அன்பு ஒவ்வொன்றையும் புனிதமானதாக மாற்றி
விடுகிறது. அலட்சியம் எல்லாவற்றையும் அசிங்கமாக மாற்றி விடுகிறது.

 

பதட்டமில்லாத மனிதன் இந்த உலகிற்கே ஒரு வரம்.
அவனது இருப்பு இந்த உலகிற்கு ஒரு அழகை கொடுக்கிறது. பதட்டம் மிகுந்த மனிதன் ஒரு
சாபம்.

 

பிடிப்பு உன்னை துயரம் கொள்ள வைக்கிறது.
பிடிப்பு நேசம் அனைத்தையும் விஷமாக்கி அதை கெடுத்து விடுகிறது.

 

நிறைவடைதல் ஒரு திறவுகோல் போன்றது. இது
சொர்க்கத்தின் வாசலை திறக்கிறது. சொர்க்கம் என்பது எங்கோ இருப்பதல்ல, அது இங்கே
இருப்பது.

 

சின்னஞ்சிறு விஷயங்களைக் கூட நீ உன்னுடைய
விழிப்புணர்வு, கவனம், ஜாக்கிரதை ஆகியவற்றின் மூலம் மிக அழகானதாக மாற்றி விடலாம்.
அப்போது சாதாரண விஷயங்கள் கூட அசாதாரணமாக மாறி விடக் கூடும்.

 

வெளி பயணத்திற்கு சந்தேகத்தை பயன்படுத்த
வேண்டும், உள் யாத்திரைக்கு நம்பிக்கையுணர்வு பயன்படும். ஒருவர் இரண்டையும்
பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.  

மூலம் – மே 2015 – ஓஷோ ஒர்ல்ட்