கனிதல்
நிறைவடையாத அனுபவங்கள் நழுவிப்போகாது. அது கனிந்த பழம் தானாகவே
உதிர்வதைப் போன்றது. கனியும்போது அது விழுந்துவிடும். கனியாத பழம் விழாது.
எப்போதெல்லாம் ஒரு அனுபவம் நிறைவடைகிறதோ அப்போது அது கனிந்த பழம் போன்றது. அது
தானாகவே விழுந்துவிடும். அது எந்த காயத்தையும் எந்த தழும்பையும் விட்டுச்
செல்லாது.
நீ புத்தராகும் நாளில் உனது தியானம் கனிந்துவிடுகிறது.
விழிப்புணர்வுவடைவதையே ஜென் மக்கள் கனிதல் என்றும் மலர்கல் என்றும்
அழைக்கின்றனர்.
ஆசைகளற்ற நிலையே நிறைவடைதல், கனிதல், மலர்தல்.
கனிதலைவிட, மலர்தலைவிட வேறு என்ன வேண்டும் உனக்கு.
ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரிதான காலமெடுக்கும்.
கனிதல் ஒவ்வொரு நாளும் நிகழ்கிறது.
நீ கனிதல் சந்தோஷமானதல்ல. பரவசமயமானது.
விரிவடைதல்
தன்னுணர்வு விரிவடைவது என்றால் என்ன என்பது தெரியாதவர்கள் இன்னும்
வாழவே இல்லை. தன்னுணர்வு விரிவடையும், விரிந்துகொண்டே போகும் பரவச அலைகள்
பிரபஞ்சத்தின் எல்லை வரை, முடிவற்ற பிரபஞ்சம் முழுவதுமாக விரிந்துகொண்டேபோகும். நீ
விரிவடைந்தால் நீ முழுமையின் பாகமாகிறாய். நீ சுருங்கும்போது நீ ஒரு
தீவாகிவிடுகிறாய்.
வாழ்க்கைக்கு ஒரே ஒரு விதிதான் உண்டு. அந்த விதி விரிவடைதலும்
பகிர்தலும்தான்.
தியானமானது வேறு எதுவுமே இல்லை. அது தன்னுணர்வின் விரிவாக்கம்தான்.
தியானம் தன்னுணர்வின் விரிவுதான்- விரிவடைதல்தான், குறுகுதல் அல்ல.
தன்னுணர்வின் விரிவடைதல்தான் மனமற்ற நிலை.
தன்னுணர்வின் விரிவடைதலுக்கு எதிராணது அரசியல்.
தன்னுணர்வு விரிவடைவதற்கான ஒரே நம்பிக்கையான மருந்து உண்மை மட்டுமே.
இசை
கலைஞர்கள் தத்துவவாதிகளை விட மறைபொருளுக்கு நெருக்கமாக உள்ளனர்.
சொல்லப்போனால் உண்மையை சொல்வதற்கு இசைதான் சிறந்ததாக இருக்கிறது ஏனெனில் இசை
வார்த்தைகளின்றி பொருளோடு உள்ளது. அது அர்த்தமுள்ளது ஏனெனில் அது உன் இதயத்தில்
மணியோசையை எழுப்புகிறது. சிறந்த இசை உனக்கும் உன் இருப்புக்கும் இடையே ஒரு இலயத்தை
உருவாக்கும்.
மெளனத்தின் இசையை கேட்கும் கலைதான் தியானம்.
உள் மையத்துடன் இலயப்படுவதற்கு வெளியிலிருந்து இசை உனக்கு உதவும்.
இசை ஒரு கருவி அது புத்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறந்த இசையை கேட்கும்பொழுது நீ எந்த முயற்சியுமின்றி திடீரென
மெளனத்தில் ஆழ்ந்துவிடுவாய்.
உன்னால் இசையை உருவாக்க முடியுமெனில் உருவாக்கு, உருவாக்கமுடியாதெனில்
இசையை கேள்.
இசை தியானத்திற்கு வெகு அருகில் உள்ளது.