கல்வியில் ஒன்பதாவது பத்தாவது மற்றும் பதினொன்றாவது வகுப்புகளில் அனைவரும் தேர்ச்சியென்று ஆணையிடுவதன் மூலம்,  கல்வி தேர்ச்சியின் மூலம் பெரும் அறிவு குறையும்.

ஏற்கனவே தமிழ் முதல் மொழியாக இருக்கவேண்டிய கட்டாயம் அற்ற காரணத்தால் இன்றைய கல்லூரி மாணவர்களுக்கே தமிழை சரியாக எழுதவும் படிக்கவும் தெரியவில்லை. ஏற்கனவே கிட்டத்தட்ட எந்த தமிழ்நாட்டு மாணவனும் தமிழ் நூல் எதையும் முழுதாக படிக்க இயலாத நிலை உள்ளது.

இந்த தேர்ச்சி ஆணை மூலம் எந்த தமிழ்நாட்டு மாணவனும் தமிழ் நூல் எதையும் முழுதாக படிக்க இயலாத நிலை, நூறு சதவிகிதம் முழுமை அடைந்து விடும் .

அவ்வாறு ஆங்கிலமும் முழுதாக தெரியாமல், தமிழும் முழுதாக தெரியாமல் மாணவ சமுதாயம் மாறிவிட்டால்,  எதிர்கால சந்ததி ஹிந்தியும் ஆங்கிலமும் சரளமாக தெரிந்த தமிழ் தெரியாத மற்ற மாநிலத்தவரிடம் கைகட்டி வேலை செய்வதை தவிர வேறு வழி இல்லை .

தாய் மொழி தெரியாமல் அறிவு வளராது.  தாய் மொழி தெரியாமல் வரும் அறிவு ஏட்டுச்சுரைக்காய் போல நின்று விடும். தாய் மொழியில் யோசிக்கும் திறன் இருந்தால்தான் அது புதிய பரிமாணங்களை கொண்டு வரும்.

எனவே தாய் மொழி திறன் இன்றியமையாதது. தமிழ் வாழவேண்டும் எனில் தமிழ்நாட்டில் தமிழ்வழி  கல்வியை கட்டாயமாக்க வேண்டும் . வேண்டுமெனில் சிறப்பு வகுப்புகள் மூலம் ஆங்கிலமும் கற்று தரலாம்.
தமிழ் மொழி எல்லா வகையிலும் கட்டாயமாக்க படவேண்டியது அவசியம்

இல்லையென்றால் தமிழ் மொழி அவசரமாக சாகும் .

நேசத்துடன்
நிர்தோஷ்.