வாழ்க்கையை தொலைக்காதீர்கள்
நாம் இன்று பல சாதனங்களால் சூழப்பட்டுள்ளோம் அதில் இதுவரை மனிதன் கண்டுபிடித்த சாதனங்கள் அனைத்தும் மனிதனின் நேரத்தை மிச்சப்படுத்தி உள்ளன. இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட சில சாதனங்கள் மட்டும் மனிதனின் நேரத்தை மிச்சப்படுத்தாமல் மனிதனின் நேரத்தை விழுங்குகின்றன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.
1.டீவி. அவ்வாறு நேரத்தை விழுங்கும் சாதனங்களில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது தொலைக்காட்சி. இன்று தொலைக்காட்சி பொழுது போக்கு சாதனம் என்பதைத் தாண்டி பொருட்களை விற்க விளம்பரம் செய்யும் சந்தைக்கடை ஆகிவிட்டது. தொலைக்காட்சியை பார்க்கலாம் ஆனால் அதனை ஆன் செய்வதற்கு முன்பே நாம் என்ன நிகழ்ச்சி பார்க்கப் போகிறோம் என்ற தெளிவு நமக்கு வேண்டும். நமக்கு நேரம் இருக்கும் போதெல்லாம் தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்து அந்த நேரத்தில் அவன் போடும் நிகழ்ச்சிகளை பார்க்கக்கூடாது. எந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக தொலைக்காட்சியை போடுகிறோம் என்ற தெளிவு நமக்கு தேவை.
2. கம்யூட்டர். நாம் கம்ப்யூட்டரை எதற்காக பயன்படுத்த போகிறோம் என்ற தெளிவு கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது நமக்கு தேவை. தேவையற்ற சமயங்களில் கம்ப்யூட்டரை அணைத்து வைக்க வேண்டும்.
3. இணையம். பலர் இணைய தொடர்பை கம்ப்யூட்டரிலும் சரி கைப்பேசியிலும் சரி எப்போதும் தொடர்பிலேயே ஆனாகவே வைத்துள்ளனர். ஆனால் என்னுடைய யோசனை என்னவென்றால் எப்போது தேவைப்படுகிறதோ அப்போது இணைய தொடர்பை ஆன் செய்து எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு உபயோகப்படுத்தி விட்டு இணைய தொடர்பை துண்டித்து விடுங்கள் திரும்பவும் தேவைப்படும் போது போட்டு கொள்ளுங்கள். பொழுது போக்காக இணையத்தை பயன்படுத்தும் போது நேரத்தை பற்றி விழிப்புணர்வு கொள்ளுங்கள்.
4. கைப்பேசி. கைப்பேசியை கையில் எடுக்கும் போதே என்ன செய்ய போகிறோம் என முடிவு செய்து கொள்ளுங்கள். தேவையில்லாமல் கைப்பேசியை தொடாதீர்கள். இயற்கையோடும் மனிதர்களோடும் தொடர்பை அதிகப்படுத்துங்கள்.
நாம் அதிக உணர்வோடு வாழ உதவி புரியத்தான் சாதனங்கள்.
சாதனங்களின் காரணமாக உணர்வை வாழ்வை தொலைக்காதீர்கள்.
நேசத்துடன்
நிர்தோஷ்.