சில வருடங்களுக்கு முன் மும்பையில் ஓஷோ நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து
சன்னியாஸ் பற்றிய பேசிய ஒரு குறிப்பும் அவரது   ஒரு புகைப்படமும்  ஓஷோ சன்னியாசிகளிடையே மிகவும் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் மூலம் பலர் புதிதாக சன்னியாஸ் பெற்றனர்.
ஆஸ்திரேலியாவிலிருந்து சகிடோ எழுதுகிறார்,

 

கடந்த ஜூன் மாதம் நான் சுடப்பா-வை சந்தித்த போது – ஒருநாள் ஓஷோ முகாமில் –
கலந்து கொள்ளுமாறு கூறினேன். அவள் பல வருடங்களாக தான் ஓஷோ புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பதாகவும் ஆனால் இதுவரை ஓஷோ சன்னியாசி யாருடனும் தொடர்பு இல்லையென்றும் இதுவரை எந்த ஓஷோ தியானமும் செய்ததில்லையென்றும் கூறினாள்.

விஸ்டர் அமைப்பு வாரத்திற்க்கு ஒரு முறை என ஏற்பாடு செய்திருந்த
டைனமிக் தியானத்திற்கு சென்றாள் அவள். அது அவளை மிகவும் பாதித்து விட்டது.
அவளுக்கு மிகவும் உடல்வலி ஏற்பட்டு அதனால் ஆபிஸூக்கு இரு நாள் விடுப்பு எடுக்க
வேண்டி வந்தது. அதன்பின் அவள் என்னை கூப்பிட்டு அவளுக்கு என்ன நடந்தது எனக்
கேட்டாள்.

விஸ்டர் அமைப்பு டைனமிக் தியானத்திற்க்கு ஏற்பாடு செய்திருந்த இடம்
அவள் இருந்த இடத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவு இருந்தது. அங்கு இந்திய ஆண்கள்
வந்து தியானம் செய்வர். நான் அவர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் மிகவும்
அருமையானவர்கள். அங்கு கலந்து கொள்வதற்கு 1 அல்லது 2 பெண்களே வருவார்கள். அந்த
வகையில் நான் இவளை மிகவும் தைரியசாலியான பெண் என்றே கூறுவேன். இவளிடம் பேசி நான் அவளை குண்டலினி தியானம் செய்ய சொல்லி அதற்கான CD யையும் அனுப்பி
வைத்தேன். அதிலிருந்து இப்போது வரை அவள் குண்டலினி தியானம் செய்து வருகிறாள்.

நான் இதுவரை அவளை ஒருமுறைதான் பார்த்திருக்கிறேன் என்றாலும் அப்போதே
அது இதயப்பூர்வமான சந்திப்பாக இருந்தது. முதல் தடவையிலேயே அவள் ஓஷோவின் சன்னியாசி என்பதை கண்டு கொண்டேன்.

அழள் சன்னியாஸ் பெற்றது எவ்வாறு என கீழே படுக்கப்போகும் இ-மெயில் பரிமாற்றங்களில் புரிந்து கொள்வீர்கள்.

இப்படிப்பட்ட ஒரு குரு கிடைக்க நாம் எப்படிப்பட்ட தவம் செய்திருக்க வேண்டும், அவர் தொடர்ந்து நம்மை அழைத்துக் கொண்டேயிருக்கிறார். நான் இன்னும் அவரைப் பற்றியும் அவருடன் தொடர்ந்து பயணம் செய்வது பற்றியும் அவருடன் இருக்கும் தொடர்பு பற்றியும் வியப்படைந்து கொண்டேயிருக்கிறேன்.

நான் ஏற்றுக் கொண்டிருக்கும் வேலையை நான் முழுமையாக செய்வதில்லை
என்ற எண்ணம் சில சமயம் எனக்கு வந்தாலும்கூட அவர் தொடர்ந்து இன்னும் என்னை
உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதே என் வாழ்வின் மிக கடினமான சமயங்களில்
என்னுடன் வரும் பாராட்டும் பரிசுமாகும்.

அன்பும் அணைப்பும் சகிடோவிடமிருந்து

சன்னியாஸ் பெற்றுக் கொள்ள சுடப்பாவை அழைத்துச் சென்ற இ-மெயில் தகவல்
பதில்கள்

1.

அனுப்புநர் – சுடப்பா

அனுப்புதல் – 2012 ஆகஸ்ட் 11 சனிக்கிழமை

பொருள் – ஓஷோவின் அன்பும் கருணையும்

அன்பான மா சகிடோ,

உங்களுடைய ஓஷோ நண்பர்கள் பட்டியலில் என்னையும் சேர்த்துள்ளமைக்கு
மிகவும் நன்றி. சாஜல் கூட நீங்கள் உரையாடியதை படிக்கும் போது அது என் இதயத்தைத்
தொட்டது.

நான் ஒரு ஓஷோ சன்னியாசி அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால்
ஒரு சன்னியாசியாக அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது என்னுடைய தவிப்பாக இருந்து வருகிறது. ஜூலை மாதம் 19 ந் தேதி செவ்வாய்கிழமை விடியற்காலையில் நான் ஓஷோவை கனவில் கண்டேன். நான் உங்களை ஜூன் மாதம் 16 ந் தேதி சனிக்கிழமை சிட்னியில் சந்தித்தேன். அதிலிருந்து கிட்டத்தட்ட தினமும் மாலையில் குண்டலினி தியானம் செய்து வருகிறேன்.

என்னுடைய கனவில் ஓஷோ ஒரு அறையில் அமர்ந்திருக்கிறார். அது ஒரு
இந்தியன் அபார்ட்மெண்ட் போல இருந்தது. அது வெறுமனே காலியாக இருந்தது, அதில்
நாற்காலி, மேஜை போன்ற எதுவும் இல்லை. ஒரு மெத்தை மட்டும் போடப்பட்டு அதில் ஒரு
விரிப்பு போடப்பட்டிருந்தது. அது ஒரு பெரிய ஹால். அவர் அமைதியாக
அமர்ந்திருக்கிறார், நீங்கள் எனக்கு அனுப்பிய போட்டோவில் இருந்தது போலவே இளமையாக
இருக்கிறார். நான் இந்தியாவில் இருக்கும் என் அக்காவுடன் பக்கத்து அறையில்
இருக்கிறேன். அவர் வந்து அமர்ந்தவுடன் நான் சென்று அவர் அருகில் தரையில்
அமர்கிறேன். அவரிடமிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. நான் அவரைப் பார்த்து
சொல்கிறேன், நான் உங்கள் புத்தகங்களை நேசிப்பது உங்களுக்குத் தெரியுமல்லவா.
அதற்கும் பதிலில்லை. நான் எனது வலது கையால் எனது முகத்தை மூடிக் கொண்டு குனிந்த
வாக்கில் ஒரு குழந்தை போல அழுகிறேன். அப்போது எனது இடது கன்னத்தை ஓஷோ தொடுகிறார், மிக மிருதுவாக தொடுதல்.

அந்த தொடுதல் எப்படி இருந்தது என்று விவரிக்கத் தெரியவில்லை. நான் என்
கைகளை என் முகத்திலிருந்து எடுத்துவிட்டு அவர் கண்களை பார்க்கிறேன். அவரும் என்னையே ஊடுருவிப் பார்க்கிறார். நான் காலத்தை மறந்துவிட்டேன். – நான் என் கனவில் எனக்கு என்ன வயதிருக்கும் என்று பின்னர் நினைத்துப் பார்த்தேன், ஆனால் என்னால் கண்டு
பிடிக்க முடியவில்லை – நான் ஓஷோவைப் பார்த்து, எனக்கு எப்போது சன்னியாஸ் கொடுக்கப்
போகிறீர்கள் என்று கேட்கிறேன்.

நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டேயிருந்தோம். மிகவும்
அமைதியான தருணம்…… என்னுடைய கண்ணீர் நின்றுவிட்டிருந்தது….. ஓஷோ ஒரே ஒரு
வார்த்தை சொல்கிறார்…… இப்போது………அவருடைய அமைதியான
கண்களால் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் அவரிடம் இப்போதா என்று
கேட்கிறேன். என்னுடைய இப்போதா என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது. அது அவருடைய
கண்ணாடி போன்ற தன்னுணர்வில் பிரதிபலிக்கிறது. என்னுடைய மனம் – மாலை அங்கி போன்றவை இப்போது இங்கில்லையே என்று எண்ணியது. மாலை அங்கி போன்றவை இல்லாமல் சன்னியாஸ் ஆவது எப்படி என்று நான் நினைத்தேன். அதனால்தான் இப்போதா என்று கேள்வி எனக்கு எழுந்தது.
ஆனால் அவருடைய தூய்மையான இப்போது என்பதை என்னுடைய மனதின் இப்போதா என்பது சந்தித்தது. இரண்டும் ஒரே வார்த்தைதான். ஆனால் இரண்டும் வேறு வேறு. இப்போது இல்லை என்று தோன்றியது.

பின் அந்த அறையின் மற்றொரு பகுதியில் நான் இருப்பதை பார்த்தேன்.
இந்தியாவில் இருக்கும் என் தாய் அறையில் காலை வெளிச்சம் போதவில்லையென
மெழுகுவர்த்தியை கொண்டு வருகிறார். ஓஷோ அப்போதும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்,
அவரது கையில் ஒரு பழங்கால சுவடி போன்ற ஏதோ ஒரு புத்தகத்தை வைத்திருக்கிறார். அது
ஏதோ வேதநூல் போன்று இருக்கிறது. அவர் அதன் மீது வெளிச்சத்தை காட்டும்படி
கூறுகிறார். நான்  லைட் சுவிட்சை போடுகிறேன். என் தாய் அவருக்கு அருகில் அமர்ந்து கொள்கிறாள். ஓஷோ அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் அது என்னவென்று என்னால் இப்போது நினைவு கூற முடியவில்லை. பின் நான் கண்களை திறந்து பார்க்கிறேன், மணி என்னவென்று பார்த்தால் விடியற்காலை 4.30 மணி.

சில நாட்களுக்குப் பிறகு நான் கடற்கரையில் உலாவ சென்றிருந்தேன். அது
வெயில் கால காலை. கடற்கரைக்கு போகும் வழியில் ஒரு இடத்தில் மரங்களடர்ந்த பகுதி
ஒன்றிருக்கும். நான் அந்த இடத்தில் நுழையும்போது அந்த கனவைப் பற்றியும் என் இடது
கன்னத்தில் ஓஷோவின் அந்த தொடுதலைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தேன். எப்படி
ஒரு மனிதனால் அவ்வளவு மென்மையாக தொடமுடியும் என்று வியந்து கொண்டிருந்தேன். அப்போது அவர் தொட்ட அதே இடது கன்னத்தில் அதே இடத்தில் ஒரு கதகதப்பான தொடுதலை உணர்ந்தேன்.
நான் நின்றுவிட்டேன். இதே போல கதகதப்பாகவும்
மென்மையாகவும் இருந்தது என்று உணர்ந்தவாறே இடதுபுறம் திரும்பி பார்த்தேன்.
மரங்களின் வழியே வந்த சூரிய ஒளி என் இடது கன்னத்தை மிருதுவாக தொட்டுக்
கொண்டிருந்தது. எனக்கு கண்ணீர் பெருகி வந்தது. ஒவ்வொரு வினாடியும் ஒளியிடம்
இருந்து நமக்கு கிடைக்கும் அளப்பறிய அன்பை உணர்ந்ததும், அதை ஏதோ நமக்கு கிடைக்க
வேண்டிய ஒன்று என்று உரிமை எடுத்துக் கொண்டு அதை உணராமல் இருப்பதை நினைத்தும்
அழுதேன்.

உங்களுடைய இ- மெயில் கிடைத்ததும் அதில் இருந்த ஓஷோவின் போட்டோவைப்
போலவே என்னுடைய கனவில் வந்த ஓஷோவின் உருவமும் இருந்ததை பார்த்தவுடன் அந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.

அன்பு,  சுடப்பா

 

 2.

பெறுநர் – சுடப்பா

தேதி – சனிக்கிழமை, ஆகஸ்ட் 11, 2012

பொருள் – ஓஷோவின் அன்பும் கருணையும்

அன்பு சுடப்பா,

ஓஷோ அந்த கனவில் உனக்கு சன்னியாஸ் தந்துவிட்டார். அவர் இதுபோலத்தான்
எப்போதும் செய்வார். உண்மையில் இது போன்ற வழிகள் நமது சிறிய மனதிற்கு
அப்பாற்ப்பட்ட விஷயங்கள். உனக்கு தேவை இப்போது உன்னுடைய சன்னியாஸை வெளிப்படையாக ஆக்க வேண்டும் என்பதை சொல்வதில் எனக்கு எந்த விதமான தயக்கமும் இல்லை. நம்முடைய சந்திப்பின் போது எப்படி நாம் உடனடியாக இணைந்துகொண்டோம் என்பது உனக்கு தெரிந்திருக்கும். நீ அவருடன் இணைந்தவள், அவருடைய அன்பர்களில் ஒருத்தி என்பதைப் பற்றி எந்த சந்தேகமும் தேவையில்லை. உன்னுடைய இ – மெயிலைப் படித்த போது நான் அவருடைய இருப்பை உணர்ந்தேன். உனக்கு உடனடியாக ஒரு சன்னியாஸ் மாலை அனுப்பி வைக்க விரும்புகிறேன். அவர் நம்மிடம் செயல்படும் விதம் நம்முடைய புரிதலுக்கு அப்பாற்ப்பட்டது.
நான் இந்த கணத்தில் வார்த்தையிழந்து நிற்கிறேன்.

மேலும் அதிக அன்பும் அணைப்பும்,
சகிடோ

3.

பெறுநர் – சகிடோ

தேதி – சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2012 மாலை 7.18

பொருள் – ஓஷோவின் அன்பும் கருணையும்

அன்பு சகிடோ

நான் என்னுடைய இந்த கனவை சிட்னியில் இருக்கும் என்னுடைய நண்பி
தேவ்ஜனனியுடன் முதல் தடவையாக பகிர்ந்து கொண்டேன். அவள் கிரியா யோகாவைச் சேர்ந்த சுவாமி ஹரிஹரானந்தாவின் சிஷ்யை. அவளுக்கும் ஓஷோவின் புத்தகங்கள் மிகவும்
பிடிக்கும். என்னுடைய கனவைக் கேட்டபின் அவள் ஓஷோ அந்த கனவில் உனக்கு சன்னியாஸ் கொடுத்துவிட்டார் என்று கூறினாள். பின் அவள் அவளுடைய இன்னொரு பிரெண்டின் கதையை பகிர்ந்து கொண்டாள். அந்த பெண்ணின் குரு அவளுக்கு இதோபோல கனவில் சன்னியாஸ் கொடுத்திருக்கிறார். பின்னொரு நாள் அந்த குருவை அவள் நேரில் சந்தித்து போது அந்த குரு தானே இந்த இரவில் நான் உனக்கு ஏற்கனவே சன்னியாஸ் கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவளுடைய குரு அதை நேரில் உறுதிபடுத்தியிருக்கிறார் என்று நான் நினைத்தேன்.

இதை நீங்களும் என்னுடைய உண்மையான சன்னியாஸ் என்று ஏற்றுக்
கொள்ளும்போது எனக்கு உள்ளே மிகவும் திருப்திகரமாக உணர்கிறேன்.

எனக்கு மாலை கொடுப்பதற்காக மிகவும் நன்றி. தற்செயலாகவோ என்னவோ, நான்
எப்போதும் அணிந்து கொண்டிருக்கும் தங்க செயினை போன வாரத்தில் எங்கேயோ
தொலைத்துவிட்டேன். ஓஷோ குண்டலினி தியானம் செய்யும்போது கடைசி கட்டத்தில் படுக்கும் இடத்தில் இருந்ததாக என் கணவர் எடுத்து வந்து கொடுத்தார். இருப்பினும் நான் அதை இனிமேல் அணியப் போவதில்லை, இப்போது எனது காலி கழுத்து உங்களிடம் இருந்து
வரப்போகும் சன்னியாஸ் மாலைக்காக காத்து இருக்கிறது.

அன்பு சுடப்பா.