1.வெறுமனே கேட்காதீர்கள். . . . ஏதாவது செய்யுங்கள்

 

என்னுடைய பேச்சுக்களை வெறுமனே கேட்பது மிகவும் முட்டாள்தனமானது. நீங்கள் எதுவும்
செய்யப்போவதில்லை என்றால், நேரத்தை வீணடிக்காதீர்கள்- அது ஒரு வீணான செயல். செயல்
முற்றிலும் தேவை. ஏதாவது ஒரு உண்மையை நீ ஒத்துக்கொண்டால், அதன்படி ஏதாவது செய்,
மற்றும் உடனடியாக செயல்படு! மனம் மிகவும் தந்திரமானது, மனதின் மிகச்சிறந்த தந்திரம்
தள்ளிப்போடுதல். அது, “ஆமாம் நான் ஒருநாள் தியானம் செய்யப்போகிறேன். நாம் முதலில் தியானம் என்றால் என்ன
என்று புரிந்துகொள்வோம்” என கூறுகிறது. மற்றும் பிறகு நீ தியானம் என்றால் என்ன
என்று வாழ்நாள் முழுவதும் புரிந்துகொண்டே இருக்கலாம், மற்றும் நீ ஒருபோதும்
செயல்படபோவதில்லை. மற்றும் நீ செயல்படும் வரை எதுவும் நடக்கப்போவதில்லை, எந்த
நிலைமாற்றமும் நிகழப்போவதில்லை.

 

2. இப்போது, இங்கே வாழுங்கள்

 

மன ரீதியாக கடந்த காலத்திலோ, எதிர்காலத்திலோ வாழாதீர்கள். நடைமுறையில், சில
சமயங்களில் நீங்கள் கடந்த கால விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள்
உங்கள் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும், மற்றும் உங்களுடைய மனைவியை நீங்கள்
நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் தினமும் வீட்டிற்கு வந்தவுடன், “யார் நீ ?  நம்மை அறிமுகப்படுத்திக்கொள்வோம்” என்று கேட்கமுடியாது. நடைமுறை காரணங்களுக்காக நீ கடந்த
காலத்தை நினைவில் வைத்திருந்தாகவேண்டும். ஆனால் அங்கு வாழாதே, கடந்த காலம்
போய்விட்டது.

நினைவு இருக்கிறது, எப்போதெல்லாம் தேவையோ, அப்போது அதனை உபயோகப்படுத்து, ஆனால்
அந்த நினைவுகளில் வாழ தொடங்கிவிடாதே. நேரத்தை வீணடிக்காதே, ஏனெனில் நீ உனது
நினைவுகளில் வாழ்ந்தால், நிகழ்காலத்தில் யார் வாழப் போகிறார்கள் ?.

 

3.திரும்பிச் செல்ல இயலாது

 

நீ எப்படி இருக்கிறாயோ, அப்படி மட்டும்தான் நீ
இருக்கமுடியும், எனவே அதனை அனுபவி. நேரத்தை வீணடிக்காதே. உன்னை ஏற்றுக்கொள்.
பிரபஞ்சம் நீ இப்படி இருப்பதைத்தான் தேர்ந்தெடுத்துள்ளது. இப்போது திரும்பிச்
செல்ல முடியாது. உன்னை விட்டுவிட வாய்ப்பு இல்லை. ஏற்றுக்கொண்டு உண்மையோடு மிதந்து
செல்.

 

4. பேசாதே, பார்

 

நீ ஒரு மலரை பார்க்கிறாய். பிறகு வெறுமனே பார், எதுவும் பேசாதே. ஆறு ஓடுகிறது
கரையில் அமர்ந்து ஆற்றைப் பார், ஆனால் எதுவும் பேசாதே. மேகங்கள் வானத்தில்
நகர்கின்றன, தரையில் படுத்து அவைகளைப் பார், எதுவும் பேசாதே. வெறுமனே
வார்த்தைப்படுத்தாதே.

 

5. தலையை இழந்துவிடு

 

ஒரு தியானமாக இதை முயற்சி செய். இது மிகவும் அழகான தந்திராவின் தியானங்களில்
ஒன்று. நட, மற்றும் தலை இல்லை என நினைத்துக்கொள், நீ வெறும் உடல், உட்கார், உனக்கு
தலை இல்லை என நினைத்துக்கொள்- வெறும் தலையில்லா உடல். தொடர்ந்து தலையில்லை என்பதை
நினைவில் வைத்துக்கொள். உன்னை தலையில்லாமல் கற்பனை செய்து பார். தலையில்லாத உனது
புகைப்படத்தை பெரிதுபடுத்தி வைத்துக்கொள். அதனைப்பார். உன்னுடைய குளியலறையில்
கண்ணாடியை சிறிது கீழே மாட்டு எனவே நீ கண்ணாடியை பார்க்கும்போது தலையை பார்க்க
இயலாது. வெறும் உடலை மட்டுமே பார்க்கமுடியும்.

 

6. முழுவதும் காதுகளாக மாறிவிடு

 

சரியான கேட்டல் என்பது நீ வெறும் காதுகளாக மாறிவிடுவதே- உன்னுடைய முழு
இருப்பும் கேட்கிறது. அதுவே ஒரு ஆழமான தியானமாகும். சில பறவைகள் பாடுகின்றன-
காக்கைகள்- வெறும் கேட்பதாக மாறிவிடு, எல்லாவற்றையும் மறந்துவிடு- வெறும் காதுகளாக
மாறிவிடு. காற்று மரங்களின் வழியாக செல்கிறது, இலைகளின் சலசலப்பு, வெறும் காதுகளாக
மாறிவிடு, எல்லாவற்றையும் மறந்துவிடு- எந்த எண்ண ஓட்டமும் இல்லை, வெறுமனே கேள்.
காதுகளாக மாறிவிடு. பிறகு அது சரியான கேட்டல், பிறகு உன்னுடைய முழு இருப்பும்
அதற்குள் மூழ்கிவிடுகிறது, பிறகு நீ முழுமையாக நிகழ் காலத்தில் இருக்கிறாய்.