சாகர்ப்ரியா நம்முடைய உள் ஆணும் பெண்ணும் தொடர்பு கொள்ளும் முறையை பற்றி
நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
அன்றொரு நாள் இந்த ஆன்லைன் பத்திரிக்கையை நடத்தி வரும் புன்யோவை இ-மெயிலில் தொடர்பு கொண்டபோது அவள், நான் நடத்திவரும் குழுசிகிச்சை முறையின் ஒரு பகுதியாக நெடுங்காலமாக இருநதுவரும் இந்த உள்ளார்ந்த ஆண்-பெண் என்ற விஷயத்தை பற்றிய தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தினாள். ஓஷோ தனது உடலை விட்டு நீங்கிய சிறிது காலத்திற்குள்ளேயே அவள் நான் மஸிடோவில் நடத்திய தியானபட்டறையில் கலந்து கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய ஒரு பகுதி வேலை செய்வதையும், பணம் சம்பாதிப்பதையும், கவலை கொள்வதையும் மற்றொன்று மிகவும் ஓய்வாக
இருப்பதையும் மிகவும் கலையுணர்ச்சியுடன் இருப்பதையும் மிகவும் சோம்பேறி தனமாக
இருப்பதையும் கண்டு கொண்டதை நினைவு கூர்ந்தாள். அவள், அது இன்னும் அது போலவேதான்
இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது. அதை எப்படி
கண்டுபிடிப்பது என்று கேள்வி கேட்டாள்.
அதை கண்டு பிடிப்பது மிகவும் எளிது
மிகவும் எளிது. ஒரு பேப்பரில் உன்னுடைய குணங்கள் ஆறை ஒன்றின் கீழ் ஒன்றாக
வரிசையாக எழுது. உதாரணமாக- நான் வேலை செய்கிறேன் அதன் அடியில் அதனால் எனக்கு பணம்
கிடைக்கிறது. இப்படி……
ஒரு கண்ணை உள்ளங்கையால் மூடிக்கொண்டு அல்லது ஒரு கண் மறைப்பை உபயோகித்து
மூடிக்கொண்டு மற்றொரு கண்ணை திறந்து வைக்கவும். வலது கண்ணை திறந்து வைத்துக்
கொண்டு இடது கண்ணை மூடி ஆரம்பிக்கவும். உன்னுடைய வலது கண் உன்னுடைய ஆண் பாகமாகும்.
நீ ஒரு விஷயத்தை எழுதும்போது அது உண்மையா பொய்யா என்று இந்த பாகத்திற்குத்
தெரியும். ஆம், உண்மை, இல்லை, உண்மையல்ல. எனக்குத் தெரியாது என்பதை குறிக்கும்
வெளிப்பாடுகளை உடலில் முகத்தில் காணலாம்.
நீ எழுதியிருப்பதில் முதலில் உள்ளதை சத்தமாக படி. நான் வேலை செய்கிறேன்., ஓஷோ
நியூஸ் பத்திரிக்கை சம்பந்தமாக எனில் உண்மையில் நான் வேலை ஏதும் செய்வதில்லை, நான்
வேறு வேலைதான் செய்கிறேன் என்று அந்த ஆண் பாகம் சொல்லுமானால் எந்த ஆச்சரியமும்
படாதே. அது நிறுத்தினால் அந்த உரையாடலை தொடர்ந்து செய். எது போன்ற வேலைகள். காரை
கவனித்துக் கொள்கிறேன், கார் ஓட்டுகிறேன், நண்பர்களுடன் கலந்துரையாடுகிறேன்,
பிளாட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறேன்…… இப்படி அந்த உரையாடல் தொடரும்போது
அந்த ஆறு விஷயங்களை பற்றி பேசி முடிக்கும்போது உனக்கு அந்த ஆணைப் பற்றிய ஒரு
விதமாக தெரிந்துவிடும்.
இதை முடித்தபிறகு வாழ்வில் மூன்று தலையாய விஷயங்கள் என்ன என்று கேள்வியை கேள்.
சிலர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் உண்மையிலேயே அக்கறை
கொள்வதில் தங்களது சக்தியை செலுத்துவார்கள், அப்படி இல்லாத சிலருக்கு எந்தவிதமான
கருத்தும் இருக்காது அவர்கள் வெறுமையாக இருப்பார்கள்.
இப்போது இதையே வலது கண்ணை மூடிக் கொண்டு இடது கண்ணை திறந்து கொண்டு செய்து
பார். இடது கண் பெண் பாகத்தை சேர்ந்தது. அது உடலின் இடது பாகத்தை சேர்ந்தது. நான்
வேலை செய்கிறேன்….. ஆமாம், அது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் அதிகமாக வேலை
செய்கிறேன் என்று சொல்லும். இந்த உரையாடலை தொடரு. அதிகமான வேலையா சரி…. இப்போது உன்னிடம் பணம் மிகவும் அதிகம் சேர்ந்துவிட்டால் உன்னுடைய எந்த வேலையை தொடர்ந்து செய்வாயா, எந்த வேலையை விட்டு விடுவாய் என கேள். எப்போதெல்லாம் பெண்மை அந்த விஷயத்தை தொடர விரும்பவில்லையோ அப்போதெல்லாம் அந்த ஆறு விஷயத்தில் அடுத்த விஷயத்திற்குப் போ. இறுதியில் அவளிடம் மிக முக்கியமான மூன்று விஷயங்களை 1,2,3, என வரிசைபடுத்தச் சொல்.
இந்த தகவல்களை வெளிக் கொண்டு வருவது மிகவும் எளிதான செயல். ஆனால் அதன் மூலம்
விஷயத்தை தெரிந்து கொள்வதற்குத்தான் மிகவும் திறமை தேவை. புன்யாவின் இரண்டு
பாகங்களில் ஒன்று செயலற்று இருப்பதை சோம்பேறி என்று குறிக்கப்பட்டதின் மூலமாக
மற்றொரு பகுதி ஆளுமை செய்கிறது என்பது அனுபவப்பட்ட பயிற்சியாளராக எனக்குப்
புரிந்தது. ஏனெனில் யாரும் தங்களை தாங்களே சோம்பேறி என்றழைத்துக் கொள்ள மாட்டார்கள்.
மற்றவர்களைத்தான் சோம்பேறி என்று குறிப்பிடுவார்கள். அதிகாரம் பெற்ற இடத்தில்
இருக்கும் ஒருவர் வித்தியாசமாக இருக்கும் மற்றவரைப் பற்றி கூறுவது மதிப்பீடு செய்வது
ஆகும். யாரும் உண்மையில் சோம்பேறி அல்ல. அவர்கள் செயலற்று இருக்கலாம், அதற்குக்
காரணம் அவர்களுக்கு மிகவும் ஆர்வம் தருவது எது என்று இன்னும் அவர்கள் கண்டுபிடிக்க
வில்லை. பல்வேறு காரணங்களால் அவர்கள் முன்னே வர இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆகவே அவர்கள் தாழ்வான, பலவீனமான கீழ்படிதல் இடத்தில் இருக்கிறார்கள்.
இருவரில் ஆளுமை பெற்றவர் தன்னுடைய செயல்களினால் இடத்தையும் நேரத்தையும் நிரப்புகிறார், மேலும் இவர் மற்றவர் தன்னுடைய முக்கியத்துவமான செயல்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். தாழ்மை கொண்ட குணம் அடக்கிவைக்கப்படுதல் சில சமயங்களில் விஷயங்களை இன்னும் கெடுதலாக்கிவிடும். அந்த மறைந்திருக்கும் பகுதிக்கு அதனுடைய லட்சியத்தை அடைய
அதனுடைய சக்தி அதற்கே தேவைப்படும், அதன் சக்தி மற்றவர்களுடைய லட்சியத்தை சென்றடைய
செலவிடப்பட வேண்டிய தேவை இல்லை.
எப்படி, ஏனெனில் வாழ்க்கை ஒரு சைக்கிளில் பயணம் செய்வதைப் போன்றது. ஒவ்வொரு
பாகத்திலும் அதற்கான நேரம் வரும் போது சக்தியை பயன்படுத்தி அதை மிதித்தால்தான்
குறிப்பிட்ட லயத்தில் செயல்பட்டு வண்டி செல்லும். ஆளுமை செய்யும் பகுதி தனக்கு
உதவி செய்யுமாறு அடுத்த பகுதியை கேட்பது இரண்டு கால்களையும் ஒரே பகுதியில்
வைத்துக்கொண்டு மிதிப்பதை போன்றது. எதிர்பக்கத்து பெடலில் யாரும் இல்லையென்றால்
வண்டி ஓடாது, கீழே விழுந்துவிடும். அங்கே மிதிக்க வில்லையென்றாலும் அங்கே ஒருவர்
இருந்தாக வேண்டும்.
தாழ்மை கொண்ட பகுதி தன்னுடைய சக்தியை ஆளுமை செய்யும் பகுதிக்கு எதிர்பதமாக
செலுத்த வேண்டும். அவர்கள் தங்களுடைய பெடலை மதிக்க அவர்களுக்கு உதவ வேண்டும்.
அதற்கு வாழ்வில் எந்த முக்கியத்துவமும் கிடையாது. ஆளுமை பகுதிக்கு இதைப் பற்றிய
எந்த எண்ணமும் இருக்காது. பதிலாக ஆளுமை
பகுதிக்கு வாழ்வில் அடைய வேண்டிய லட்சியங்கள் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும். இந்த
லட்சியங்கள் வாழ்வின் அன்பை நோக்கி செல்லுகிறதா அல்லது பயத்தை நோக்கி செல்லுகிறதா
என்பதை நீ கவனிக்கலாம்.
நான் சில விஷயங்கள் பட்டியல் தருகிறேன்
பயத்தை அடிப்படையாக கொண்டவை
வசதி
பாதுகாப்பு
பணம்
அங்கீகாரம்
அதிகாரம்
மறுபடி மறுபடி செய்தல்
அன்பை அடிப்படையாக கொண்டவை
தன்னை அறிந்து கொள்ளுதல்
தியானம்
படைப்பு
கருணை
அழகு
சிரிப்பு
வேடிக்கை
நீ தளர்வு கொள்ளும்போது பயத்தை அடிப்படையாக கொண்டவை குறைய ஆரம்பிக்கும். அப்படி அவை குறைவதை நீ கவனித்தால் நீ தளர்வு கொள்வதை நிறுத்திவிட்டு அவற்றை உனக்கு தேவைப்படும் அளவு
உயர்த்திக்கொள். இதை உன்னை பதட்டம் கொள்ளச்செய்யலாம். நீ இது போல அந்த அளவை தக்க
வைத்துக் கொள்ளும் முயற்சியை செய்யாவிட்டால் நீ எதை இலக்காக வைத்திருக்கிறாயோ அதை
உன்னால் அடைய முடியாமல் போய்விடும். அதற்கான சக்தியை நீ இழந்துவிடுவாய்.
அன்பை முக்கியத்துவமாக கொண்டவை நீ தளர்வாக இருக்கும்போது அதிகமாகும். அவை
அதிகமாவதை உணரும்போது நீ இன்னும் அதிகமாக தளர்வு கொள்ளலாம். முயற்சியின்றியே நீ
அடைய நினைப்பதை நீ சென்றடைந்து விடுவாய்.
இந்த ஆளுமை கொண்ட பகுதி நேசத்தை முக்கியத்துவம் கொண்டதாக வாழும்போது அது
இரண்டு பகுதிக்கும் தலைமையேற்கும். ஏனெனில் அது நேசிக்கும்போது அது மற்ற பாகமும்
வளரவும், விரியவும், தன்னை வெளிப்படுத்தவும் தேவையான அனைத்து உதவிகளையும்
செய்யும்.
ஆளுமை கொண்ட பகுதி பயத்தை அடிப்படையாக கொண்டதாக வாழும்போது அது அடுத்த பாகம்
வளரவோ, அதன் சொந்த விஷயங்களை செய்வதன் மூலம் அது சுயமரியாதையை வளர்த்துக் கொள்ள
உதவவோ விடாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அது இந்த அமைப்பின் தலைமையாக இருக்க அனுமதிக்கப்படக் கூடாது. இந்த பலவீனமான பகுதி மிகச் சிறியதாக இருந்தாலும் கூட எங்ஙனம் அன்பின் ஊற்றை கண்டுபிடிப்பது என்பதற்கு அனுதிக்கப்பட வேண்டும், அதைத்தான் முக்கியமான
தருணங்களில் முன்னிறுத்த வேண்டும்.
இதை எப்படி புரிந்து கொள்வது மற்றும் அதிக தெளிவு பெறுவது
இப்போது புன்யோவின் விஷயத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அவளது ஒரு பாகம்
வேலை செய்து பணம் சம்பாதிக்கிறது, ஆனால் அதன்மூலம் பதட்டமடைகிறது, மற்றொரு பகுதி
கலையுணர்வு கொண்டது, செயலற்றது-சோம்பேறி அல்ல- ஓய்வாக இருப்பது. அவள் செய்ய
வேண்டியது உண்மையில் இந்த பலவீனமான பாகம் வாழ்வில் செய்ய விரும்புவது என்ன என்பதை
கண்டுபிடிக்க வேண்டும். இந்த கலையுண்ர்வும் தளர்வும் அதில் அன்பு இருப்பதை
காட்டுகின்றன. ஆனால் அதன் செயலற்ற தன்மை அதன் பாதையில் அது செல்ல முடியாமல் அது
தடுக்க பட்டிருப்பதை காட்டுகிறது.
இந்த முழு வீச்சில் உள்ள பாகம் வாழ்வை ஆக்ரமிப்பு செய்திருப்பதிலிருந்து
தன்னுடைய பாகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும், இறுதியில் அது 50% மேல் இருக்கக் கூடாது. இதன்மூலம் மற்ற பாகம் பரிசோதனை செய்யவும், தவறு செய்யவும், அது அதன் விதத்தில் புதுவிதமான வகையில் வளரவும் அதற்கு வாய்ப்பு தரப்பட வேண்டும். ஓஷோ நியூஸ் பத்திரிக்கை நிலைகுலைந்து போய்விடும் என நான் நினைக்கவில்லை. அது தொடர்ந்து வர வேண்டும் என நினைக்கும் ஏராளமானோர்
இருக்கின்றனர். இந்த மெலிதாக இருக்கும் பகுதியிலிருந்து வரும் புதுவகையான அணுகுமுறையும் அதன் ஆளுமையும் மேலும் பலரை ஈர்க்கவும் கூடும். அவர்களை அதில் ஈடுபடுத்தவும் செய்யும்.
புன்யோவுக்கு ஏற்கனவே இந்த உரையாடல் மற்றும் உடல்மொழி பற்றியும் தெரியும்
என்பதால் இந்த இரண்டு குணநலன்களுக்கிடையே என்ன நடக்கிறது என்பதை அவளால் எளிதாக
கண்டுபிடித்து விட முடியும். அவள் ஒவ்வொரு பாகமும் பேசவும் தங்களை
வெளிப்படுத்தவும் வாய்ப்பு தர முடியும். அவை அவளுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது
தங்களுக்குள் பேசிக் கொள்ள முடியும். அவை சொல்வது எதுவாக இருந்தாலும் மற்ற பாகம்
எதை விரும்புகிறது என்பதில் தெளிவு பெற முடியும். ஒரு முறை இது தெளிவடைந்து
விட்டால் பின் எந்த பாகமும் பலவீனமாக இருக்க வேண்டியதில்லை. ஒதுக்கப்பட்ட பாகத்திற்கு
அதிக இடம் கிடைப்பதுபோல ஒரு நல்ல வழி உருவாக்க புன்யோவால் முடியும்.
தனிப்பட்ட ஸ்டார் ஸப்பரீ குழு
ஸ்டார் ஸப்பரீ குழுவில் ஆரம்பத்தில் இந்த உள் ஆண் பெண் பற்றி என்ன நிகழ்கிறது
என்பதைப் பற்றி ஒரு விதமான அறிவுசார்ந்த ஒரு யூகம் செய்வேன். மக்களுடன் என்னுடைய
பழைய அனுபவங்களின் வாயிலாக மேம்போக்காக ஒரு முடிவை வைத்துக் கொண்டு பின் இந்த குழு
நடக்கும்போது நான் யூகம் செய்தது சரியா என்று ஒரு துப்பறியும் நிபுணர் போல ஆய்வு
செய்து பார்ப்பேன்.
சாதாரணமாக என்னுடைய ஆரம்ப யூகத்திற்கு சில கணங்களே எடுக்கும், ஆனால் இந்த முறை
எனக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. ஏனெனில் நான் விஷயங்களை விவரிக்க வேண்டி
இருந்தது. உண்மையான சிகிச்சையில் நான் நோயாளி சொல்வதை கேட்டவுடனேயே நான் நேரிடையாக
உடல் மீது எனது பரிசோதனையை ஆரம்பித்து விடுவேன். இரண்டு பாதங்களையும் தொடுவதன்
மூலம் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதையறிந்து ஏழு சக்கரங்களையும்
தொட்டுப்பார்த்து உடலின் அன்பின் சக்தி எந்த அளவு வெளிப்பாடாக இருக்கிறது என்பதை
கண்டறிந்து பின் ஆண்பெண் நிலை என்ன என்பதை உணர்ந்து கொள்வேன்.
பின் முன் சொன்னது போல கண் பட்டியை உபயோகித்து ஒரு சமயத்தில் ஒரு கண் மூலமாக
பேசி இரண்டு கண்களையும் கேள்வி கேட்டு பதில் வாங்குவேன். நீங்கள் இதை பல விதமாக
பரிசோதனை செய்ய வேண்டும், ஆனால் எனக்கு எது சிறந்த கேள்வி என்று தெரியும், ஏனெனில்
தகவல்கள் சக்தி நிலையிலிருந்து வர வேண்டும். கேள்வி கேட்ட பின் புதிதாக ஏதாவது
தெரிந்து கொள்வதற்கு பதிலாக நான், ஆண் பெண் பாகங்கள் உண்மையாக பதில் சொல்கிறதா அது
உடலுடன் ஆழமாக தொடர்பு கொண்டுள்ளதா என்பதைத்தான் கவனித்துக் கொண்டிருப்பேன்.
பின் இரண்டு நாற்காலிகளை எதிர்எதிராக போட்டு வைப்பேன், ஒன்று ஆண்
பாகத்திற்க்காக, மற்றொன்று பெண் பாகத்திற்காக. இவர்கள் இருவரும்தான் ஒருவரோடு
ஒருவர் பேசப் போகிறார்கள். ஆனால் முதலில்
நான் என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு இதைப் பற்றி அறிமுகம் செய்து வைப்பேன். அதற்கு
பத்து நிமிடங்கள் பிடிக்கும். பின் நான் அவர்கள் தங்களது உடல் மொழியோடு இந்த
உரையாடலை தொடங்க செய்வேன்.
என்னுடைய ஆர்வம் அந்த உரையாடலில் இல்லை என்பதை நான் ஒத்துக் கொண்டாலும் அது
உதவி செய்யும். என்னுடைய ஆர்வம் அவர்களது இருப்பில்தான் இருக்கும், அவர்கள்
இருவருக்கும் தியானத்தின் கூட தொடர்பு இருக்கிறதா என்பதை அறிவதில்தான் இருக்கும்.
அப்படி யாருக்கு அதில் தொடர்பு இல்லையோ அவர்களுக்கு அதனுடன் கூட தொடர்பு
ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அந்த உரையாடலில் எனக்கு ஒரு ஐடியா கிடைக்கும். அப்படி
இருவரும் தொடர்பு கொண்டு விட்டால் பின் அவர்களது பந்தம் மிக நன்றாக போய்க்
கொண்டிருக்கும், ஏனெனில் அதுதான் வளப்படுத்தும், இருப்பிலிருந்து இருப்பிற்கு என
செல்லும். இருவரும் இணைந்த அந்த வினாடியில் இருந்து பலவீனமானது தனக்கு சரியான
இடத்திற்கு வந்து மிகவும் சந்தோஷமாகவும் விளையாட்டாகவும் அதை உபயோகிக்கவும்,
பலமானது மற்றது தனக்குரிய இடத்திற்கு வர உதவியாக செயல்படவும் வெகு நேரமாகாது.
புன்யோவுக்கு ஒரு சிகிச்சை தேவை என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் அவளுக்கு
தேவையான அனைத்தும் அவளிடமே இருக்கின்றன.
அடுத்தமுறை நாங்கள் சந்திக்கும்போது அவள் தன்னுடைய மறுக்கப்பட்ட பாகத்திற்கு அதிக
இடம் கொடுத்து, சோம்பேறி என்றழைக்கப்பட்டது படைப்புக்குரியதாக மாற்றியிருப்பாள்.
இந்த பதட்டத்துக்குரிய உணர்வு இல்லாமல் போய்விடும். ஏனெனில் இரண்டு பாகங்களும்
மற்றவரை விலைமதிப்பற்ற துணையாக உணர்ந்திருப்பார்கள்.