1.

நாம் இந்த பிரபஞ்சத்தின் வெளிப்பாடுகள்.
தனித்துவமான வெளிப்பாடுகள். அதுதான் உன்னுடைய பெருமை, அதுதான் உன்னுடைய
சுயமரியாதை. அதுதான் உனக்கு ஒரு உள்ளார்ந்த மதிப்பை கொடுக்கிறது.

2.

புது மனிதன் மரங்களில், பறவைகளில், நதியில்,
கடலில், மலைகளில், நட்ஷத்திரங்களில் உயிர்துடிப்போடு உள்ள கடவுளை காண்பான். அவன் இந்த பிரபஞ்சம் முழுமையும் தன்னுடைய கோவிலாக மாற்றிக் கொள்வான்.

 

3.

ஆன்மீகம் என்பது வானத்தில் பறக்கும் பறவையின்
பார்வையை போன்றது. குன்றுகள், ஆறுகள், செடிகள், மரம் மக்கள் என அனைத்தின் மீதும்
அந்த பார்வை விழும். அதுதான் ஆன்மீகத்தின் அழகே. அது ஒரு குறிப்பிட்ட வகையானதோ,
குறிப்பிட்ட விதமானதோ அல்ல.

 

4.

நட்சத்திரங்கள், பாறைகள், நதிகள் என இவை யாவும்
உணர்வின்றி இருக்க முடியாது. உணர்வுதான் அவற்றின் வாழ்க்கையே. மனிதன் தலைகீழாகி
விட்டான். மூளை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. மேலும் மூளை உணர்வை
அடக்கிவைக்கிறது.

 

5.

பிரபஞ்சம் என்பது தொடர்ந்த படைப்பாற்றல்தான்.
அது ஏதோ யாரோ ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல. அதுவே தெய்வீகமானதுதான்.

 

6.

நீ இயற்கையுடன் இயைந்திருந்தால் முதன்முறையாக
நேசம் என்பது என்ன என்பதை உணர்வாய். அது யாருக்கும் குறிப்பாக தனிப்பட்ட விதத்தில்
என்று இருக்காது,. அது யாரையும் நோக்கி இருக்காது.