விலங்கு குணத்திலிருந்து விடுபட்ட

முதல் அனுபவம்

போராடும் கூட்டத்திலிருந்து விலகி விளையாடும்

முதல் அனுபவம்

இயற்கையில் கரைந்து இறப்பு பயத்திலிருந்து இதயம் மீண்ட

முதல் அனுபவம்

பழமையை உடைத்து காதலென பாயும் சக்திபெறும்

முதல் அனுபவம்

வாழ்க்கை அர்த்தமுள்ள வடிவம் பெறுவதை உணரும்

முதல் அனுபவம்

ஒன்றலின் இன்பம் ஓயா ஏக்கமாய் பிறக்கும்

முதல் அனுபவம்

கொடுப்பதிலும் இழப்பதிலும் உள்ள சுகத்தை உணரும்

முதல் அனுபவம்

ஆம்.

அதுதான். . . அந்த முதல் அனுபவம்தான். . . .

அன்பு!

அது தெரியாவிட்டால் ஏது மனிதப்பண்பு?

அதனால்தான்,

அன்பு அறியாக் குழந்தை மதம்பிடித்த

விலங்காகிறது,

அன்பு அறிந்த குழந்தை மதத்தன்மை கொண்ட

அருளாளன் ஆகிறது.