நீ விழிப்புணர்வை, சாட்சிபாவத்தை தொடர்ந்து
சென்றால் உன் உள்லயத்தை சென்றடைவாய்.

 

இயற்கையை எதிர்த்து வெற்றி என்பது ஏதுமில்லை.

 

மனம் அனுபவப்பட முடியாது, இதயம் மட்டுமே
அனுபவப்பட முடியும்.

 

உண்மையை தேட வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும்.
ஆனால் நம்பிக்கைக்கு எதுவும் தேவையில்லை, நீ வெறுமனே நம்பலாம்.

 

சாட்சிபாவம்தான் தியானத்தின் மொத்த

 

மனிதனிடம் தியானமில்லை என்றால் அவனிடம் ஒளி
இருக்காது. அவன் இருளாகவே இருப்பான்.

 

அன்பும் மௌனமும் இசைந்த வாழ்க்கை உண்மையிலேயே
மிகவும் வளமான வாழ்வாக இருக்கும்.

 

முதலில் உன்னை நேசி, பின் நேசத்தை அதிர்வலையாக
உன்னிடமிருந்து பரப்பு. இந்த பிரபஞ்சம் முழுமையும் சென்றடையும் வண்ணம் அதை பரப்பு.

 

தான் சிறந்த மனிதன் என்று யாருக்கும் நிரூபிக்க
ஆசைப்படாத மனிதன் எவனோ அவனே உண்மையில் சிறந்த மனிதன்.

 

நம்பிக்கையுணர்வினால் மட்டுமே வாழ்க்கை
மலர்கிறது, வாழ்வு ஒரு பிரார்த்தனையாகிறது.

 

முழுமையாக விழிப்புணர்வோடு வாழும் வாழ்க்கை
இறைமை தன்மை கொண்ட வாழ்வாகிறது.

 

தர்க்கத்தின் மூலம் நீ அளவில் சிறிய மனதை
மட்டுமே பெற முடியும், நீ விரிந்து பரவ முடியாது.

 

நட்புணர்வுக்கு எல்லையே இல்லை, அது ஒரு உறவுமுறை
அல்ல. அது உன்னுடைய இயல்பு, குணம், தன்மை

 

யாராவது ஒருவரை பிடித்து வைத்துக் கொள்வது அவரை
நேசிப்பதற்க்கான எல்லா வாய்ப்புகளையும் அழித்துவிடும்.

Source : Osho World Magazine Aug.2015