ஒரு மனிதன் ரோட்டின் நடுவில் அமர்ந்து கொண்டு
தனது கைகளை படகு ஓட்டுவது போல ஆட்டிக்கொண்டிருந்தான், அவனால் முழு டிராபிக்கும்
ஸ்தம்பித்தது.

ஒரு பொறுமையிழந்த காரோட்டி அவனிடம் போய் – ஏய்,
உனக்கு கிறுக்கு பிடித்துவிட்டதா, என்ன செய்து கொண்டிருக்கிறாய் – என்றான்.

அவன் – நான் படகு ஒட்டிக் கொண்டிருக்கிறேன்.
நீயும் சவாரிக்கு ஏறிக்கொள்கிறாயா – என்றான்.

உடனே காரோட்டி – படகு எங்கே, அதைக் காணவில்லையே –
என்றான்.

அந்தப் படகோட்டி உடனே – என்ன, படகைக்
காணவில்லையா, அப்படியானால் நீந்த வேண்டியதுதான் – என்றான்.

-

இப்படித்தான் உன்னிடம் யாராவது – நீ இருப்பது கனவில், மாயையில் – என்று சொன்னால், உடனே நீ அடுத்த கனவை, மாயையை ஆரம்பித்து விடுகிறாய்.

ஓஷோ