ஓஷோவின் செக்ஸ் சாமியார் என்பது குறித்தும் அவர் செக்ஸ் பற்றி என்ன சொல்கிறார் என்பது குறித்தும் பல குழப்பங்கள் நிலவுவதால் இந்த பதிவு.

எனது பெயர் ஓஷோ நிர்தோஷ் நான் 2 வயதில் ஓஷோ சந்நியாசம் அளிக்கப்பட்டு எனது 7வது வயது முதல் இன்று வரை தியானத்தில் ஈடுபட்டு வருபவன். அது மட்டுமின்றி புனேயில் உள்ள‌ஓஷோ ஆசிரமத்தில் 5 வருடங்கள் பணி புரிந்தவன்.

இந்த விளக்கம் நீண்டதாக இருப்பதால் ஒவ்வொரு பகுதி‌ பகுதியாக பிரித்துப் பார்க்கலாம்.

1. ஓஷோ செக்ஸ் சாமியார் என்று சொல்கிறார்களே?

இந்த கேள்வி வரும் போதே நீங்கள் எந்த ஓஷோ ஆசிரமத்திற்கு வேண்டுமானாலும் சென்று அந்த ஆசிரமத்தில் தென்படும் எந்த பெண்ணையும்(பெண்களுக்கு இந்த கேள்வி வந்தால் பயமாகத்தான் வெளிப்படுத்துகிறார்களே அன்றி ஆண்களைக் போல கற்பனையை‌ஓட்டுவதில்லை.) படுக்கைக்கு அழைக்கலாம். ஓஷோ ஆசிரமத்தில் உள்ள எந்த பெண்ணும் மறுக்கமாட்டாள் என்பதே ஆண்களின் கற்பனையாக உள்ளது.

அப்படி எதுவும் இல்லை. இது ஓஷோ கூறும் சொர்க்க கற்பனை‌ போன்ற நீங்கள் உங்கள் காமத்தை வாழாததால் ஏற்பட்ட கற்பனை அன்றி வேறு அல்ல.

ஓஷோ காமத்தைப் எவ்வாறு தியானத்திற்கு பயன்படுத்துவது என்பது பற்றி விரிவாக விளக்கமாக “காமத்திலிருந்து கடவுளுக்கு ” என்ற புத்தகத்தில் பேசியுள்ளார்.

அந்த ஒரே ஒரு புத்தகத்தில்தான் ஓஷோ காமத்தைப் பற்றி விரிவாக ஏனெனில் அதை தியானத்திற்கு எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என விளக்கும் பொருட்டு பேசியுள்ளார்.

அவர் 36000 மணி நேரங்கள் பேசியுள்ளார். அவை அனைத்தும் புத்தகமாக வெளி வந்துள்ளன.

ஆனால் அந்த ஒரு‌ புத்தகத்தின்‌ காரணமாகவே ஓஷோ ஒரு செக்ஸ் சாமியார் என அழைக்கப்படுகிறார்.


2. ஓஷோ திருமணத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?

ஓஷோ திருமணம் அசிங்கமான சடங்கு அது தேவையில்லை அது காலாவதியாகிவிட்டது என்று கூறுகிறார்.
ஆனால் ஓஷோ பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க சொல்லவில்லை. பிரம்மச்சரியம் சிறந்தது என கூறவில்லை.

ஏனெனில் ஓஷோ உடலில் இருந்த போது ஆணும் பெண்ணும் திருமணமின்றி கூடி வாழும்(LIVING TOGETHER) முறையை ஆதரித்தார்.

வயது வந்த ஆணும் பெண்ணும் தனிமனிதர்கள் அவர்கள் இருவரும் பரஸ்பரம் விரும்பி கூடி வாழ முடிவு செய்தால் அது அவர்களது தனிப்பட்ட விருப்பம் அதில் தலையிட சட்டத்திற்கோ மற்றவர்களுக்கோ சமுதாயத்திற்கோ எந்த உரிமையும் இல்லை என்பது அவரது கருத்து.

அதேபோல் அவர்கள் எப்போது பிரிய வேண்டும் என முடிவு செய்தாலும் கடந்த கால வாழ்க்கைக்கு நன்றி சொல்லிவிட்டு தன் வழியே பிரிந்து செல்ல வேண்டியதுதான்.‌அதுவும் அவர்களது தனிப்பட்ட விருப்பம் அதில் தலையிட சட்டத்திற்கோ மற்றவர்களுக்கோ சமுதாயத்திற்கோ எந்த உரிமையும் இல்லை என்பது அவரது கருத்து.

ஆகவே அவர் உடலில் இருந்த காலத்தில் அவரது ஆசிரமத்தில் இருந்த அவரது சந்நியாசிகள் கிட்டதட்ட அனைவரும் ஏனெனில் நீ துணை தேடுகிறாயா இல்லையா என்பது உனது தனிப்பட்ட விருப்பம். யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.

எனவே கிட்டதட்ட அனைவரும் ஆண்கள் வந்தால் தனக்கு பிடித்த பெண் தோழிகளுடனும் பெண்கள் வந்தால் தனக்கு பிடித்த ஆண் தோழர்களுடனும் கூடி வாழ்வர்.

ஆனால் ஒருவருடன்‌ வாழும் போது அவருடன் மட்டுமே வாழ்வர். வேறு ஒருவரை பிடிக்கிறது எனில் முந்தையவரிடம் சொல்லிவிட்டு பிரிந்து விடுவர்.

ஒருவருடன் கூடி வாழ்வது தெரிந்தால் யாரும் தொந்திரவு செய்ய மாட்டார்கள்.
இப்படி ஓஷோவும் ஒரு பெண் தோழியுடன்தான் வாழ்ந்தார்.

காமத்திற்கு இப்படி ஒரு‌ மாற்றை உருவாக்கிய காரணத்தால்தான் ஓஷோ திருமணத்தைப் எதிர்த்தார்.

ஓஷோ ஞானமடைவதற்கு முன்பு தன்னிடம் காதலை சொன்ன பெண்ணை மறுத்தார்.

ஓஷோ திருமணமும் செய்து கொள்ளவில்லை.

நேசத்துடன் நிர்தோஷ்.