இதயத்திற்க்கென்றுசொந்தமாக தனிப்பட்ட மூளையும் தன்னுணர்வும் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தன்னுணர்வின் அசலான மையத்தை நோக்கி செல்ல உதவும் இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானது. …………..
சமீப காலம் வரை பொதுவாக தன்னுணர்வின் விழிப்பு மூளையில் இருக்கிறது என்றுதான் நினைக்கப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய கண்டுபிடிப்பு தன்னுணர்வு மூளையிலிருந்து எழுகிறது, உடல் அதன்படி செயல்படுகிறது என்றாலும் இதயம் வெறும் ஒரு பம்ப் மட்டுமல்ல, இந்த செயல்பாட்டில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் ஒரு பாகமும் ஆகும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. விஞ்ஞானிகள், இதயம் தனக்கே உரிய தகவல்களை பெறவும் செயல்படுத்தவும் முடியக்கூடிய தனித்துவமான மூளையும் கொண்ட மிக சிக்கலான ஒரு அமைப்புமாகும் என்பதை இப்போது பார்க்கின்றனர்.
இதயத்தினுள் இருக்கும் நரம்பு அமைப்பு அல்லது இதயமூளை கற்றுக் கொள்ளவும் நினைவுபடுத்திக் கொள்ளவும் மூளையின் செரிபரல் கார்டெக்ஸ் போன்று தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுத்தவும் கூடிய திறமை கொண்டது. மேலும் உணர்ச்சிமயமான செயல்பாடுகள் மற்றும் கேட்டும் கண்டும் உணரும் மூளையின் செயல்பாடுகளில் அனைத்திலும் இந்த இதயமூளை அனுப்பும் குறியீடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதை எண்ணற்ற பரிசோதனைகள் நிரூபிக்கின்றன.
மேலும் மூளையோடும் உடலோடும் இதயத்தை இணைக்கும் கூடுதல் நரம்பு மண்டல கட்டமைப்பு மூலம் இதயம் மூளையுடன் தகவல்கள் பரிமாறிக் கொள்வது மட்டுமின்றி மின்காந்த அதிர்வலை மூலமாக உடல் முழுவதும் தொடர்பு கொள்கிறது. இதயம் உடலைச்சுற்றி மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் மிக அழுத்தமான லயமான மின்காந்த அதிர்வலை மண்டலத்தை உருவாக்குகிறது. மூளை உருவாக்கும் மின்காந்த அதிர்வலையோடு ஒப்பிடும் போது இதயம் உருவாக்கும் மின்காந்த அதிர்வலை உடலின் ஒவ்வொரு அணுவிலும் 60 பங்கு அதிகமான வீச்சுடன் கூடியது. மூளை உருவாக்கும் காந்த மண்டலத்தை விட இந்த இதய காந்த வீச்சு 5000 பங்கு அதிக ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. அதி நுட்பமாக காந்த அளவை மதிப்பிடும் கருவிகள் உடலை விட்டு பல அடி தூரத்திலேயே இந்த காந்த அளவை காட்டுகின்றன.
இதயம் குறிப்பிட்ட கால இடைவெளியில் காந்த துடிப்புக்களை வெளியிடுகிறது. ஆனால் அந்த ஒவ்வொரு துடிப்பும் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் சிக்கலான அமைப்பு கொண்டதாகவும் வித்தியாசப் படுகிறது. உடலில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் இந்த இதய லய காந்த மண்டலத்தின் பாதிப்பு எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. நாம் இதை செயல்படுத்திக் காட்டலாம். உதாரணமாக, மூளையின் லயம் எப்போதும் இதய லயத்துடன் ஒத்து செல்லும். நாம் மிக நன்றாக உணரும் நிகழ்வுகளான அன்பு மற்றும் பாராட்டு பெறுதல் போன்ற சமயங்களில் ரத்த அழுத்தம் மற்றும் மற்ற உடல் நிகழ்வுகளும் இதய லயத்துடன் ஒத்து அமையும்.
முழு உடலும் ஒரே லயத்தில் ஒன்றிணைந்து செயல்பட தேவையான தகவல் எடுத்துச் செல்லும் ஒரு அலை போல இந்த இதய காந்த மண்டலம் செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த இதயத்துடிப்பு சக்தி அலையாக இதயத்திலிருந்து வெளிப்பட்டு, சுரப்பிகளோடும் மற்ற அமைப்புகளோடும் தொடர்பு கொள்கிறது. இந்த அலைகள் மற்ற அமைப்புகளின் செயல்களையும் பயன்களையும் பதிவு செய்யவோ அல்லது பதிவுகளை அலைகளாக மாற்றி உடல் முழுவதும் அந்த செய்திகளை எடுத்துச் செல்லவும் முடியக்கூடிய திறன் வாய்ந்தவைகளாக இருக்கின்றன. இந்த வகையில் தகவல்களை பதிவு செய்யவும் அவற்றை அலைகளாக மாற்றவும் கூடிய இந்த உடலின் செயல்பாடுகள் இந்த உடல் முழுமையும் ஒன்றிணைந்து ஒன்று போலவே இருக்க உதவுகின்றன. அமைப்பு முழுவதிலிருந்தும் தேவையான தகவல்களை பெறவும் அவற்றை இடம் மாற்றிக் கொள்ளவும் தேவையான முறைமையை இந்த தொடர்பு கட்டமைப்பின் மூலம் தானாகவே உடல் செய்து கொள்கிறது.