ஓட்டம்

நீ சக்தி ஓட்டமாக உணரும் சில கணங்கள் இருக்கும், உன்னை எதுவும் பிடித்து வைக்காதபோது, நீ திறந்திருக்கும் பொழுது, அதனை அனுமதி, அனுபவி. உனது இதயத்தை மூடாதே, அதனுடன் மிதந்து செல், பருவத்திலோ, பருவமற்ற காலத்திலோ, அது ஓடட்டும். மனிதர்களுடன், மனிதர்கள் இல்லாமல், கூட்டதிலும் தனிமையிலும் அது உன்னை மூழ்கடிக்கட்டும். மெது மெதுவாக, நீ காணாமல் போய்விட்டாய் என்பதை நீ காண்பாய்.

 

வழிந்தோடு, வாழ்வுடன் போ, நீ வளப்படுவாய், வாழ்வில் உள்ள ஒரே வளம் அதுதான்.

 

அன்பு ஒரு போதும் தேங்கி நிற்பதல்ல, அது எப்போதும் ஓடிக்கொண்டிருப்பது.

 

தன்ணுணர்வின் ஓட்டத்தில் பிளவுகள் இல்லை.

 

நீ சந்தோஷமாக, சக்தி ஓட்டமுடையவனாக இரு, மற்றும் எந்த பிரச்சனையையும் உருவாக்கி கொள்ளாதே..

 

பசிக்கும்போது சாப்பிடு, தூக்கம் வரும்போது தூங்கு, வாழ்வை ஓடவிடு.

 

தேர்ந்தெடுக்காமல் இரு, வாழ்வு முழுமையாக அதன் வழியே ஓடட்டும்.

 

சக்தி

உடலும் சக்தி, மனமும் சக்தி, ஆன்மாவும் சக்தி, பின் இந்த மூன்று விஷயங்களுக்குள் வித்தியாசம் என்ன வித்தியாசம் ரிதத்தில், அலை வரிசையில்தான் வித்தியாசம் அவ்வளவுதான். இந்த மூன்று சக்திகளும் ஒரே லயத்தில் செயல்படும்போது நீ முழுமையாக, ஆரோக்கியமாக இருக்கிறாய்.

 

எந்த அளவு சக்தி உனக்கு இருக்கிறதோ அந்த அளவு சந்தோஷம் நீ பெறுவாய்.

 

உனது சக்தி ஓடும்போது மட்டுமே உன்னால் நேசிக்கமுடியும்.

 

சக்தியின் மிக உயர்ந்த வடிவம் தன்ணுனர்வுதான்.

 

உனது கோபமாக இருந்தாலும் சரி, அன்பாக இருந்தாலும் சரி அது இரண்டும் உனது சக்தியே.

 

சக்தியை வீணடிக்காதே, ஏனெனில் சக்தி மிகவும் மதிப்பு வாய்ந்தது.

 

எப்போதெல்லாம் சக்தி ஓடுகிறதோ, அப்போது அதனை உபயோகப்படுத்து.

 

வெளி

உள் வெளியை உருவாக்குவதே தியானம். முற்றிலுமான உள்வெளித்தன்மையில் நீ மர்மமான ஏதோ ஒன்றை உணரத்தொடங்குவாய், அது உன்னை சுற்றிலும் எல்லா இடத்திலும் – உள்ளே, வெளியே, உனக்குள், வெளிப்புறத்தில், சூழ்ந்துள்ளது. அந்த மர்ம இருப்பே கடவுள். கடவுள் ஒரு மனிதரல்ல ஆனால் மர்மமான ஏதோ ஒன்றைப் பற்றிய ஒரு உணர்வு. அது மனதால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று.

 

உன்னுடைய சொந்த வெளியை உருவாக்கும் ஒரு யுக்திதான் தியானம்.

 

நீ மையத்தில் இருக்கும்போது யாரும் உன்னுடைய உள்வெளியை ஊடுருவமுடியாது.

 

வெற்றிடத்தன்மை இருக்கும்போதுதான் கற்றுக்கொள்ளுதல் நிகழ்கிறது.

 

காலம் நேரம் என்னும் கருத்துகளை விட்டுவிடு.

 

தியானத்தின் முழு இரசாயனமே உள் வெளியை கண்டறிவதுதான்.