கடவுள்தன்மையின் கதை
எனக்கு ஓரு அழகான கதை நினைவுக்கு வருகிறது. ஓருவன் பக்கத்து
வீட்டுகாரர்கள் அனைவருக்கும் ஓரே தொந்தரவாக இருந்தான் ஏனெனில் அவன்
தொடர்ந்து கடவுளை எதிர்த்து, சொர்க்கத்தை எதிர்த்து, நரகத்தை எதிர்த்து வாதித்துகொண்டேயிருந்தான்.
அவன் ஓரு நாத்திகன் முழு நாத்திகன். அந்த எல்லைக்கு உட்பட்ட
அரசன் கூட அவனைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் அரசவைக்கு அழைக்கப்பட்டான்.
அரசவையில் இருந்த அறிஞர்களால் கூட அவனை ஓப்புக்கொள்ள வைக்க முடியவில்லை.
உண்மையில் ஓரு நாத்திகனை
ஓப்புக்கொள்ள வைப்பது என்பது கிட்டதட்ட முடியாத
காரியம். நீ என்னைப்போல ஓரு மனிதனைக் கண்டுப்பிடிக்காவிட்டால், நாத்திகன் உன்னுடைய வாதங்கள் அனைத்தையும் அழித்துவிடுவான்.
ஏனெனில் நீ நம்பும் கடவுளைப் பற்றி வாதம் புரிகிறாய். நீ எந்த ஆதாரத்தையும்
காட்டமுடியாது. நீ கண்ணால் பார்த்த சாட்சியை காட்டமுடியாது, நீ ஆதாரபூர்வமான வாதம் எதையும்
கூறமுடியாது. கடவுளைக் குறித்த எல்லா வாதங்களும் நூற்றாண்டுகளாக
நாத்திகர்களால் உடைத்து தூக்கி எறியபட்டே வருகிறது.
அந்த அரசன் மேலும் ஓரே ஓரு வாய்ப்பு கொடு. எனக்கு ஓரு மனிதரை தெரியும்…….அவர் மட்டுமே இந்த விஷயத்தைக் குறித்து ஏதாவது செய்யமுடியும் என்று அந்த நாத்திகனிடம் கேட்டான். அவர் இருக்கும் முகவரியை கொடுத்து நாத்திகனை அரசன் அந்த அடுத்த கிராமத்திற்கு போக சொன்னார். ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள கோவிலில் அவரை நீ காண்பாய். அவருடைய பெயர் ஏக்நாத். அவர் ஓருவர்தான்………..
அவர் உன்னை மாற்றினால்தான் உண்டு இல்லையெனில் உன்னை மாற்றுவது
முடியாத காரியம் என அரசர் கூறினார்.
அதற்கு அந்த நாத்திகன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
இது ஓரு மிகப்பெரிய சவால். எனவே அவன் அந்த கிராமத்திற்கு சென்றான்.
நேரம் கிட்டதட்ட காலை ஓன்பது மணி இருக்கும். இந்த நேரத்தில் அவர் பூஜை மற்றும்
குளியல் இவைகளை முடித்திருக்கவேண்டும் எனவே இதுதான் அங்கு செல்வதற்கு சரியான
நேரம் என கூறிக்கொண்டு அவன் கோவிலுக்கு சென்றான். அங்கு அவனால் அவன் கண்களையே
நம்பமுடியவில்லை, ஏக்நாத் தூங்கிகொண்டிருந்தார் – தூங்கிகொண்டிருப்பது மட்டுமில்லாமல் அவர் தனது கால்களை கடவுளின் சிலைமீது வைத்திருந்தார். அவர் கடவுளின் சிலையை கால்களை வைப்பதற்கு நல்ல இடமாக பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
நாத்திகன் அவன் வாழ்விலேயே
முதல்முறையாக, “கடவுளே நான் கூட கடவுளின் சிலைமீது கால் வைக்கமுடியாது நான் நாத்திகன் கடவுளை நம்புவதில்லை என்றாலும் கூட ஆனால் யாருக்கு தெரியும் முடிவில் கடவுள் இருந்துவிட்டால், எனவே என்னால்கூட இதை செய்ய இயலாது. இந்த மனிதர் ஓரு சந்நியாசி, அதிகாலையில் சூரியன் எழுவதற்கு முன் எழுந்திருக்க வேண்டியவர். இப்போது மணி ஓன்பது, அவர் தூங்கிகொண்டிருக்கிறார். இவர் கடவுளை குறித்து என்னை ஓப்புக்கொள்ள
வைக்கப் போகிறாரா அவர் இன்னும் குளிக்கவில்லை, அவர் இன்னும் வழிபடவில்லை. அவர் வழிபடுவார் என எனக்கு தோன்றவில்லை – அவர் தனது கால்களை கடவுளின் சிலைமீது
வைத்துள்ளார். இந்த மனிதர் ஆபத்தானவர் போல தெரிகிறது” என எண்ணியபடி பயத்துடன் நாத்திகன் கோவிலில் அமர்ந்து அவர் கண்விழிப்பதற்காக காத்திருந்தான்.
அரை மணிநேரம் கழித்து ஏக்நாத் எழுந்தார்
மன்னித்துகொள், தூக்கத்தில் கால்களால் உன்னை தொட்டுவிட்டேன்
என்று கூட கடவுளிடம் அவர் வேண்டவில்லை, அவர் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
நாத்திகன், “நீங்கள் ஓரு சந்நியாசியா? வேதங்களில் சந்நியாசி என்பவன் சூரிய
உதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது அல்லவா?” என கேட்டான்.
ஏக்நாத், ஆமாம் கூறப்பட்டுள்ளது ஆனால் அதற்கான என்னுடைய
புரிதல் என்னவென்றால் – ஓரு சந்நியாசி எழுந்திருக்கும்
பொழுதெல்லாம் சூரியன் உதிக்க வேண்டும். யார் இந்த சூரியன்? அவன் என்னைப் பற்றி கவலைப்படவில்லை என்றால் நான் எதற்காக அவனைப் பற்றி கவலைப்படவேண்டும் எனக் கூறினார்.
ஆச்சரியமாக உள்ளது, ஆனால் நீங்கள் உங்களுடைய காலை கடவுளின் மீது, கடவுளின் தலையில் – என நாத்திகன் கேட்டான். நான் வேறு எங்கு என் காலை வைத்துக்கொள்ளமுடியும் -ஏனெனில் வேதங்கள் கூறுகின்றன கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் நீ நான் காலை எந்த இடத்திலும் வைக்ககூடாது என கூற வருகிறாயா என ஏக்நாத் கேட்டார்.
கோபபடாதீர்கள் ஆனால் உங்கள் வாதம் நியாயமானதாக உள்ளது
கடவுள் எல்லா இடத்திலும் இருப்பாரானால், நீங்கள் எப்போது எந்த இடத்தில்
காலை வைத்தாலும் அது கடவுளின் தலை மீதே உள்ளது என நாத்திகன் கூறினான்.
எனவே என்ன பிரச்சனை? இது என் கால்களுக்கு நன்கு ஓய்வளிக்கிறது.
சில முட்டாள்கள் இதுதான் கடவுள் என நினைக்கிறார்கள். கடவுள் எல்லா இடங்களிலும்
உள்ளார் – எனவே அவர் எவ்வாறு இந்த கல்லில் மனிதனால் உருவாக்கபட்ட இந்த கல்லில்
மட்டும் இருக்கமுடியும் நீ என்னை முட்டாளாக்கமுடியாது, என ஏக்நாத் கூறினார்.
அதிகாலையில் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடுவதற்க்கு என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் நான் வேறொரு கிராமத்திலிருந்து வருகிறேன். என்னை மன்னர் அனுப்பினார் உங்களிடம் என்ன சொல்வது என்று எனக்கு குழப்பமாக உள்ளது. ஏனெனில் நான் ஓரு நாத்திகனாக இருந்தேன்.
ஆனால் இந்த மனிதனோ இதுவரை அவன் பார்த்த மனிதர்களிலேயே பெரிய நாத்திகராக இருக்கிறார்.
மிகவும் நல்லது. நீ நாத்திகனாக இருக்கலாம். அதில் தவறேதும் இல்லை. அதைப் பற்றி கடவுள் பொருட்படுத்துவதில்லை. என்னை நம்பு. இப்போது போய்விடு என ஏக்நாத் கூறினார்.
ஆனால் மன்னர் எனக்கு சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார். நான் கடவுளை
ஓப்புகொள்ள வைக்கப் படுவதற்காக வந்துள்ளேன் என நாத்திகன் கூறினான்.
கடவுளை ஓப்பு கொள்ள வைக்கபடுவதற்காகவா? கடவுளிடம் உனக்கு என்ன வேலை? என ஏக்நாத் கேட்டார்.
இல்லை, எந்த வேலையுமில்லை, என அவன் கூறினான்.
பிறகு உபயோகமில்லாத விஷயங்களை பற்றி ஏன் கவலைப்படுகிறாய். உபயோகமாய் ஏதாவது செய். நான் இப்போது போகிறேன். ஏனெனில் இது எனது சாப்பாட்டு நேரம் என ஏக்நாத் கூறினார்.
நீங்கள் ஆற்றில் குளிக்க போவதில்லையா என நாத்திகன் கேட்டான்.
ஆற்றைப் பற்றி யார் கவலைபடுவார்கள். அது எப்போதும் அங்கேயே உள்ளது..
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குளிககலாம். நடு ராத்திரியில், மத்தியானத்தில் – என்ன அவசரம் அது எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு இன்று சாப்பாடு போடுகிறேன் என்று சொன்ன வீட்டிற்க்கு நான் சரியான நேரத்திற்க்கு செல்லா விடில் அது கஷ்டமாகி விடும். எனவே நான் என் உணவை சாப்பிட்ட பிறகு குளிப்பேன் – என ஏக்நாத் கூறினார்.
ஆனால் குளிக்காமல் வழிபடாமல் உணவை உண்ணும் சந்நியாசிகள் பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை என நாத்திகன் கூறினான்.
நீ பழைய சந்நியாசிகளை பற்றி பேசிக்கொண்டிருக்கிறாய்.
நான் இந்த காலத்து மனிதன். என்னுடைய நேரத்தை வீணடிக்காதே. நீ குளித்து
விட்டு வழிபாடு செய். நான் எனது உணவுடன் வருகிறேன் என ஏக்நாத் கூறினார்.
உணவு தருவதாக வாக்களித்திருந்த அந்த யாரோ ஓருவர் உணவை இங்கேயே கொண்டு வந்துவிட்டார். உடனே ஏக்நாத் கோவிலின் முன் சாப்பிட அமர்ந்தார். அப்போது ஓரு நாய் ஓடிவந்து அவருடைய
சப்பாத்திகளில் ஓன்றை எடுத்துக்கொண்டு ஓடியது.
நாத்திகன் இதை கவனித்துக்கொண்டிருந்தான். உடனே ஏக்நாத் “முட்டாளே நில்!” என கத்திக்
கொண்டே நாயின் பின் ஓடத் தொடங்கினார்.
கடவுளே அந்த சப்பாத்தியை இவர் திரும்ப வாங்கப் போகிறாரா என எண்ணிய படியே நாத்திகனும்
பின் தொடர்ந்தான்.
ஏக்நாத் நாயை பிடித்து விட்டார். அவர் நாயிடம் “உனக்கு ஓரு சப்பாத்தி வேண்டுமென்றால் அங்கேயே காத்திரு என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். நான் உன்னை வெண்ணெய் இல்லாமல் சப்பாத்தி சாப்பிட அனுமதிக்க மாட்டேன்” என கூறிக்கொண்டே சப்பாத்தியை அதன் வாயிலிருந்து பிடுங்கி வெண்ணெயை அதில் தடவி சப்பாத்தியை திரும்ப கொடுத்தார். அவர் நாயை
பார்த்து “ராம் ராம் இப்போது நீ இதை சாப்பிடலாம் ஆனால் எப்போதும் இங்கிதமாக நடந்து கொள்” எனக் கூறினார்.
நாத்திகன் இந்த முழு நிகழ்ச்சியையும் கவனித்தான். நாயை அவர் கடவுள் என அழைக்கிறார். அது மட்டுமின்றி வெண்ணெய் இல்லாமல் சப்பாத்தி சாப்பிட நாயை அனுமதிக்கவில்லை…….
ஓரு ஆச்சரியமான தனித்தன்மையுள்ள மனிதன். அரசர் சரியாகதான் கூறியுள்ளார் போலும். இந்த மனிதர் என்னை கடவுள் இருக்கிறார் என ஓப்புக்கொள்ள வைக்க முடிய வில்லை எனில் பிறகு வேறு யாராலும் முடியாது.
அவன் ஏக்நாத்தின் காலைத் தொட்டு வணங்கினான். என்னை மன்னித்துவிடுங்கள்…..நான்
உங்களை மிகவும் தவறாக புரிந்து கொண்டிருந்தேன். இது கடவுளின் சிலை மீது காலை வைப்பதை
நியாயபடுத்துதல் அல்ல. ஓரு நாயிடமும் நீங்கள் கடவுளை காண்கிறீர்கள்.வெண்ணெய்
இல்லாமல் சப்பாத்தி சாப்பிட நீங்கள் நாயை அனுமதிக்க மாட்டீர்கள். அதன் சப்பாத்தியில் வெண்ணெய்
தடவுவதற்க்காக நீங்கள் அரை மைல் ஓடியிருக்கிறீர்கள். நானும் ஓடியிருக்கிறேன். என்றான்.
நான் வெண்ணெயோடு சப்பாத்தி சாப்பிடும் போது கடவுள் வெண்ணெய் இல்லாமல் சப்பாத்தி
சாப்பிடுவது சரியென்று எனக்கு படவில்லை. நான் அவனிடம் சொல்லியிருக்கிறேன் ஆனால் அவன் மிகவும் மடத்தனமான கடவுள். கிட்டதட்ட எல்லா நாட்களிலும் இது நடக்கிறது. நான் எனது உணவை திறக்கும்பொழுது அவன் எங்கோயோ மறைந்துள்ளான். நீ வேதங்களில் கண்டிப்பாக
படித்திருப்பாய். கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். இந்த கடவுள் எல்லா இடங்களிலும் எப்போதும் இருப்பார்.
ஆனால் நானும் பிடிவாதமான மனிதன். இன்று அரைமைல் மட்டுமே. ஓரு நாள் பத்து
மைலாகிவிட்டது. ஆனால் வெண்ணெயை போட்டுத் தரும் வரை நான் அவனை சப்பாத்தி சாப்பிட அனுமதிக்க மாட்டேன். அது சரியானதாக எனக்கு பட வில்லை. ஓருவர்
சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் – என ஏக்நாத்
கூறினார்.
அந்த மனிதன், “உண்மைதான், அதிகாலையில் இருந்தே உங்களுடைய மென்மையான நடத்தையை
காண்கிறேன்.
மேலும் உங்களிடம் எனக்கு வாதம் செய்ய ஏதும் இல்லை, நான்
வீட்டிற்க்கு ஓரு ஆத்திகனாக போகிறேன். ஏனெனில் என்னுடைய வாழ்வில்முதல் முறையாக ஓரு
ஆத்திகரை காண்கிறேன். மற்ற எல்லா ஆத்திகர்களும் வெறும் வார்த்தைகளை உபயோகப்படுத்தினார்கள். கடவுளைப் பற்றி எதையும் அறிந்து கொள்ள வில்லை.
உங்களுக்கு நிச்சயமாக ஏதோ ஓன்று தெரியும். ஓவ்வோர் அசைவும் அதை
உணர்த்துகிறது. அது தவறாக புரிந்து கொள்ளப்படக் கூடும். நானும் முதலில் தவறாகத்தான்
புரிந்து கொண்டேன். ஆனால் நான் இப்போது பார்க்கிறேன்” என கூறினான்.
இது எல்லாவற்றையும் மறந்து விடு. வந்து என்னோடு சாப்பிடு.
நம் இருவருக்கும் போதுமான அளவு உணவு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏனெனில் நீ இங்கு காத்துக் கொண்டிருப்பாய் என நான் அறிவேன் – என ஏக்நாத் கூறினார்.
அவன் “ஆனால் நான் குளிக்க வேண்டும்” என கூறினான்.
குளிப்பதை பற்றி மறந்து விடு. நான் உனக்கு கூறியதைப்போல ஆறு நாள் முழுவதும் ஓடி
கொண்டேயிருக்கிறது. நீ எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். எந்த தடையும் இல்லை – என ஏக்நாத் கூறினார்.
ஆனால் நான்…….. நாத்திகனாக இருந்திருந்தாலும் கூட நான் கோவிலின் உள்ளே சென்று காலை
தொட்டு …………. என அவன் கூறினான்.
நீ கோவிலுக்குள் சென்றால் என்னை விட மோசமான மனிதனை நீ பார்க்க மாட்டாய். முதலில் சாப்பிடு. பிறகு நீ என்ன முட்டாள்தனம் செய்ய நினைக்கிறாயோ அதை செய். எனக்கு பசியாக உள்ளது. என்னால்
காத்திருக்க முடியாது.
ஆனால் நீ என் விருந்தாளி – இந்த கோவில் என்னுடைய வீடு.
நான் இங்கு வாழ தொடங்கியதிலிருந்து எல்லோரும் உள்ளே வருவதை நிறுத்தி விட்டார்கள். இது என் முழு வாழ்க்கையின் அனுபவம். எங்கு நான் சென்றாலும் எந்தக் கோவிலில்
நான் நுழைந்தாலும்…….. விரைவில் வழிபடுபவர்கள் மறைந்து விடுவர். ஏனெனில் கோவிலில் நான்
எல்லாவிதமான காரியங்களையும் செய்வேன்….நீ அதிகம் பார்க்கவில்லை. நீ வந்து உன் உணவை எடுத்துகொள் – என ஏக்நாத் கூறினார்.
From “The Rebellious Spirit – Chapter 9”