1. தானாய் வாழ்தல்

 

மக்கள் வாழ்வைக் கண்டு பயப்படுகிறார்கள். நீ
நீயாய் இருக்க முடியும்போது தான் வாழ்க்கையை வாழ்வது சாத்தியமாகும். அப்படி தானாய்
இருக்க முடியாததால்தான் வாழ்வைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆடுவதில், பாடுவதில்,
நேசத்தில் நீ நீயாய் இருக்க வேண்டும். எதற்காக பயப்பட வேண்டும் நீ எதையும் இழக்கப்
முடியாது. நீ பெற வேண்டியதுதான் உள்ளது.

 

உன்னுடைய தானாயிருத்தல் யாருக்கும் கெடுதலை உண்டுபண்ணவில்லையென்றால்
அது மிகவும் ஆன்மீகமானது.

 

மிகவும் நாகரீகமானவனாக இருப்பது ஆபத்தாகக் கூட
அமையலாம். ஒரு சிறிதளவாவது தானாய் இருப்பது நல்லது.

 

உன்னுடைய தானாயிருத்தல் உன்னுடைய
சுதந்திரத்தன்மையின் வெளிப்பாடே.

 

நீ நீயாய் இருப்பதற்கு பயப்படுமாறு
வளர்க்கப்படுவது எல்லோருக்கும் நிகழும் ஒன்றே.

 

தன்னியல்புப்படி இருப்பதில் எந்த தவறையும் நான்
காணவில்லை.

 

2. பிரதிபலிப்பு

 

அறியாமைக்கு அதற்கே உரிய ஒரு அழகு, ஒரு தூய்மை
இருக்கிறது. அது ஒரு சுத்தமான கண்ணாடியைப் போன்றது. அது, தளும்பாமல் அமைதியாக
இருக்கும் குளம் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களையும் கரையில் உள்ள மரங்களையும்
பிரதிபலிப்பதைப் போல பிரதிபலிக்கும். தெரியாது என்ற அந்த நிலைதான் மனிதனின்
பரிணாமவளர்ச்சியில் மிக உயர்ந்த நிலையாகும்.

 

ஒரு கண்ணாடியைப்போல மிகவும் தூய்மையாக இரு. எதுவாக
இருந்தாலும் அதை வெறுமனே பிரதிபலிக்கும் கண்ணாடி போல.

 

நான் வெறும் விழிப்புணர்வு மட்டுமே, எதையும்
பிரதிபலித்துக் காட்டும் வெறும் ஒரு கண்ணாடி, என்றார் புத்தர்.

 

நீ ஒரு கண்ணாடி, எதையும் பிரதிபலிப்பவன் என்பதை
நினைவில் கொள்வது மட்டுமல்ல, அதை அனுபவி.

 

அறிவது தன்னை அறிவதுதான், அது கண்ணாடி தன்னைத்
தானே பிரதிபலிப்பதைப் போல.

 

பிரதிபலிக்க கண்ணாடி போல எப்போதும் தெளிவாக
இருக்க வேண்டும், அதுதான் கற்றலுக்கான நிலை.

 

3. உள்ளே செல்வது

 

ஒரு எளிமையான கூற்று, உள்ளே போவது. நீங்கள் என்ன
சொல்கிறீர்கள் என்று நீ என்னை கேட்கிறாய். உள்ளே செல் என்ற இந்த எளிய வார்த்தையை
உன்னால் புரிந்து கொள்ள முடியாதா உனக்கு இந்த வார்த்தையின் பொருள் தெரியும் என்று
எனக்குத் தெரியும். ஆனால் உனக்கு வெளியே போக மட்டுமே சொல்லித்தரப்பட்டிருப்பதால்
உள்ளே போவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. உன்னுடைய தன்னுணர்வு மற்றவர்களை
பார்த்தே பழக்கப்பட்டிருப்பதால் அது தன்னை நோக்கி திரும்பும் வழியை மறந்து
விட்டது.

 

உள்ளே போவது என்பது உண்மையிலேயே உள்ளே போவது
அல்ல. அது வெளியே போவதை நிறுத்துவதாகும்.

 

சுவாசம் உள்ளே செல்வதை கவனித்தால், அப்போது
எண்ணங்களும் உள்ளே செல்வதை உன்னால் கவனிக்க முடியும்.

 

நீ உன்னுள் சென்றால் எப்படி ஒருவர் புத்தராக
முடியும் என்பதை நீ கண்டறிவாய்.

 

உள் நோக்கி செல்வதற்கான வழிகளை ஒருவர் கற்றாக
வேண்டும்.

 

நினைத்தல் வெளியே செல்வது, எதையும்
சிந்திக்காமல் இருப்பது உள் நோக்கி செல்வதாகும்.