பெண்மைத்தன்மை

 

சாதகன் பெண்மைத்தன்மையுடன்தான் இருக்க வேண்டும். அவர் ஆணா, பெண்ணா என்பது
பொருட்டல்ல. மனோரீதியாகவோ, உடல் ரீதியாகவோ அது முக்கியமல்ல. மனோரீதியாக
பெண்மைத்தன்மை வேண்டும். ஆக்ரமிப்பவனாகவோ, ஆளுமை செய்பவனாகவோ இருக்கக் கூடாது.
கற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். இறைமையை
ஏற்றுக் கொள்ள கருப்பை போலத் தயாராக இருக்க வேண்டும்.

 

எது கிடைத்தாலும் அதை நன்றியுடன் பெற்றுக் கொள்பவராக இருப்பதே பெண்மைத்தன்மை.

 

பெண்மைத்தன்மை என்பது சரணாகதி. வெண்மேகம் போல நகர்ந்து கொண்டிருக்கவேண்டும்.

 

உன் பெண்மைத்தன்மை உன்னை ஆட்க் கொள்ள முழுமையாக அனுமதித்து விடு.

 

மேன்மேலும் பெண்மைத்தன்மையுடனும், மேலும் தன்மையாகவும், மேலும் மெலிதாகவும்
மாறு, எதையும் நடக்க அனுமதித்து விடு.

 

அன்பு, கருணை, பரிவு ஆகிய சிறப்பான குணங்கள் யாவும் பெண்மைத்தன்மையானவையே.

 

பெண்மைத்தன்மை இயற்கையின் கடல்.

 

சரி

 

சரி என்ற இந்த ஒரு சிறிய வார்த்தையில் எல்லா மதங்களும் அடங்கியிருக்கின்றன.
அதனுள் இணைப்புணர்வு, அன்பு, சரணாகதி, ஆகிய எல்லாமும் அடங்கியுள்ளன. அதனுள் இதுவரை
செய்யப்பட்ட எல்லா பிரார்த்தனைகளும், செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற எல்லா
பிரார்த்தனைகளும், இனிமேல் செய்யப் போகிற எல்லா பிரார்த்தனைகளும் அடங்கியுள்ளன. நீ
முழு மனதுடன் உனது இதயம் திறந்து சரி என்று சொன்னால் நீ அனைத்தையும் சொல்லி
விட்டதாகத்தான் அர்த்தம்.

 

நீ சரி என்று சொல்லும்போது வாழ்க்கை சந்தோஷமானதாகவும் அனுபவிப்பதானதாகவும்
மாறுகிறது.

 

இல்லை என்று உன்னால் சொல்ல முடியும் நேரத்திலும் நீ சரி என்று
சொல்லும்போதுதான் அந்த சரி என்பதில் அர்த்தம் இருக்கிறது.

 

பிரபஞ்சத்திற்க்கும் வாழ்வுக்கும் சரி என்று சொல்வதுதான் மிகப் பெரிய நன்மையே.

 

மனதின் மூடப்பட்ட நிலையே இல்லை என்பது. சரி என்பது திறந்த மலர்.

 

சரி என்ற ஒரு சிறிய வார்த்தை உனது இருப்பு முழுமையையும் புத்துணர்வுடையதாக்கி
விடும்.

 

மனம் என்பது எப்போதும் சரி என்று சொல்வதை விட இல்லை என்று சொல்வதைத்தான்
விரும்பும்.

 

வளர்ச்சி

 

நீ எதை செய்தாலும் அதை சந்தோஷமாக செய். நீ அதை அன்போடு செய்யும் போது
கணக்கீட்டின் படி செய்ய வில்லையென்றால் அது உருவாக்கமாக மாறுகிறது. அதன்மூலம்
உன்னுள் ஏதாவது வளர்ச்சி பெற்றால், அது உனக்கு ஒரு வளர்ச்சியை கொடுக்குமானால் அது
ஆன்மீகம், அது படைப்பு, அது இறைமை.

 

கவனமாக இரு. உன்னுள் வளர்ந்திருக்கும் இந்த மலரை நீ அழிக்கவிட்டுவிடாதே.

 

மனிதன் எனபவன் மாறுதலடைபவன், வளர்ச்சியடைபவன், தொடர் நிலைமாற்றமடைபவன்.

 

நீ இறுதியான அர்த்தத்தை அடைய விரும்பினால் நீ வளர்ச்சியடைய வேண்டும்.