வளம்

 

 பொருள் ரீதியாகவோ ஆன்மீக ரீதியாகவோ இல்லாமல் வளமாக செழுமையாக வாழு. பொருளாதாரத்திலா ஆன்மீகத்திலா எதில் வளமாக வாழ்கிறாய் என்பது கேள்வி அல்ல. நீ வளமாக செழுமையாக வாழ வேண்டும். அது இயற்கையானது, இருப்பில் பூத்து குலுங்கி மலர்வதுதான் உன்னுடைய மிக அடிப்படையான தாகம்.
 

பிறப்பையும் இறப்பையும் கடந்தவர்களுக்கு வாழ்வு பொங்கி வழிதல் நிகழ்கிறது.
 

பிரபஞ்சம் கஞ்சத்தனமானதல்ல. அது பெரும் வளத்துடன் பொங்கி வழிகிறது.
 

ஒருவர் இதயத்தின் வெகுளித்தனத்துடன் ஒரு பொங்கி வழியும் வாழ்வை வாழ வேண்டும்.
 

மௌனமாக இரு. எல்லாமும் தானாகவே உன்னிடம் வரும், பொங்கி வழியும் அளவிற்கு வரும்.
 

முடிந்தே போகாத அளவு வளமாக உள்ள இந்த வாழ்வின் ஆதாரத்துடன் உன்னை இணைத்துக் கொள்.
 

பிரபஞ்சத்தின் இயல்பே பொங்கி வழிவதுதான்.

ஒளி

நல்லது கெட்டது என்பதைப் பற்றியோ நெறிமுறைகளைப் பற்றியோ கருத்துக்களைப் பற்றியோ கவலைப்படாதே. நல்லது உன்னுடைய உள் ஒளியை நிழலைப் போல தொடர்ந்து வரும். ஆகவே உன்னுடைய உள் ஒளியைப் பற்றி அக்கறை கொள். அதுதான் தியானம். அதே விதமாய் வாழ்வை வாழு. உனது கவனத்தை அதிக தீவிரமானதாக மாற்று. மேலும் மேலும் அதிக கவனமாக இரு.

உனக்கு நீயே ஒளியாக இரு என்பதே புத்தரின் இறுதி வார்த்தைகள்

ஒளி இருளை போக்குவது போல அன்பு பயத்தை போக்கி விடும்.

நீ எதை செய்தாலும் எப்போதும் தன்னுணர்வுடன் உனது உள் ஒளியில் செய்.

உன்னிடம் ஒளி இருந்தால் அது பரவும், மற்றவர்களிடமும் அது செல்லும்.

உயரிய நிலையுடைய வெறுமை ஒளி போன்றது, அது உதிக்கும் சூரியன் போன்றது.

ஒளி பொருந்திய இதயத்தோடு இரு, காலடித்தடமும் ஒளி பெறும்.

நிலைகொள்ளுதல் – நிலைபெறுதல்

இந்த கணத்தில் இங்கே வாழு. ஏனெனில் இதுதான் உண்மையான வாழ்க்கை. இப்போது இருப்பதுதான் நிஜம். நெறிமுறைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்த கணமே நீ காலத்தின் உலகில் நுழைந்து விடுகிறாய், உண்மையான கணத்துடன் தொடர்பை இழந்து விடுகிறாய். நிகழ்காலத்தில் நிலை பெற்றிருத்தலை இழந்துவிடுகிறாய். அப்படித்தான் மனம் உருவாகிறது.

விட்டுக் கொடுத்து செல்வதற்க்கு பதிலாக நிலை கொள்ளுதலை, வேரை, தனித்தன்மையை கண்டுபிடி.

நிலைகொள்ளுதல் தகவல் அறிவுடன் சம்பந்தப்பட்டதல்ல, அது இருப்புடன் சம்பந்தப்பட்டது.

மௌனத்தில் மூழ்கு, அதை அனுபவி. அதன் சுவையை அதன் இனிமையை அற்புதமான நிலை பெறுதலை அனுபவி.

முதலில் ஒருவர் ஆழ்ந்த நிலை பெறுதலை பெற வேண்டும். வேருக்கு, அடி மையத்துக்கு வர வேண்டும்.

விழிப்புணர்வுக்கு அதற்கென பொருள் எதுவும் கிடையாது, அது உன் இருப்பில் நீ நிலை கொண்டிருத்தலே.

புத்தரின் நிலை பெறுதலின் முக்கியத்தன்மை ஆனந்தம்.