1.

நேசம் வெளியிலிருந்து வருவதல்ல. அது உன்னுடைய உள்ளிருப்பிலிருந்து வருவது.
யாரும் உனக்கு அன்பை தர முடியாது. அது உன்னிலிருந்து எழக்கூடும். ஆனால் அதை
வெளியிலிருந்து வாங்க முடியாது. அன்பை வாங்க கடைகளோ, விற்பனையாளர்களோ, சந்தையோ
இல்லை. என்ன விலை கொடுத்தும் அன்பை வாங்க முடியாது. எதை விலையாக கொடுத்தாலும்
அன்பை வாங்குவது இயலாது.

 

2.

பயமின்மை என்பது முழுமையாக பயத்தில் இருந்து கொண்டே அதை தைரியமாக
சந்திப்பதாகும்.

 

3.

நீ உன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும்போது நீ யாரையும் அடிமை படுத்த
மாட்டாய். நீ வெறுமனே கொடுக்கிறாய். நீ அதற்காக ஒரு நன்றியையோ ஒரு நன்றியுணர்வையோ
கூட எதிர்பார்க்க மாட்டாய். ஏனெனில் நீ எதையும் பெறுவதற்காக கொடுக்கவில்லை. நீ
நிரம்பி வழிவதால்தான் கொடுக்கிறாய், நீ கொடுத்துத்தான் ஆக வேண்டும். எனவேதான்
கொடுக்கிறாய். எனவே நன்றியை எதிர்பார்க்க மாட்டாய், பதிலாக அவர்கள் வாங்கிக்
கொள்வதால் நீதான் நன்றியோடு இருப்பாய்.

 

.4.

………….நீ புத்ததன்மையை அடைய முடியாது என்ற
அவநம்பிக்கையை விடு.

நீ ஒரு புத்தன்தான்.

நீ நீயாகவே ஒரு புத்தன்தான்.

நான் ஒரு புத்தர் என்பது, தூங்கும்போதும்,
சாப்பிடும்போதும், நடக்கும்போதும் என இருபத்தி நான்கு மணி நேரமும் உனக்கு
நினைவிருந்தால் பின் இந்த பிரபஞ்சம் என்ன என்பது உன்னுடைய வாழ்வின் மூலம் உனக்கு
தெரியவரும்.

நீ தேடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தைப் பற்றி
உனக்குத் தெரியும்.

பிறவி பிறவிகளாக தேடிக் கொண்டிருக்கும் இறுதியான
விடுதலையை நீ பெறுவாய்.

இந்த முறை இந்த வாய்ப்பை தவற விட்டு விடாதே.

 

 

5.

மனதின் வேலையே பிளவு படுத்துவதுதான். இதயத்தின் வேலை இணைப்பை பார்ப்பதுதான்.
ஆனால் இணைப்பதைப் பற்றி மனதிற்கு சுத்த சுத்தமாக எதுவும் தெரியாது. இணைப்பதை
பொறுத்தவரை மனம் முழுமையாக குருடானது.

From the osho diary 1999