கொரோனா…
கொரோனாவிற்கும் அதே போன்ற மற்ற நோய்களுக்கும் மிகமுக்கிய வித்தியாசம் ஒன்று உண்டு இதே போன்ற நோய்கள் பல பல நாடுகளில் வந்து சென்ற போதும் இந்த அளவிற்கு உலகம் முழுவதும் ஒரே கிராமம் என்ற அளவிலான தொலைத்தொடர்பு வசதியும் இணையமும் ஊடகங்களும் இதுவரை இருந்ததில்லை.
ஆகவே உலகம் முழுவதும் இது தொடர்பாக நடக்கும் விஷயங்களை உடனே நாம் அறிந்துகொள்கிறோம்.
அது நன்மைதான் என்றாலும் இத்தகைய அறிந்து கொள்ளுதல் நமது பயத்தையும் அதிகப்படுத்திகொண்டே இருக்கின்றது. ஊடகங்களும் தினமும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தவர்கள் எண்ணிக்கை என வயிற்றில் புளியைக் கரைக்கின்றன.
அந்த செய்திகள் மக்களுக்கு எந்த தைரியமும் அளிப்பதில்லை. அதேபோல் இதுவரை தடுப்பு மருந்து அலோபதியில் இல்லை எனக் கூறுகின்றனர்.
ஆனால் சித்த மருத்துவத்தில் இதற்கு மருந்து உள்ளதா? ஆயுர்வேதத்தில் இதற்கு மருந்து உள்ளதா? என்பது போன்ற ஆராய்ச்சிகளைப் பற்றி ஊடகங்கள் பெரிதாக சொல்வதில்லை.
ஊடகங்களுக்கு மக்கள் தங்களை அதிகம் பார்க்க அல்லது கேட்க அல்லது படிக்க வேண்டும். அதற்கு என்ன செய்தி வேண்டுமோ அதை வெளியிடுகின்றனர்.
அலைப்பேசியை எடுத்தால் கொரோனாவைப் பற்றி பயமுறுத்துகின்றனர். அதை விடுத்து அரசும் ஊடகங்களும் மக்களை தைரியப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலோசித்து அதை நடைமுறைப்படுத்த ஆவன செய்யவேண்டும்.
கொரோனாவை தடுப்பதற்குரிய மருந்து தயாரிப்பில் அலோபதியே கதி என்று இல்லாமல் சித்த மருத்துவத்தையும் ஆயுர்வேதத்தையும் மக்களிடையே பரப்பி கொரோனாவை ஒழிப்பதற்கு முழு முயற்சி செய்யவேண்டும்.
அதற்கு இணையாக கொரோனாவைப் பற்றிய பயத்தை மக்களிடம் இருந்து நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவிட்டால் அப்போதே நாம் கொரோனாவை வென்று விட்டோம் என்பதே உண்மை.
நேசத்துடன்…
நிர்தோஷ்.