நிவேதனோ – ஓஷோவின் டிரம்ஸ் வாசிப்பாளரின் பேட்டி – பகுதி – 1
நிவேதனோ பிரேசிலில் வளர்ந்தவர். அவர் தன் வாழ்க்கையை ஒரு பலவாத்திய கலைஞராகத்
துவங்கினார். அவர் சாந்தனா, மைல்ஸ் டேவிட், மற்றும் ஜான் மேக்டாக்லின்
போன்றவர்களுடன் வெதர் ரிப்போர்ட், பிங்க் பூயுட் போன்ற இசை ஆல்பங்களில்
வாசித்துள்ளார். எழுபதுகளில் பூனா வந்த அவர் ஓஷோவிடம் சன்னியாஸம் பெற்றுக் கொண்டு
ஆசிரமத்திலேயே வாழ்ந்தார். அவர் கம்யூனில் தோட்டக்காரனாகவும் தையல்காரராகவும்
பாத்திரங்களை சுத்தம் செய்பவராகவும் இருந்திருக்கிறார். தினமும் அவர் இசையும்
வாசித்திருக்கிறார். அவர் இப்போது பிரேசிலில் இருக்கும் காட்டில் தன்னுடைய கம்யூனை
அமைத்து அதில் வசித்து வருகிறார். இந்த வேனிற்காலத்தில் அவர் மிலரோபாவுடன் உலகம்
முழுவதும் பயணம் சென்று டிரம்ஸ் வாசிக்கப் போகிறார்.
நிவேதனோ தான் ஓஷோ கம்யூனில் ஒரு தோட்டக்காரனாகவும் ஒரு இசையமைப்பாளனாகவும்
வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி புன்யோவிடம் பகிர்ந்து கொள்கிறார்.
நிவேதனோ என்பது உங்களது பெயர் மட்டுமல்ல, அது மேளத்தை அடி என்று சொல்வதற்க்கு
முன் சொல்லப்படும் ஒரு சிக்னலும் கூட. ஓஷோ உங்களது பெயரை அழைக்கும் போது நீங்கள்
எப்படி உணர்வீர்கள் ?
ஞானிகள் எப்போதும் மிகுந்த நகைச்சுவையாளர்கள். அவர்களின் சக்தி பெருக்கத்துடன்
லயப்படுபவர்கள் யாவரும் நகைச்சுவை உணர்வில் கரைந்து போய்விடுவார்கள். இதுதான்
என்னைப் பொறுத்தவரை அவருடைய மிகப் பெரிய சூட்சமம். நான் என்று அறிந்திருந்த
அனைத்தையும் அழித்து முற்றிலுமாக என்னை விடுவித்து விட்டார். அவர் என்னை தூக்கி பார்வைக்கு
வைத்துவிட்டார். அவர் அந்த பெயரை தண்ணீரிலும் பாறையிலும் பொறித்து வைத்ததற்காக
நான் மிகவும் நன்றியோடு இருக்கிறேன். ஆனால் அதைவிட என்னுடைய பெயரற்ற உண்மையான
ஆன்மாவை கண்டுபிடிப்பதற்கு உதவி செய்ததற்காக அதிக நன்றியோடு இருக்கிறேன். தண்ணீர்
பாறையை கரைத்துவிட்டது. அவர்தான் தலைவர், அவர்தான் அனைத்தும் என்ற போதும்
ஒருபோதும் அவரது நிவேதனோ என்ற அழைப்பு ஒரு ஆணையாக இருந்ததேயில்லை. ஒவ்வொரு முறை
அவர் அந்த பெயரை உச்சரிக்கும்போதும் மிகவும் நேசத்துடனும் மிகவும் அழகோடும்
அழைத்தார். அது ஒரு கச்சாமி நேரம், அவரது பாதங்களை தொட்டு இசை போய்க்கொண்டே
இருக்கிறது.
ஒரு ஆணை என்பது அடிபணிய வேண்டிய ஒன்று. ஆனால் அவரது அழைப்பு ஒருபோதும் ஆணையாக
இருந்ததேயில்லை…………………….நான் அவரது சுவாசத்தை கவனித்துக் கொண்டே
இருந்து அவரது அழைப்பின் போதே மேளத்தை அடித்துவிடும் சில சமயங்களும் உண்டு.
நிவேதனோ என்ற அலுப்பூட்டும் அழைப்பில்லாமல் மேள சத்தம் மட்டுமே கேட்கும். தியானத்தின்
போது கண்களை திறந்து வைத்துக் கொண்டு இரு என்று அவர் என்னிடம் கூறியிருக்கிறார். ஆகவே
நான் அவருடைய ஒவ்வொரு மெல்லிய அசைவையும் மாறும் அவருடைய சுவாசத்தையும் கவனமாக
இருந்து கூர்ந்து பார்த்து அவர் அழைக்கும் போதே மேளத்தை ஒலித்து விடுவேன்.
அந்த விளையாட்டு மேலும் மேலும் ஆழமாக மாறியது. ஏனெனில் கால நேரத்தை
ஏறத்தாழ்வாக செய்து என்னை வேடிக்கை செய்ய முயற்சி செய்வார். அவர் அவருடைய
சுவாசத்தை மாற்றி மாற்றி விளையாடுவார். நான் மேளத்தை அடிப்பதை தவற விடாமல் அவருடைய
லயத்திலேயே இருந்து முயற்சி செய்வேன். பல மாதங்கள் இது போய்க் கொண்டே இருந்தது.
இதை யாரும் கவனிக்கவே இல்லை. இது தனிப்பட்ட வகையில் பிரபஞ்சத்துடன் கரைந்து
போய்விட்ட தன்னுணர்வுடன் எனக்கு கிடைத்த மிக அரிதான அற்புதமான அனுபவமாகும்.
புன்யோ, உங்களுடைய மேளத்தை உறையிலிருந்து எடுத்து உங்களுடைய வரவேற்பறையில்
வைத்து ஒரு அடியாவது அடித்து குருவை டீ சாப்பிட அழையுங்கள். உணர்வோடு உண்மையில்
யார் அழைக்கிறார்களோ அவர்களிடம் அவர் வருகிறார். மேலும் அவர் அதை மிகவும்
விரும்புகிறார். இறைமையை அழைக்கும் யாரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகளே.
ரேஞ்சில் இருக்கும் நேரங்களில் அவர் பவனி நேரங்களில் வாசித்த அனுபவம் உங்களைப்
பொறுத்தவரை எப்படி இருந்தது ?
அவரது பவனி வரும் காட்சியே பார்க்க மிகவும் அற்புதமான அனுபவமாக இருக்கும். உலகின்
பல பாகங்களில் இருந்து வந்திருக்கும் அவரது ஆயிரக்கணக்கான சீடர்கள் இந்த புதுயுக
புத்தரை, இந்த ஞானியை பார்க்க, கலவி எனப் பொருள்படும் ஆங்கில வார்த்தையான பஃக்
என்பதையே ஒரு தியானமாக மாற்றிய இந்த முரண்பாடான இந்த ஞானியை பார்க்க வந்து கூடி
நிற்பார்கள். இந்த கலவி என்ற வார்த்தையையும் பிரார்த்தனை என்பதையும் ஒன்றாக்கிய
இந்த ஒரு செயல் மட்டுமே இறைமையை நோக்கிய அவரது அணுகுமுறைக்கு ஒரு அரிதான
எடுத்துக்காட்டாகும். அடுத்து வரக்கூடிய பல தலைமுறைகளிலும் 99 சதவிகித
மனிதர்களுக்கு இது ஜீரணிக்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கும். இது வரை இந்த
உலகத்திலேயே இது போன்ற ஒன்று நிகழவேயில்லை.
ஒரு நாள், ரூபேஷ் மற்றும் வினோத்கன்னாவுடன் ஓஷோவின் தோட்டத்தில் குறும்பு
செய்து கொண்டிருக்கும் போது அந்த பவனியின் போது இசை இன்னும் வேகமானதாக, நடனம்
சேர்ந்த கொண்டாட்டமாக இருந்தால் அவரை காண நிற்கும் மக்களுக்கும் அவரது
சிஷ்யர்களுக்கும் இன்னும் அதிக உற்சாகமானதாக இருக்கும். அது இன்னும் அதிக
சிறப்பானதாக அமையும் என நினைத்தோம்.
அன்றைய தினம் என்னுடைய நெருங்கிய நண்பி பெயிண்ட் பட்டறையில் வேலை செய்யும்
ஒருவருடன் உறவில் இருந்தாள். என்னுடைய மேளம் வெறுமனே மொட்டையாக இருந்தது. அதில்
ஒரு கடற்கரை ஓவியத்தை வரைய நினைத்தோம். ஆகவே பெயிண்ட் பட்டறையில் இரவில் வேலை
செய்து படம் வரைந்தோம். அடுத்தநாள் பவனியின் போது படம் வரைந்த மேளத்துடன்
கொண்டாட்டத்தை ஆரம்பிக்க நினைத்தோம். ஆனால் படம் வரைந்து முடித்தபின் பார்த்தால்
நாங்கள் வரைய நினைத்தது போல இல்லாமல் வேறு ஏதோ இடம் வந்திருந்தது. இதில் மிக
முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் நாங்கள் அப்போது வரைந்திருந்த
படத்தில் வந்திருந்த இடத்தைப் பற்றி அப்போது எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால்
29 வருடங்கள் கழித்து பிரேசிலில் இப்போது நான் வசித்துக் கொண்டிருக்கும் பழண்டா
கேம்போ அலிகிரி பகுதி அதேபோல உள்ளது. எனவே குருவின் புதிய மனிதன் என்ற திட்டம்
ஏற்கனவே உருவாகிவிட்டிருந்தது. நாங்கள் வசிக்கும் இந்த கெம்போ அலிகிரி பகுதியை
நாங்கள் புதிய மனிதனின் இருப்பிடம் என்று அழைக்க அதுவும் ஒரு காரணம்.
படம் வரைந்த மேளத்தை காய வைத்து விட்டு நாங்கள் வேலைக்கு சென்றுவிட்டு மதிய
நேரம் திரும்பவும் அந்த மேளத்தை எடுத்துக் கொள்ள கூடினோம். அந்த நேரம் அந்த
பகுதியின் பொறுப்பாளர் அங்கே இருந்ததால் நாங்கள் மிகவும் சத்தமில்லாமல் வந்ததே
தெரியாமல் மௌனமாக கூடி அதை எடுத்துக் கொண்டு வெளியே ஓடி வந்து விட்டோம். ஏனெனில்
நாங்கள் மாலையில் பவனி நேரத்தின் போது அது வாசிக்க மிகவும் ஆவலாக இருந்தோம். அது
போன்ற ஓவியம் வரைந்து வைத்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
மாலையில் பவனி நேரத்தின் போது ஓஷோ அந்த மேளத்தை பார்த்ததும் அதை அடையாளம்
கண்டு கொண்டார். அவரது புன்னகை அன்று மிகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆழமானதாகவும்
இருந்தது. ஓ, நீ அந்த செய்தியை புரிந்து கொண்டு விட்டாயா என்று கேட்பது போல
இருந்தது. அன்றிலிருந்து அவர் எங்கள் அருகில் நிச்சயம் காரை நிறுத்துவார், அவர்
இருந்தவரை மேளத்தை தெய்வீகத்திற்க்கான வாய்ப்பாக, புனிதமான கருவியாக கருதி அதற்கு
அவர் மிகுந்த மதிப்பளித்தார். அவரது மௌனத்தின் போதும், அவர் அமைதியாக
அமர்ந்திருந்த கால கட்டங்களிலும் யார் அதை இசைக்க விரும்பினாலும் அதற்கு
அனுமதியளித்தார்.
கொண்டாட்டத்தோடு கூடிய எங்களது குடும்பத்தில் அவரது பவனி என்பது மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்தது. என்னைப் பொறுத்தவரை அவரது முன்னிலையில் நிகழ்ந்த அத்தனை
நிகழ்வுகளும் மறக்க முடியாத அற்புதமான அனுபவங்களே. மேளத்தை இசைத்து, குருவில்
கலந்து, அன்பை உணர்ந்து, பக்தியில் கரைந்து, சரணாகதி அடையலாம்.
அடிப்பதில் சில மேளங்கள் முக்தியடைந்து விட்டன என நான் கேள்விப்பட்டேன். அதைப்
பற்றி நீங்கள் ஏதாவது சொல்ல முடியுமா ?
கதைப்படி, ஒரு மேளம் என்பது எப்போதும் முக்தியடைந்து விடும். அது ஏற்கனவே
வெறுமையாகிவிட்ட ஒன்று, அது எப்போதும் நடனத்தை வெளிக்கொண்டு வர பொறுமையாக
காத்திருக்கிறது. நான் உனக்கு கொடுத்த அந்த சிறிய மேளம், ஓஷோவே அதன் சப்தம்
ஆனந்தத்தை கொடுக்கிறது என்று கூறிய மேளத்தின் ஜோடியாகும். நீ கொடுத்து வைத்தவன்.
நான் இந்த மேளங்களை பிரேசிலில் இருந்து 1981 ல் இந்தியா எடுத்து வந்தேன். ஆனால்
அவை மிகவும் பயன்பட்டது, ரஜனீஷ்புரத்தில் நடந்த பவனிகளின் போதுதான். இசையின் மூலம்
மனமற்ற நிலையை அடையும் ஓஷோவின் நோக்கத்திற்க்கு மிகவும் பயன்பட்டது அங்கேதான்.
ஆனால் ரேஞ்சில் இருந்த பிரச்னை அரசியல்தான். எங்களது அன்பை உரத்து வெளியே
சொல்ல மேளங்கள் உபயோக பட்டன. அந்த அதிர்வுகள் ஆழமான அமைதியை உருவாக்கின. லாவோட்ஸூ
வை சுற்றி இருந்த மலைகளும் குன்றுகளும் கூட அந்த அதிர்வை சந்தோஷமாக அனுபவித்தன.
ஆகவே ஓஷோ தினமும் நடந்த அந்த கொண்டாட்டத்தை விரும்பினார். ஆனால் பொறுப்பில் இருந்த
அந்த பெண்ணால் அந்த விஷயத்தை சரியாக கையாள முடியவில்லை. எனவே அரசியல் ரேஞ்சை கீழே
வீழ்த்திவிட்டது.
நீங்கள் உங்களுடைய குழுவின் கூட சேர்ந்து வாசித்த மாலை நேர சங்கமிப்பு இசைதான்
அந்த நேரத்தின் மிகச் சிறந்த இசை என்று ஓஷோ கூறியுள்ளார். ஓஷோபா மிகுந்த சக்தியான
சம்பா இசை அது என்று கூறியுள்ளார். அதை எப்படி உருவாக்கினீர்கள்,? ஆரம்பத்திலிருந்து அது எப்படி உருவானது என்று
நினைவிருக்கிறதா?
நான் நியூயார்க் – யில்
இருந்த கடைசி வருடங்களில் மன்ஹாட்டனின் வீதிகளில் தினமும் வாசிப்போம். என்னுடன்
மேளத்தை வாசிக்க ஒரு குழு இருந்தது. 5 வது வீதியும் பிளாஸா ஓட்டல் இருந்த கெலம்பஸ்
சர்க்கிளும்தான் எங்களது பகல் நேர வாசிக்கும் இடங்கள். இரவில் நாங்கள் பிராட்வே
சென்று அங்கே தியேட்டரின் எதிரே பிளாட்பாரத்தில் வாசிப்போம். பிளாட்பாரத்தில்
அப்போது நடப்பவர்கள் யாருமிருக்கமாட்டார்கள். அது மிகவும் சிறப்பானதாக அமைந்தது.
அந்த இசை கேட்பவர்களை சுண்டி இழுத்தது. அது உடனடி பலன் தந்தது. எங்களுக்கு வாசிக்க
வாய்ப்பும் அதன் மூலம் நல்ல பணமும் கிடைத்தது. கற்பனை செய்து பாருங்கள், நல்ல மதிய
நேரம் 5 ஆவது அவின்யூவில் -அனைவரும் தொழில்முறை மேளம் வாசிப்பவர்கள் – இந்த
அற்புதமான மேளம் இசைப்பவர்கள் அனைவரும் கூடி எழுப்பும் இசை கேட்க எப்படி இருக்கும்
மேலும் அனைவரும் வேற்று கிரகத்தினர் போலவும் தேவர்கள் போலவும் ஆடையணிந்து கொண்டு
வருவோம். அந்த மேளச்சத்தம் கேட்கும் அனைவரையும் ஒரு கணம் நின்று பார்க்கச்
சொல்லும். வாகன போக்குவரத்தும் ஸ்தம்பித்துவிடும். அது ஒரு அற்புதமான அனுபவம். அதை
அனுபவித்திருந்ததால் நான் இங்கே சக்தி தரிசனத்தின் போது அதை உபயோகித்துப் பார்க்க
நினைத்தேன்.
ஆனால் உள்அரசியல் என்னை செய்ய அனுமதிக்கவில்லை. எனவே நான் காத்திருந்தேன்.
பின் நானும் மிலரோபாவும் இசையை கையில் எடுத்துக் கொள்ளும் ஒரு காலகட்டம் வந்தது.
அது 1989ஆவது வருடம். அப்போது மாலை நேர சங்கமிப்பின் போது பாடல் கிடையாது, மேளம்
மட்டுமே என்று தீர்மானிக்கப்பட்டது. ஓஷோ இதை மிகவும் விரும்பினார். ஆசிரமத்தில்
இருந்த லயம் தாளத்தின் இசையாக மாறியது.
ஒரு முறை ஓஷோ மேளக்காரன் சரியாக
இருந்தால் ஒரு புத்தர் கூட நடனமாடுவார் என்று கூறினார். தொடர்ந்த இந்த ஓஷோ-பாவைப்
பற்றி சில மடையர்கள்தான் புகார் செய்தனர். முக்கியமானவர்கள் என தன்னை நினைத்துக்
கொண்ட சிலர் மாலைநேர சங்கமிப்பு தியானத்தின் போது இசைக்குழு நிற்கும் மேடைக்கு
வந்து மேளக்காரர்கள் கையில் இருந்த குச்சியையும் கையுறையும் பறிக்க முயற்சி
செய்தனர். பார்க்க மிகவும் வேடிக்கையாக இருக்கும். நமது குருவே இதை
அனுபவிக்கும்போது இவர்கள் தங்களது சிறிய மனதை வைத்துக் கொண்டு வந்து இடையூறு செய்ய
முற்படுவார்கள்.
பிரேசிலில் நான் இப்போது முக்கியமான நிகழ்ச்சிகளில் ஓஷோ-பாவை தியானமாக
பயன்படுத்துகிறேன். எங்களுக்கு கனடா, யூரோப், ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து
அழைப்புகள் வருகின்றன. உலகம் முழுவதும் சென்று இசை நிகழ்ச்சி நடத்த ஒரு
சன்னியாசிகள் குழு அமைக்க நான் முயற்சி எடுத்து வருகிறேன். பார்க்கலாம், அடுத்த
வருடம் அது அமையலாம். 9 பேர் கொண்ட ஒரு குழு உலகம் முழுவதும் பயணம் செய்து
ஓஷோ-பாவை வாசிக்க கூடிய வாய்ப்பை பரிசீலித்து வருகிறேன்.
தொடர்ச்சி……………… அடுத்த மாதம்