தூய்மைப்படுத்தல் ஒரு படைப்பு, ஒரு உருவாக்குதல்

 

விளையாட்டும், அமைதியும், தூய்மையும் ஆன இடத்திலிருந்து எழும் விழிப்புணர்வை மீரா சொல்லிக் கொடுக்கிறார்.

ஜனவரியில் பூனா ஓஷோ ரிஸார்ட்டில் 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள்  பங்கேற்ற ஒரு ஓஷோ அகநலக் கலை குழுவை மீரா வடிவமைத்து தலைமை தாங்கி நடத்தினார். அவர் கூறுகிறார்

எங்களது வேலைத்தளம் புத்தாஹாலில் மேடையின் வலதுபக்கம் நிகழ்ந்தது. அந்த மேடையில் அமர்ந்துதான் ஓஷோ இருபது வருடங்களாக மேலாக
எங்களிடம் பேசினார். அந்த இடம் ஓஷோ எங்களுடன் இருக்கிறார் என்ற விழிப்புணர்வோடு நாங்கள் இருக்க உதவியது, மேலும் அவர் எப்போது வேண்டுமானாலும் வருவார், எங்களது ஓவியங்களை பார்வையிடுவார், அதற்குத் தயாராக, தக்கதாக அந்த இடத்தை வைத்திருக்க வேண்டும் என்ற ஒரு உணர்வையும் எங்களுக்கு தந்தது.

ஒவ்வொரு நாளும் 82 வயதான போதிஹன்னா அந்த புத்தா
ஹாலை சுத்தம் செய்வதை நாங்கள் பார்ப்போம். அது ஒரு தனிப்பட்ட ஆள் மட்டும் செய்வது மிகவும் கடினம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவள் ஓஷோவின் மீது
கொண்டிருக்கும் பக்தியும் நேசமும் அதை சாத்தியமாக்குகிறது. மேலும் அவள் செய்யும்
சுத்தம் எங்களுக்கெல்லாம் மிகவும் ஈர்ப்பை தந்தது.

எங்களுடைய குழுவிற்க்கு ஒதுக்கப்பட்ட இடம்
புத்தாஹாலில் மூன்றில் ஒரு பகுதி இருந்தது. அந்த இடத்தில் ஒரு பிளாஸ்டிக் ஷீட்டை
விரித்து நாங்கள் வரைந்து கொண்டிருந்தோம். ஆகவே அந்த இடம் முழுவதும் பெயிண்ட்
கொட்டி களேபரமாக இருந்தது. மிகவும் சுத்தமாக அந்த வெள்ளை மார்பிளை ஹென்னா
செய்திருந்த சுத்தமும், அதன் ஒரு பகுதியில் நாங்கள் சிந்தி வைத்த பெயிண்ட் கலவையும் சேர்ந்து அந்த வழியே போன எல்லோரையும் ஈர்த்தது. அவர்கள் நாங்கள் பெயிண்ட் செய்வதையும், இடையிடையே நாங்கள் கேட்கும் ஓஷோ பேச்சுக்களையும், கூடவே நாங்கள் செயல்படும் விதத்தையும் கவனித்தனர். எங்கள் குழுவின் ஆழமும் அதன் அழகும் அதன் விளையாட்டுத்தன்மையும் ஈர்த்ததன் விளைவாக அவர்களில் பலர் தாங்களாகவே வந்து இதில் கலந்து கொண்டனர்.

சுத்தம் செய்வதும் எங்களுடைய குழுவில் ஒரு செயலாக இருந்தது. புத்தாஹாலை சுற்றி ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மூங்கில் மரங்கள் உதிர்க்கும் இலைகளை தொடர்ந்து சுத்தம் செய்வதே என்னுடைய குழுவின் உதவியாளர்கள் செய்யும் பணியாக இருந்தது. அதை பார்க்க வேண்டுமே. அவர்கள் சுத்தம் செய்வதும் இலைகள் உதிர்வதும் திரும்பவும் அவர்கள் அதை சுத்தம் செய்வதும் என சிரிப்பும் சந்தோஷமுமாக இருந்தது.

நான் சமீபத்தில் பிரேசிலில் ஒருநாள் குழு ஒன்றை நடத்தினேன்.
அதில் 50 கலைஞர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் அவர்களை அந்த தரையை ஈரத்துணி கொண்டு துடைக்க சொன்னேன். அது அங்கிருந்த சில கலைஞர்களை அதிர்ச்சியுற செய்தது. ஏன் சுத்தம் செய்ய வேண்டும் கலைக்கும் சுத்தம் செய்வதற்க்கும் உள்ள தொடர்பை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. குறிப்பாக சொல்லப்போவதானால் வரைவதில் ஈடுபடுகையில் ஒரு மணி நேரம் முன்பு நன்றாக இருந்த இடம் திரும்பவும் அசுத்தமாகி விடும் என்பது தெரிந்ததுதானே. பின் ஏன் கவலைப்பட வேண்டும் என்ற மனநிலையே இருந்தது.  என்னுடைய பல்கலைகழகத்தில் இருந்த என்னுடைய வகுப்பறை மிகவும் அசுத்தமாகவும் வர்ணங்கள் கொட்டியும் இருந்தது எனக்கு நினைவில் இருக்கிறது.

முப்பது வருடங்களுக்கு முன்னால் நான் கம்யூனில் ஒரு அகநலக் கலை வகுப்பு நடத்தினேன். நான் ஓஷோ எங்களது வகுப்புக்கு வருவதைப்பற்றி நான் கனவு கொண்டிருந்தேன். ஆனால் அவர் உண்மையில் வந்தபோது நாங்கள்
செய்து வைத்திருந்த களேபரத்தை பார்த்து எனக்கே மிகவும் வெட்கமாக இருந்தது. அதனால் அவர் என்னை பார்க்க முடியாத படி நான் ஒரு புதர் பின்னால் மறைந்தேன். ஆனால் அவர் என்னை கண்டுபிடித்து விட்டார். அவர் முகத்தில் புன்னகையுடன் எனக்கு ஒரு வெள்ளை துண்டை பரிசளித்தார்.

அதிலிருந்து நான் எப்போது வகுப்பு நடத்தினாலும் ஓஷோ எந்த கணம் வேண்டுமானாலும் வரக்கூடும் என்றும் அவர் எப்போது வந்தாலும் அவரை
வரவேற்க தயாராக இருப்பது போலதான் நடத்துகிறேன். மேலும் எப்போதும் என்னுடைய
பாடங்களில் அமைதியான சுத்தமாக இடத்தை வைத்திருப்பதன் மூலம் விழிப்புணர்வை கொண்டு வர முடியும் என்பதை வலியுறுத்துகிறேன்.

மீராவைப் பற்றி   –  மீரா 1974 ல் சன்னியாஸ் பெற்றாள். பின் ஓஷோவின் வழிகாட்டுதலில் ஓஷோ கலை பள்ளி ஆரம்பித்து உலகம் முழுவதும் சென்று கலை வகுப்புகளை நடத்தி வருகிறார். அவள் ஓவியத்தில் புதுவிதமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தை உருவாக்கினாள். மேலும் ஆம்ஸ்டர்டாம், சிசிலி, கலிபோர்னியா ஆகிய இடங்களில் கம்யூன்களை உருவாக்கினாள். 40 க்கும் மேற்ப்பட்ட ஓஷோவின் புத்தகங்களை மீராவின் ஓவியங்கள்தான் அலங்கரிக்கின்றன. அவள் இப்போதும் பூனாவில் பயிற்சி வகுப்புகளை எடுக்கிறாள்.