கொள்கிறார்கள் என்பதன் அடையாளம் இது என்று தெரியும். ஒருவரின் விழிப்புணர்வில்,
அதன் ஒரு பரிமாணமாக இந்த உடல்மனம் என்பது இருக்கும் போதும், அதைத் தாண்டிய
தன்னுணர்வு என்ற தளத்திற்கு ஒருவர் தன்னுடைய உடலைக் கடந்து சென்று விட்டார்
என்பதன் அடையாளமே அந்த ஒலிகள் என்று நான் நினைக்கிறேன்.

பல நேரங்களில், இருதய நாடிகளில் தெரியும் நாடித்துடிப்பின் துடிப்புகள் மற்றும் தாறுமாறாக அவ்வப்போது ஏறி இறங்கும் நெஞ்சின் அசைவுகள் தவிர வேறு அசைவு எதுவும் இருக்காது. மிக நுண்ணிய விதங்களில் அந்த மனிதரின் சக்திநிலை அவரின் முந்தைய நிலைபாடுகளைப் பொறுத்து  பௌதீக உடலை சுற்றி மாற்றத்தை கொண்டு வரும்.
கீழேயுள்ள சக்திமையங்களிலிருந்து அல்லது கீழ்நிலை சக்கரங்களிலிருந்து சக்தி இடம்
பெயர்ந்து இருதயத்திற்க்கும் தலைக்கும் அருகே உள்ள மையங்களுக்கு வந்து அதற்கு
வலிமை கொடுக்கும். இந்த நுண்ணிய வேறுபாடுகளை உணரத் தெரிந்தவர்களுக்கு மரணம்
நெருங்கி வந்துவிட்டது என்பதன் அடையாளங்கள் இவை என்பது தெரியும்.

மரணத்தை ஒத்த அனுபவங்கள்

உடல்ரீதியாகவும் நாம் பார்க்க முடியாத பல மாற்றங்களும் நிகழ்கின்றன. மரணத்தருவாயில் நிகழும் அனுபவங்கள் யாவும், மரணத்தை தொட்டுவந்த
யாவருக்கும் நிகழ்ந்த அனுபவங்கள் என்ற அடிப்படையில் நாம் ஆராய்கிறோம். மூளை நின்று விட்ட ஒருவருடைய இசிஜி ஒரே நேர் கோடாக இருக்கும் சான்று நம்மிடம் உண்டு. அதோடு அவருடைய தானியங்கு திறனும் சுவாசமும் நின்று விட்டது என்பதால் நம்முடைய மருத்துவ விதியின்படி அவர் இறந்துவிட்டார் என நாம் உறுதியளிக்கிறோம்.

மூளையின் முன்பகுதியில் மிக முக்கிய விஷயங்கள் நடக்கிறது. உடலின் தானியங்கி செயல்கள் யாவும் இங்குதான் கட்டுபடுத்தப்படுகின்றன, ஒழுங்கு படுத்தப்படுகின்றன. குறிப்பாக இதயதுடிப்பும் சுவாசமும் வகைபடுத்தப்படுகின்றன. இந்தப் பகுதி முளைக்குள் தசைகளுக்குள் நன்கு பொதித்து வைக்கப்பட்டு மிகவும் ஜாக்கிரதையாக வைக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக ரத்த அழுத்தத்தையும் ஆக்ஸிஜன் அளவையும் மிகத் துல்லியமாக உணர்ந்து கொள்கிறது. அந்த செய்தியை நேரிடையாகவோ அல்லது செல்களின் மூலமாகவோ பரப்புகிறது. உயிர்துடிப்போடு சுவாசித்துக் கொண்டிருக்கும் உடலில் அவை மெல்லிய எதிரொலி மூலமாக முன்னெச்சரிக்கை
பதிவு இடங்களை வைத்திருக்கிறது. இந்த பகுதிகள் தானாகவே இயங்கும் நரம்பு
மண்டலத்தின் செயல்பாடுகளின் தகவல்கள் மூலமாக தொடர்பு கொண்டிருக்கின்றன.

தானாகவே இயங்கும் நரம்பு மண்டலத்தில் மாற்றங்கள்

நாம் பார்த்த இந்த தானியங்கி நரம்பு மண்டலம் இந்த நேரத்தில் தனது மற்ற செயல்பாடுகளை நிறுத்திவிட்டு இறப்பின் அனுபவங்களை
உள்வாங்கும் விதமாக தன்னை மாற்றிக் கொள்கிறது. திபெத்தியன் பார்டோ செயல்முறையில் குறிப்பிடப்பட்டுள்ள தளம் மாறி உணரும் அனுபவங்கள், ஒளிவெள்ளத்தை உணரும் அனுபவங்கள், வேறுவிதமான காட்சிகளை காணும் பார்வை என இது மாறுபடுகிறது.     

தானியங்கி மண்டலம் உடனதிர்வு மற்றும் எதிர்வினை நரம்புகளின் சமநிலை வாயிலாக லூகாஸ் செரிலீயஸ் என்ற நரம்பு மையத்தின்  வழியாக செயல்படுகிறது. இந்த லூகாஸ் செரிலீயஸ் என்பது இந்திய யோகா சகஸ்ரஹார் அல்லது சக்திமையத்தின் உடல் தொடர்பாக கருதும் பினைல் சுரப்பிக்கு அருகில் அமைந்திருக்கிறது. இந்த சக்தி மையம் மற்றும் பிட்யூட்டரி சுரப்பியோடு தொடர்பு கொண்ட மூன்றாவது கண்
ஆகிய மையங்களின் வழியாகவே பலவித யோக தியான வழிகளும் கூறும் உடலைக் கடந்து தன்னுணர்வு விரிவடைவது நிகழ்கிறது.

கவனித்துப் பார்த்து ஊகித்தால் உடலின் பல பாகங்களிலும், உயர்நிலை சக்தி மையங்களிலும் உடல்கூறு சம்பந்தப்பட்ட சுரப்பிகளும் பின்னி பிணைந்து இருப்பதை தெளிவாகவும் நுட்பமாகவும் அறிய முடிகிறது. மேலும் குறிப்பிடத்தக்க
நுணுக்கமான தியான யுக்திகள் சமயத்திலும் மரணத்தருவாயிலும் ஒரே மாதிரியான கடந்து
செல்லும் அனுபவங்கள் நிகழ்வது அறியப் படுகிறது. இந்த சக்தி மையங்களிலிருந்தே தானியங்கு நரம்பு மண்டலமானது, எதிர்வினை மற்றும் உடனதிர்வு நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தி செயல்படுகிறது.

இந்த பாதுகாப்பு அமைப்பில் உடனதிர்வு நரம்பு மண்டலம்தான் எப்போதும் விழிப்புடன் இருக்கிறது. இந்த உடல் ஏதாவது அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது உடனடியாக அது செயலில் இறங்குகிறது. உடலின் மார்பு பகுதியை ஆதாரமாக
கொண்டு இது ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ரத்த ஆக்ஸிஜன், சுவாசம், மற்றும்
இதயத்துடிப்பு ஆகிய அனைத்தையும் கவனித்துக் கொள்கிறது. எதிர்வினை நரம்பு மண்டலம்
உடலின் மத்திய பகுதியில் இருந்து கொண்டு ஒரே சமயத்தில் கீழ் மற்றும் உயர்நிலை
சக்தி மையங்களை சுற்றியுள்ளவைகளுக்கு ஆதாரமாக விளங்குகிறது.  மேலும் எப்போதும் துடிப்புடன் இருக்கும் உடனதிர் நரம்பு மண்டலத்திற்க்கு எதிராக அதை சமநிலை படுத்தும் விதமாக தளர்வை கொடுக்கிறது. அது ஒருவிதமான மெழுகை ரத்த ஓட்டத்தில் கலந்து அதன் ஓட்டத்தை குறைக்கிறது. மரணதருவாயில் உடலின் அனைத்து இயக்கங்களும் நின்றுபோய் இறக்கும் சமயத்தில் இந்த இரண்டு மண்டலங்களுக்குள் உள்ள தொடர்பு அறுந்துபோய் விடுகிறது. பலனாக இறப்பு நிகழ்கிறது.

மரணத்தருவாயில் பீடாஎன்டோர்பின்ஸ் மற்றும் நியூரோபெப்டைட்ஸ் ஆகியவை வெளிப்படுவதை உடல்மனம் உணருகிறது. இந்த உள்ளார்ந்த அனுபவம்
மிகவும் ஆழமான தளர்வை உடல் முழுவதற்கும் தருவதால் வெளிஉலக கவனம் முற்றிலுமாக மறைந்துவிடுகிறது. சாதாரண தன்னுணர்வு நிலையிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது. இது, மிக ஆழ்ந்த தூக்கம், 4ம் நிலை அனேஸ்தீசியா, இறப்பு அல்லது குறிப்பிடத்தக்க ஆழமான சிந்தனை நிலை போன்ற நிலைமாற்றம் தரும் தன்னுணர்வு பரிமாணங்களுக்கு ஒப்பானது.

மரணத்தின் அருகாமை அனுபவம், ஆழமான தியான நிலை,
தன்னை இழந்து உள் அமைதியில் இருத்தல் ஆகியவை மரணம் நெருங்கும் போதும் நடக்கின்றன. அப்போது பரவசமும், தெளிவும் வந்து சேர்கின்றன. ஆகவேதான் ஓஷோ இறப்பை வாழ்வின் உச்சக்கட்டம் எனறழைத்தார்.