கோபம், பொறாமை, பேராசை

பயம், அடிமைத்தனம், பதுங்கல்,

அதிகாரம், ஆணவம், சூழ்ச்சி

இவை விலங்குகள் தம்தம் நிலையில்

தப்பித்து உயிர் பிழைக்க

தழைத்திருக்கும் உபாயங்கள்.

 

தானாய் புலன்வழி இயங்கி

தகவல் பெற்று தன்னை மேலும்

மெருகேற்றிக் கொண்டிருக்கும்

இந்த மனம் விலங்கு மனம் – இது ஒரு புறம்

சக்திமயமாய் ஊற்றெடுத்து

சலனங்களில் உலகம் படைத்து

சர்வத்திலும் வியாபித்திருக்கும்

சாட்சிபாவ கடவுள் நிலை மறுபுறம்.

 

இரண்டும் சந்திக்கிறது

சிந்திக்கிறது

சாதிக்கிறது

அது
அன்பில்

மனிதனில்

ஆம். மனிதனில் நேயத்தை எடுத்துவிட்டால்
 அவன் விலங்கு.

ஆம். மனிதனில் விலங்கை
விலக்கிவிட்டால் அவன் கடவுள்.