என் கன்னங்களில் உருண்டோடுகிறது கண்ணீர்,
எப்படி நிறுத்துவது அதை ?
ஏன் நிறுத்துவது அதை ?
அது அன்பு, தூய்மையான அன்பு,
அது பொங்கட்டும். . . .
நான் மூழ்கிபோகுமளவு பொங்கி பெருகட்டும்!
என் இதயம் கவர்ந்தவளே!
என் நேசத்திற்குரியவளே!
நான் யாரையும் எதையும் விட ‘அன்பை’  நேசிக்கிறேன்!
நான் உன்னை நேசிக்கிறேன் – ஏனெனில்,
உன் மூலமாக நான் அன்பைத் தொடவும் நுகரவும்
                                  அதில் மூழ்கவும் முடிகிறது.
நான் ஒருபோதும் அன்பின் அரவணைப்பை இழப்பேனில்லை!
அதன் சுகந்தத்தில் நான் சுவாசிக்கிறேன்,
                      முழுமையாக சுவாசிக்கிறேன்,
பயமும் இறுக்கமும் பாதிக்காத சுவாசம் அது,
சுவாசிக்கும் வாழ்வு அல்ல,
வாழ்வையே சுவாசிக்கிறேன்!
மகிழ்ச்சி துக்கம், வெற்றி தோல்வி, பிறப்பு இறப்பு…………
இப்படி எப்படியெல்லாமோ வாழ்வைச் சுவாசிக்கிறேன்!
இந்த சின்ன இதயத்தில் இனிமேலும் அன்பைப் பொத்தி வைக்க முடியாது,
எரிமலை வாயாய் என் இதயம் திறக்கப் போகிறது!

எனதருமை நண்பர்களே!
கடவுள் இருந்தால் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!
என் சுகத்திலும் துக்கத்திலும் சுவை கூட்டியவர்களே,
என்னைப் பற்றிய உங்கள் கவலை எனக்குத் தெரிந்ததே,
ஆனால் நண்பர்களே!
நான் உங்கள் தெளிவையும் திட்டத்தையும் விட்டு
                      வெகுதூரம் வந்துவிட்டேன்,
பித்துப் பிடித்த நேசக்காரனாய் மாறிவிட்டேன்,
ஆகவே என்னைப் பற்றிய கவலையை விடுங்கள்,
என்மேல் எனக்கே அக்கறை அற்றுவிட்டதே!

ஓ! எனக்கு செல்லமான அப்பாவி நாயே!
உன்னிடமிருந்து நான் பெற்ற அன்பு எத்தனை ?
ஓ! என் போக்கிரிப் பூனையே!
நீ கொட்டிக்காட்டிய அன்பு எத்தனை என்னிடம்?
ஓ ! என் எதிரிகளே ! துரோகிகளே !
உங்களுக்குத் தெரியாது………
உங்களை எவ்வளவு தூரம் நான் ஏமாற்றிவிட்டேன் என்று,
நான்…….. இந்த சாபகேடான பேராசைக்காரன்……………….
கொள்ளையடித்த விலைமதிப்பற்ற பொக்கிஷம்
                  உங்களுக்குத் தெரியவில்லை!
ஆம்….. நான் உங்கள் அனைவரிடமிருந்தும்
                                          அமிர்த அன்பை உறிஞ்சினேன்!
அதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட விலைப் பற்றி
                        எனக்குக் கவலையில்லை,
என்ன விலை கொடுத்தால் என்ன?
எதை இழந்திருந்தால்தான் என்ன?
என்னை அன்பில் இழப்பதல்லவோ என் அக்கறை!!

                                 …………….தொடர்ச்சி அடுத்த இதழில்