ஷாந்திதா தான் சன்னியாஸ் எடுத்ததைப் பற்றி எழுதுவதன் சென்ற மாதத்தொடர்ச்சி…

குழுவின் இறுதி நாளன்று தீர்த்தா ஒவ்வொரு நபருடன் தான் உணர்ந்ததை பகிர்ந்து
கொண்டார். அவர் என்னிடம் நீங்கள் அதை நேர்மையாக இருந்து சரியாக செய்துவிட்டீர்கள்
என்றார். அவர் சொன்ன வார்த்தைகளையும் அவர் கொடுத்த ஊக்கத்தையும் என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. மாலையில் அவர் ஒரு புல்லாங்குழல் 400 டாலர் விலைக்கு கிடைப்பதாகவும் அது மிகவும் அரிதானது என்றும் அதை தன்னால் வாங்க முடியாது என்றும் கூறிக் கொண்டிருந்தார். அப்போது என்னிடம் பர்ஸில் 400 டாலர்கள்தான் பணம் இருந்தது. அதை அப்படியே தூக்கி அவரிடம் கொடுத்துவிட்டேன். நான் என்னை இயற்கையின் கையில் ஒப்படைத்துவிட்டேன் என்று கூறினேன்.

குழு முடிந்தவுடன் உடனடியாக நான் வேலைக்கு சேர்ந்துவிட்டேன். என்னை
கிச்சனுக்கு அனுப்பினார்கள். எனக்கு உணவுகூப்பன் கிடைக்கும்வரை கிச்சனில் கிடைத்த
உணவும் வேலையாட்களின் டீயும் என்னை காப்பாற்றின. ஒரு டீக்கடையில் சமையலறைக்கும் சாப்பிடும் அறைக்கும் இடையில் இருந்த இடத்தில் ஒரு இரும்பு கட்டிலில்
தூங்கிக்கொண்டு நாட்களை தள்ளிக் கொண்டிருந்தேன். அந்த இடத்திற்கு வாடகை
கேட்டபோது என்னால் கொடுக்க முடியாது என்று தெரிந்தவுடன் என்னை வெளியே
துரத்திவிட்டார் அந்த டீக்கடை முதலாளி.

அடுத்த நாள் காலை டைனமிக் செய்து கொண்டிருக்கும்போது நான்காவது நிலையில் உடலை
உறைய செய்து நிற்க வேண்டிய நேரத்தில் நான் தடுமாறி ஒரத்திற்கு சென்று
விழுந்துவிட்டேன். குழுசிகிச்சையின் போது கூட இருந்த ஒரு இனிமையான மா – தற்போது
தந்த்ரா குழு நடத்திக் கொண்டிருப்பவர் – ஷாந்திதா நீங்கள் என்ன செய்து
கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டு எல்லாவற்றையும் அறிந்துகொண்டு பின் ஒரு பாழடைந்த
ஓட்டலின் மாடியில் தங்க வைத்தார்.

சமையல் வேலை மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் என்னால் டீ நன்றாக போட
முடியவில்லை. எனவே தீக்ஷா என்னை ஏப்ரன் துவைக்கும் இடத்திற்கு அனுப்பினாள். அது
ஜீஸஸ் ஹவுஸின் மாடியில் தனியாக இருந்தது. மேலும் அது மிகவும் சலிப்பு தரும் வேலை.
அந்த நேரத்தில் நான் மிகவும் உள்முகமாக திரும்பியிருந்தேன். மேலும்
குழுசிகிச்சைகள் அப்போதுதான் முடிந்திருந்தன. ஆகவே மிகவும் சக்தியோடும் ஆனந்தமாகவும் இருந்தேன். அங்கே மாடியில் அமைதியாக இருந்தது மட்டுமல்லாமல் அச்சம் தருவதாகவும் இருந்தது. அப்போது ஏப்ரல் 1978 ஒவ்வொரு நாளும் வெயில் அதிகமாகிக் கொண்டே வந்தது. சமையல் ஏப்ரன்கள் ஒரு நாளில் இரண்டு முறை துவைக்க வந்து கொண்டே இருந்தது. அங்கே 4 அடிக்கு 4 அடி தொட்டி 6 அடி உயரம் கொண்டதாக இருந்தது. அதில் ஏப்ரன்களை ஊற வைத்து கையால் பிரஷ் செய்து அலசி அங்கே மாடியில் கொடியில் காய வைக்க வேண்டும். மதியம் துவைத்த ஏப்ரன்களை காய வைக்க வரும்போது காலையில் துவைத்து காய வைத்த ஏப்ரன்கள் காய்ந்திருக்கும். அந்த வேலை மிகவும் களைப்பு தருவதாக இருந்த போதிலும் அந்த அருள், அந்த சக்தி, அந்த புத்தாபூமி இது யாவற்றையும் சரி செய்தது. என்னுடைய இதயம் முழுமையாக திறந்திருந்தது. நான் கிட்டத்தட்ட எப்போதும் தனிமையில்தான் இருந்தேன்.
ஆனாலும் அமைதியான மனதோடு கிட்டத்தட்ட பரவசத்தில் இருந்தேன்.

மே மாதம் ஏர் இந்தியா என்னுடைய காலாவதி ஆகிவிட்ட டிக்கெட்டை திரும்பவும்
புதுப்பித்துக் கொடுத்தது. நான் ஸ்டேட்ஸ் திரும்பினேன். நான் திரும்பி வரும்
நேரத்தில் ஓஷோ எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் திரும்பி வரச் சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார். எல்லோரும் திரும்ப திரும்ப மார்க்கெட்டிற்க்குள் செல்ல
வேண்டும் இந்த அனுபவங்களோடு என்றார்.

திரும்ப இந்த பைத்தியகார சுயஉணர்வற்ற உலகில் என்னை பொறுத்திக் கொள்வது அவ்வளவு சுலபமான விஷயமாக இல்லை.  திரும்பவும்
சொல்லிக் கொடுக்கும் வேலைக்கு செல்வது என்பது என்னால் இயலாத காரியமாகி விட்டது.
வாஷிங்டனில் உள்ள தேவதீப் என்ற ஓஷோ குரூப் இல்லத்தில் சமையல் அறை உதவியாளனாக வேலை செய்ய ஆரம்பித்தேன்.

பின் 1980 ல் திரும்பவும் ஓஷோ ஆசிரமம் வந்தேன், அது 1981 ல் மூடப்படும் வரை
இருந்தேன்.

இப்போது தாராபீரீச் எனப்படும் புத்த போதனைகளை ஒரு 7 வயது சிறுவனுடன் இணைந்து
படித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் ஓஷோவின் குழுக்களைப் போன்று மிகவும் அதிக
செலவு பிடிக்க கூடியதாக இருக்கிறது, ஆனால் ஓஷோ எப்போதும் என்னுடன் இருக்கிறார்,
அவர் எப்போதும் என்னுடன் இருப்பார்.