1. உங்களது வாழ்வை ஓர் அழகியல் அனுபவமாக்குங்கள். அப்படி அழகியல் அனுபவமாக மாற்றப் பெரிதாக ஒன்றும் தேவையில்லை. வெறும் அழகான உணர்வு நிலையே தேவை ஒரு நுண்ணுணர்வுள்ள ஆன்மா. அதிக உணர்வு கொள்ளுங்கள், அதிக உணர்ச்சியுடனிருங்கள். அப்போது நீங்கள் அதிக ஆன்ம உணர்வும் பெறுவீர்கள்.
2. ஒருமையில் இருக்கும் துணிவை நுண்ணறிவு தருகிறது. மேலும் படைப்புத் தன்மையையும் நுண்ணறிவு தருகிறது. படைப்பதற்கு மிகப் பெரிய பசியும், மிப்பெரிய தவிப்பும் எழுகிறது. அதற்குப் பின்தான், அதன் தொடர்ச்சியாகத்தான், நீங்கள் மகிழ்ச்சியடைய முடியும், நீங்கள் பரமானந்தமடைய முடியும்.
3. வாழ்வுக்கு மிகப்பெரிய ஒட்டுமொத்தமான ஆம் என்பதையே நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன். நான் உங்களுக்குத் துறந்துவிடுதலைக் கற்பிக்கவில்லை, மாறாக மகிழ்ச்சியடைதலையே கற்பிக்கிறேன். மகிழ்ச்சி கொள், மகிழ்ச்சி கொள், மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன், மகிழ்ச்சி கொள், ஏனெனில் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும்போது கடவுளுக்கு மிக அருகில் வந்து விடுவீர்கள்.