ஹம்மிங் செய்வது மனிதர்களுக்கு சிறந்தது.

க்ராஹி என்பவர் ஹம்மிங்கின் மூலம் ஆரோக்கியமாக
உணரலாம், அமைதியை உணரலாம், மௌனத்தை, செயலற்ற தன்மையை அனுபவிக்கலாம் என்கிறார்.

நாம் தேவைபட்ட அளவிற்கு சப்தத்தை உண்டாக்குகிறோமா?

ஒரு வளம் வாய்ந்த நாகரீகமடைந்த மேற்கத்திய நாட்டின்
வீதிகளில் அல்லது வீட்டில் உள்ள சப்தத்தை விட பழமையான மேலும் நாகரீகமடையாத
சமுதாயங்களில் பேச்சு, பாட்டு, சிரிப்பு, மேலும் மனிதன் எழுப்பும் சப்தங்கள் ஆகியன
அதிகமான அளவில் இருக்கிறது.

நமது குரல் உபயோகிக்கவே ஏற்பட்டது. நாம் அதை
நெடுநாட்கள் உபயோகிக்கவில்லையென்றால், பேசவோ, சப்தம் உண்டாக்குவதோ
செய்யவில்லையென்றால் அது பிரச்னைகளை உருவாக்கும். பலர் அதிகமாக சிரிக்காமல்,
பேசாமல், பாடாமல், சப்தமிடாமல் வாழ்கிறார்கள். அவர்கள் குரல்வளம் கட்டப்பட்ட
வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கலாம், அல்லது
கம்யூட்டரின் எதிரில் அமர்ந்து மணிக்கணக்கில் வேலை செய்பவர்களாக இருக்கலாம்.
லீரென்க்ஸ், டராசா, நுரையீரல் மற்றும் குறிப்பாக சைனஸ் ஓட்டைதள் – இந்த அசைவற்ற
தன்மையினாலும், அதிர்வு இல்லாமல் இருப்பதாலும் பாதிக்கப்படும்.

ஹம்மிங் ஆராய்ச்சி

சுவீடனில் செய்யப்பட்ட பல ஆராய்ச்சிகளில்
ஹம்மிங் செய்வது சைனஸ் ட்டைகளின் நீர்சேர்க்கையை கட்டுப்படுத்துகிறது என்று
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சைனஸ் ஓட்டைகள் யாவிலும் உள்ள நைட்ரிக் ஆக்ஸைட் வாயுவை இது
 அதிகப்படுத்துவதன் மூலம் நுண்ணிய செல்கள் உருவாக உதவுகிறது மற்றும் ரத்த
ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. மேலும் சாதாரணமாக நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தில்
இருக்கும் ஆக்ஸிஜன்  அளவை விட ஹம்மிங் செய்யும்போது 15 மடங்கு அதிகமாகிறது என்பதும் ஆராய்ச்சியில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூக்கின் சைனஸ் ஓட்டைகளின் வழியே வந்து செல்லும் காற்றின்
அளவும் ஒரே சீராக அதிகமாகிறது என்பது மிக முக்கியமான உண்மையாகும். ஹம்மிங்
செய்யும்போது சுவாசக்காற்று சைனஸ் ஓட்டைகளின் வழியே செல்லும் விகிதத்தில் சுவாசம் 98
சதவிகிதம் அதிகம் நடக்கிறது. இது கிட்டத்தட்ட ஒரு முழுமையான மாற்றம். ஹம்மிங் செய்யாத
போது சுவாசத்தில் உள்ள காற்று செல்லும் விகிதம் வெறும் 4 சதவிகிதம்தான்.

இது ஏன் இப்படி நடக்கிறது. சுவாசம் குறைவாக உள்ளே வரும்போது சைனஸ் ஓட்டைகளில் நீர்சேர்க்கை உருவாகி அதன் மூலம் பாக்டீரியா வளர்ச்சி மற்றும் நுண்ணுயிர் பாதிப்பது அதிகமாகிறது. தினமும் ஹம்மிங் செய்வது மூச்சுக்குழாய் சம்பந்தமான தொற்று வியாதிகளையும், சைனஸ் ஓட்டைகளில் நீர்கோர்வை தொடர்பான பிரச்னைகளையும் தீர்க்கும் என்று இந்த ஆராய்ச்சி நம்புகிறது.

ஹம்மிங் செய்வது ஒரு தீர்வு மற்றும் ஒரு சிகிச்சை

ஹம்மிங் பல நூற்றாண்டுகளாக தியானம் மற்றும் யோகா
சொல்லித்தரும் பள்ளிகளில் உபயோகப்பட்டு வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக திபெத்
நாட்டில் இதை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். தியானத்தின் போது ஓம் மந்திரம் சொல்பவர்கள்
அனுபவப்படும் மனத்தெளிவோடு தொடர்புடையது
இது. இந்த ஹம்மிங் செய்வது தெள்ளதெளிவாக மனத்தெளிவை அதிகரிப்பதுடன்
தொடர்புடையது. ஹம்மிங் அதிக நேரம் செய்வது மூளையின் ரத்த ஓட்டத்தையும்
ஆக்ஸிஜனையும் அதிகரிக்கிறது என்று நான் யூகிக்கிறேன்,.

நீங்கள் ஹம்மிங் செய்யும்போது உங்களுடைய உதடுகளிலும்
உங்களுடைய மூச்சுக்குழாயிலும் மூச்சுதுவாரத்திலும் நீங்கள் அதிர்வை உணருகிறீர்கள்.
ஒரு சிறந்த ஹம்மிங் என்பது லயப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த அதிர்வை
நீங்கள் உங்களுடைய தலையிலும் மூச்சுக்குழலிலும் உணர வேண்டும் என்பதுதான் அவசியம்.
அது ஒரு சிறிதளவு அதிக சப்தமாக ஒலிக்க வேண்டும், ஏனெனில் குறைவான ஒலியலை அதிர்வை
உண்டாக்காது.

காது மூக்கு சம்பந்தமான நோயால் நீங்கள் கடுமையாக
பாதிக்கப்படிருந்தால் இந்த ஹம்மிங் செய்வதை ஒரு நாளில் பல தடவைகள் தொடர்ந்து
செய்து வாருங்கள். நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள். தினமும் தூங்குவதற்கு முன் ஒரு
மணி நேரம் ஹம்மிங் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

மேலே கூறப்பட்டிருப்பதைப் போல ஹம்மிங் மிகச்
சிறந்த பலன்களைத்தரும். மக்களுடன் அரட்டை அடிப்பது, பாடுவது மற்றும் சாதாரணமாக
பேசுவது இவை யாவுமே பல வகைகளிலும் உங்களுக்கு நன்மை பயக்கும். சமுதாய தொடர்பு,
பரிமாற்றம் யாவுமே உங்களுடைய நினைவாற்றலுக்கும் நல்லது. இளமையில் தனியே இருப்பது
எப்படி பின்னாட்களில் நினைவுமறதி நோயை கொண்டு வருகிறது என்பதைப்பற்றி நான் பலரிடம்
பேசி ஆராய்ச்சி செய்திருக்கிறேன். ஆரோக்கியமான மக்கள் எளிதாக பேசி பாடி அரட்டை
அடித்து தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள், மேலும் மிக எளிதாக மற்றவர்களுடன்
கலந்து பழகுவார்கள். ஒரு ஆரோக்கியமான குழந்தையை கவனியுங்கள். உங்களுக்கே தெரியும்.

ஓஷோ வின் தியானமான  – நாதபிரம்மா தியானம் – ஹம்மிங்கையே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. இதன் பயன்கள் பற்றி பல ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த ஆராய்ச்சியும் அந்த முடிவுகளையே உறுதிப் படுத்துவதாய் உள்ளது.