வாழ்வை மகிழ்வாக எடுத்துக்கொள், எளிதாக எடுத்துக்கொள், தளர்வானதாக எடுத்துக்கொள், தேவையில்லாத பிரச்னைகள் எதையும் செய்து
கொள்ளாதே.
இந்த கணத்திற்கு பொற்றுப்புள்ளவனாக
இருப்பதற்க்கு மிகவும் விழிப்புணர்வு தேவை.
உனது உள்மையத்தை அடைய வெறிகொண்டவனாய்
தேடாதே. அதை அப்படி சென்றடைய முடியாது.
உனக்கு நேசம் கிடைக்காத போது மட்டுமே, நீ
நேசிக்காத போது மட்டுமே பொறாமை அங்கிருக்க முடியும்.
தியானம் என்பது மனதிற்கு எதிரான ஒரு முயற்சி
அல்ல, மாறாக மனதை புரிந்து கொள்ளும் ஒரு வழியே தியானம்.
எப்போதெல்லாம் நீ பழைய பழக்க வழக்கங்களில் விழுந்து விடுகிறாயோ அப்போதெல்லாம் உன்னுடைய இருப்பிற்கு ஒரு குலுக்கல் கொடு,
அதிலிருந்து உள்ளை வெளியே இழு, அது அர்த்தமற்றது என்பதை திரும்ப நினைவுக்கு கொண்டு வா.
நீ லட்சியம், ஆவல், பொறுமையற்ற தன்மை ஆகியவற்றை
தியானத்தினுள் கொண்டு வந்தால் நீ அதை முழுமையாக சிதைத்துவிடுகிறாய்.
உன்னுடைய உடல் நடப்பதை, உடல் உட்காருவதை, உடல்
தூங்கப்போவதை, உடல் சாப்பிடுவதை கவனித்துக் கொண்டிரு, வெறுமனே பார்த்துக்
கொண்டிரு. விழிப்போடு இரு, எவ்வளவு கவனமாக இருக்க முடியுமோ அவ்வளவு கவனமாக இரு.
விருப்பம் உள்ளே வரும்போது படைப்பு மறைந்து விடுகிறது.