ஓஷோ சர்க்கிள் ஸ்கூல்

இத்தாலியில் உள்ள ரிமிணியின் அருகில் உள்ள ஓஷோ மையத்திற்கு தான் சென்றதைப் பற்றி சர்ஜனோ கூறுகிறார்.

நான் ஏழு வருடங்களுக்கு முன்னால் இந்திய நாட்டு விசாவுக்காக ரோமில்
காத்திருந்தேன். அப்போதுதான் முதன்முதலாக அந்த மையத்திற்கு சென்றேன். தலைநகரில் காத்திருந்து மிகவும் வெறுத்துப் போன நிலையில் நான் எனது நண்பர்களிடம் அருகில் ஏதாவது ஓஷோ மையம் இருந்தால் சொல்லுங்கள். அங்கே சென்று சிலநாள் தங்கலாம் என்று கேட்டேன்.

என்னுடைய நண்பர்கள் அனைவரும் ஓஷோ சர்க்கிள் ஸ்கூல் என்றழைக்கப்படுகின்ற இடத்தைப் பற்றி குறிப்பிட்டனர். ஏனெனில் அது ஒரு மிகவும் நட்பான சூழல் மற்றும் அங்கே நடவடிக்கைகளும்
மிக நன்றாக இருக்கிறது என்று குறிப்பிட்டனர். அவர்கள் ரோமிலிருந்து ரிமிணிக்கு
ரயிலில் சென்று விட்டால் மையத்திலிருந்து கார் வந்து பிக்கப் செய்து கொள்ளும்
என்று கூறினார்கள்.

அது போலவே செய்தபோது நான் ரயிலில் இருந்து இறங்கும் போதே கார் டிரைவர் வந்து எனக்காக காத்திருந்தார். நான் காரில் ஏறிக் கொண்டபின் ஒரு மணி நேரம் பயணம் செய்தபின் ஒரு அழகான மலைப்பாதையில் கார் செல்ல தொடங்கியது. திரும்பவும் ஒரு மணி நேரம் பயணம் செய்தபின் 800 மீட்டர் கடல்மட்டத்திற்கு மேல் உள்ள ஒரு அழகான இயற்கை சூழலில் உள்ள இடத்தை சென்றடைந்தோம்.

அங்கே உள்ள ஒவ்வொருவரும் வந்து வரவேற்றனர், ஆனால் எனக்கு தங்க இடம்
காண்பிப்பதற்க்கு பதிலாக அவர்கள் அவசரமாக என்னை கிச்சனுக்குள் தள்ளிக் கொண்டு சென்றனர். அப்போது மணி காலை 11. அவர்கள் கம்யூன் எல்லோருக்கும் மொத்தமாக சமையல் செய்யச் சொல்லி கெஞ்சினார்கள்.

எனக்கு மிகவும் சோர்வாகவும் இருந்தது, எனக்கு ஓய்வு தேவை. எனவே
யாராயிருந்தாலும் முடியாது என்று சொல்லத்தான் தோன்றியது. ஆனால் என்னை சமைக்கச் சொல்லிக் கேட்டவரிடம் என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக கிச்சனுக்குள் ஒரு அனுபவசாலியான ஆள் ஒருவர் இருந்தார். அவர் அங்கேயே பாஸ்தா செய்து
வைத்திருந்தார், அதை நான் என்னுடைய ஸ்பெஷல் ராவேலியாக செய்ய கீரையையும் ரீகோட்டாவையையும் அதில் நிரப்ப வேண்டும்.

அதற்காக சிலர் கீரையை சமையல் செய்யவும் சிலர் ரீகோட்டாவையும் தயார் செய்தனர். பலர் உதவி செய்யவும் அதில் எல்லாவற்றையும் வைத்து ரோல் செய்து கட் செய்து ஒட்டி முள் கரண்டியால் சாப்பிடும் வகையில் ரெடி செய்து விட்டேன்.

ஒரு மணி நேரத்திற்க்குள்ளாக என்னுடைய தனித்துவமான உணவுவகையை தயார் செய்து விட்டேன். கம்யூனில் தங்கியிருந்த மக்கள் வந்து ராவேலியை சாப்பிட்டப் போது அவர்களுடைய சந்தோஷமான முகங்களை பார்க்க வேண்டுமே. காண கண் கோடி வேண்டும்.

நான் அங்கு ஒரு சில வாரங்கள் இருந்தேன். ஒவ்வொரு நாளும் மதியமும் இரவும்
உணவும் தயார் செய்தேன். அதன் விளைவாக நான் கிளம்பும் போது அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர். உனக்குப்பின்னால் மிக அழகான நினைவுகளை விட்டு விட்டு செல்லலாம் என்ற விஷயத்தில்தான் எனக்கு சமையல் மிகவும் பிடிக்கும்.

ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. என்னுடைய குடும்பம் புது வருட கொண்டாட்டத்திற்கு ஓஷோ சர்க்கிள் மையத்தில் என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட ஏற்பாடு செய்தது. மெனு ஏற்கனவே முடிவு செய்து விட்டிருந்தபடியால் என்னுடைய சமையல் அங்கே அரங்கேறவில்லை. ஆனால் அவர்கள் மிகச் சிறந்த உணவுவகைகளை தயார் செய்தனர். எனவே
நானும் யாரோ சமைக்க உட்கார்ந்து சாப்பிட்டேன்.

நான் உங்களிடம் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம் என்னவென்றால் அங்கே சுற்றிலும் பனிபனிபனி தவிர வேறொன்றுமில்லை, ஆனால் அதுவே மிகச் சிறந்த மாயாஜால உலகை படைத்து தந்தது. அதை சொல்ல வார்த்தைகளேயில்லை.

ஒவ்வொரு நாளும் டைனமிக் தியானத்துடன் துவங்கும், நானும் என்னுடைய நினைவுகளை புதுப்பித்துக் கொள்ள அதை செய்தேன். ஏனெனில் நான் இருபது வருடங்களாக அதை செய்யவில்லை. டைனமிக் ஒரு சிறந்த சிறப்பான நாளை துவக்க மிகச் சரியான முறையாகும். அது உன்னை நாள்முழுவதும் புத்துணர்வுடன் வைத்திருக்கும். நாள் முழுவதும் அங்கு செய்துவந்த
எல்லா தியானங்களையும் செய்த பின் நான் என்னுடைய தியானத்தை செய்ய உத்தேசித்தேன். அது குணப்படுத்தும் சக்திகளைப் பற்றி ஓஷோ பேசுவதைக் கேட்டபோது எனக்கு உதித்து நான் உருவாக்கிய கட்டியணைத்தல் யுக்தியாகும்.

நான் அதை கட்டியணைத்தல் தியானம் என்றழைத்தேன். அது நான் பூனாவில் இருந்த நாட்களில் மிகவும் பிரபலமாக இருந்தது. அதை நான் இப்போது இத்தாலியிலும் பிரபலமாக்கிவிட்டேன். ஓஷோ come follow me
vol   4  ல் சொல்லும் போது, நேசத்திற்க்கு குணப்படுத்தும் சக்தி
உள்ளது. அன்பு என்பது மிச்சிறந்த நோய்நீக்கும் மருந்தாகும். இந்த உலகிற்கு
நோய்நீக்க மருத்துவர்கள் மிகவும் தேவைப்படுகிறார்கள். ஏனெனில் இந்த உலகில் நேசம் மிகவும் குறைவாக உள்ளது. மனிதர்கள் நேசிக்க ஆரம்பித்தால் பெற்றோர்கள் அன்பாக இருக்க ஆரம்பித்தால் ஆசிரியர்களும் குருமார்களும் அன்பாக இருந்தால் இந்த சமுதாயம் தன்னைச் சுற்றி அன்பான சூழலை உருவாக்கினால் பின்பு இந்த நோய்நீக்கும் துறைக்கோ,
நோய்நீக்கும் மருத்துவர்களுக்கோ தேவையே இருக்காது. என்று கூறுகிறார்.

அடுத்த கோடையில் இந்த கம்யூனில் சில மாதங்கள் தங்கி இருக்கலாம் என்று
உண்மையாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் இத்தாலி வந்தால் இங்கு வந்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதி கூறுகிறேன். நீங்கள் இதை மறக்கவே மாட்டீர்கள்.

இந்த கம்யூன் 2000 த்தில் ஜீவன் அர்ஷாட் அவர்களால் உருவாக்கப்பட்டது.
வராந்தாவில் உட்கார்ந்து பனி விழுவதைப் பார்த்துக் கொண்டு இந்த கம்யூனைப் பற்றி, இந்த இடத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

அர்ஷாட், இந்த கம்யூன் அன்பின் வெளிப்பாடு அவ்வளவே. ஆடலோடு, பாடலோடு, கொண்டாட்டமாக, உண்மையாக வாழும் முறை மீது விருப்பம் கொண்ட சில நண்பர்கள் சேர்ந்து 15 வருடங்களுக்கு முன் இதை உருவாக்கினோம். இது ஒரு புத்தமண்டலம். இயற்கையுடன் ஒரு ஆழமான இணைப்புணர்வுடன், இந்த அன்னைபூமிக்கு ஒரு ஆழ்ந்த மரியாதையுடன் இருப்பதன்
மூலம் லயத்துடன், அழகாக வாழ்வை வாழ்ந்து ஒவ்வொருவரும் நிலைமாற்றம் அடைய உதவி செய்யும் தலம் இது.

இங்கே நீங்கள் எந்த முகமூடியும் இல்லாமல் மற்றவர்களை சந்திக்கலாம், இங்கே
முழுமையாக நீங்கள் நீங்களாகவே இருக்கலாம், எந்த விதமான மதிப்பீடும் இல்லாமல் திறந்திருப்பவர்களாக இருக்கலாம். அது போல நீங்கள் இருப்பதற்க்கு வசதியான இடம் இது. இங்கே இந்த இயற்கை காட்சிகள் நிறைந்த இந்த இடத்தில் பழங்கால கோட்டைகளும் பழைமையான வீடுகளும் கூடிய இந்த மலைஉச்சியில் இந்த கம்யூனை உருவாக்கினோம்.

இது தினமும் ஓஷோ தியானங்களும் அகநல சிகிச்சை முறைகளும் நடக்கும் ஒரு ஓஷோ தியான மையம் ஆகும். இது ஒரு உள்ளார்ந்த தேடுதலுக்குரிய, மனித இருப்பின் நிலைமாற்றத்திற்க்கான ஒரு பரிசோதனை கூடமும் ஆகும். இங்கே நாங்கள் பார்ட்டி, நிகழ்ச்சிகள், நிகழ்வுகள், கலைபொருட்காட்சிகள், இசைநிகழ்ச்சிகள், மற்றும் ஓய்வு மேலும் தன்னைத்தானே அக்கறை கொள்ளும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்துகிறோம்.

இந்த ஓஷோ சர்க்கிள் ஸ்கூல் நான் என்பதை மாற்றமடையச் செய்யும் ஒரு இடமாக பிறந்திருக்கிறது. நான் என்பதிலிருந்து நகர்ந்து நாம் என்றாகி, மற்றவர்களோடு நம்மை இணைத்துக் கொண்டு, பின் இயற்கையோடு நாமும் கரைந்துபோகும் இடமாக உள்ளது. இது ஒரு உண்மையான உள்முக தேடுதலின் எல்லா நிறங்களையும் கொண்ட ஒரு வானவில்லாக உருவாகி
இருக்கிறது.

அவருடைய இந்த அற்புதமான வார்த்தைகளை கேட்டபின் நான் என்ன சொல்ல இருக்கிறது. நீங்களே வந்து பாருங்கள். நானும் அங்கே உங்களுக்காக இருப்பேன், உங்களுக்காக சமையல் செய்வேன்….. நான் சொல்ல இன்னும் என்ன இருக்கிறது…. ஏதுமில்லை. I LOVE YOU. நான் உங்களை நேசிக்கிறேன்.