ஜெயமோகனின் மரபும் மீறலும் உரை பற்றிய உண்மையான மதிப்புரை

இந்த‌ மதிப்புரை‌ ஓஷோவைப்‌பற்றிய உண்மையான பார்வையை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்படுவதேயன்றி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமோ எதையும் இழிவுபடுத்தும் நோக்கமோ இந்த எழுத்துக்கு அவ்வாறு ஏதும் நேர்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அவ்வாறு நேர்ந்தால் தயவு செய்து நாங்கள் இப்போதே மன்னிப்பு கோருகிறோம்.

ஓஷோவைப் பொறுத்த வரை மரபும் மீறலும் என்ற தலைப்பே அவரைப் பற்றி பேச தகுதி அற்றது என நான் கூறுகிறேன் ஏனெனில் அவர் மரபுகளை மீறியவரல்ல மாறாக மரபுகளை சுக்கு நூறாக உடைத்தெரிந்தவர்.

மற்றும் அவர் கடந்த காலத்தோடு எந்த தொடர்பும் அற்றவர். அவர் மரபுகளற்ற தனிமனிதன் வேண்டும் என விரும்பியவர்.

அவர் தன்னைப்பற்றி கூறும் பொழுது புதிய மனிதனின் துவக்கம் என்றே கூறுகிறார் எனவே அவரைப்பற்றி பேச

ஓஷோ எனும் புதிய மனிதன் என்ற தலைப்பே பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.

இந்த உரையை ஏற்பாடு செய்தவர்கள் ஓஷோவின் புத்தகங்களை படிப்பதும் அவரின் வார்த்தைகளை புரிந்து கொள்வதையும் அதைப் பற்றி விவாதிப்பதையும் ஓஷோவை அனுபவிப்பது என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அவருடைய தியான யுக்திகளை செய்வதும் அவருடைய பேச்சை கேட்பதும் அவருடைய வீடியோக்களை தினமும் பார்ப்பதும் அவரை விரும்பி அவருடைய சந்நியாசி யாக மாறுவதும் தான் அவரை அனுபவிப்பதாகுமேயன்றி அவருடைய புத்தகங்களை படிப்பதும் விவாதிப்பதும் அவரை அனுபவிப்பதாகாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓஷோவின் சீடர் ஒருவர் ஓஷோவின் நாவில் சரஸ்வதி இருப்பதாக கூறியிருந்தால் அவர் இன்னும் ஓஷோவின் சீடராக மாறவில்லை என்றே பொருள் ஏனெனில் ஓஷோவை பொறுத்தவரை கடவுள் இல்லை.. கடவுள் இல்லை என்ற அனுபவத்தில் ஓஷோ ஆணித்தரமாக இருக்கிறார். கடவுள்‌ இல்லை என்றே வாழ்நாள் முழுவதும் பேசி வந்துள்ளார் அவரது நாவில் சரஸ்வதி இருப்பதாக கூறுவது அபத்தம்.

ஜெயமோகனின் பேனாவில் சரஸ்வதி இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியாது அது பற்றி இந்த மதிப்புரையில் விவாதிக்க தேவையில்லை…

அவர் ஒரு தலை சிறந்த எழுத்தாளராகவே இருக்கட்டும் ஆனால் ஓஷோ ஒரு ஞானி ஓஷோ ஒரு எழுத்தாளர் அல்ல. ஓஷோவின் குரல் அடுத்த 5000 வருடங்களுக்கு ஒலிக்கும். அது மட்டுமல்ல ஒரு ஞானியை‌ ஒரு எழுத்தாளரோடு அவர் எவ்வளவு சிறந்த எழுத்தாளராக இருந்தாலும் ஒப்பிடுவது மடத்தனம் என்பது எனது தாழ்மையான கருத்து.

மேலும் ஜெய மோகன் ஓஷோ ஒரு எழுத்தாளர் என கூறியுள்ளார் ஓஷோ எதையும் எழுதியதில்லை. அவரது சீடர்கள் அவரது பேச்சை பதிவு செய்து அதனை தொகுத்து புத்தகமாக வெளியிடுவர். ஓஷோவின் புத்தகங்கள் அனைத்துமே இந்த வகையில் தொகுக்கபட்டவையே.

ஓஷோவிற்கு தமிழ்மொழி தெரியாது ஆகவே அவர் தமிழ் எழுத்தாளர் அல்ல. அவர் எந்த புத்தகத்தையும் எழுதவில்லை.

அவர் ஒரு ஞானி எழுத்தாளர் அல்ல.

ஓஷோவினுடையது ஒரு தியானத்தன்மையோடு இயைந்த ஒரு வாழ்க்கை முறை.

ஓஷோ ஒரு சிந்தனை‌ மரபல்ல…

மீறல் என்பது புகழுக்கான முதல் காரணம் என்று ஜெய மோகன் கூறுகிறார்

பதின்பருவத்தினர் மீள விரும்புவதால் அமைப்புகளிலிருந்து வெளியேற விரும்புவதால் ஓஷோ புகழ் பெறுகிறார் என்று ஜெய மோகன் கூறுகிறார்.

ஆனால் உண்மையில் இவைகளின் கட்டுப்பாடற்ற வாழ்க்கை என்பதைப் பற்றி மட்டும் ஓஷோ பேசவில்லை. இந்த சுதந்திரம் எதற்காக இந்த சுதந்திரத்தை தியானத்தை நோக்கி வாழ்க்கையை திருப்ப பயன்படுத்த வேண்டும் என்றும் ஓஷோ பெரும்பாலும் பேசியுள்ளார். எனவே ஓஷோவின்‌ மீறலுக்கான எதிர்ப்பிற்க்கான நோக்கம் தியான முறை சார்ந்த வாழ்க்கையை நோக்கியது என்பதே அவர் புகழ் பெற காரணம்.

ஓஷோ எழுத்தாளர் அல்ல ஓஷோ ஒரு ஞானி. ஆதலால் தமிழகத்தில் பெரும்பாலான மக்களால் அவருடைய எல்லா கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆதலால் அவரை சித்தர்கள் சொன்னதை தான் அவரும் சொல்லியுள்ளார்.‌ பெரியார் சொன்னதை தான் அவரும் சொல்லியுள்ளார் என நானும் ஓஷோவை புரிந்து கொண்டுள்ளேன் என தன்னை சமாதானபடுத்தி கொள்ள உபயோகப்படுத்தி கொள்கின்றனர்.

துணுக்குகளாக உடைப்பதற்கு துண்டு துண்டாக வெட்டுவதற்கு மேற்கோள்களாக காட்டுவதற்கு ஏற்ற வகையில் ஓஷோ இருப்பதாக ஜெய மோகன் கூறுகிறார். ஓஷோவின் எல்லா பேச்சுகளுமே குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேர அளவுடையவை. ஆகவே ஒருமுறை ஓஷோ பேசினால் அவர் ஒன்றரை மணிநேரம் பேசியுள்ளார். ஓஷோவைப் படிப்பவர்கள் அவரவர் புரிதலுக்கு தகுந்தபடி அவரை துண்டாடி விடுகின்றனர். ஓஷோ தன் ஒரு ஒன்றரை மணிநேர பேச்சை முழுதாக படித்தால்தான் தன்னை சரியாக புரிந்துகொள்ள இயலும் என்றும் கூறியுள்ளார். ஆகவே ஓஷோவை துண்டாடுவது படிப்பவர்கள் அல்லது கேட்பவர்களின் தவறே அன்றி ஓஷோ துண்டாடுவதற்கு தகுந்தபடி பேசவில்லை. அவ்வாறு துண்டாடுவதன் மூலம் அவர் தவறாக புரிந்துகொள்ள படுவதே நிகழ்கிறது.

ஓஷோ ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர் அல்ல. ஓஷோ கல்லூரி விரிவுரையாளராக மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் எனும் நகர கல்லூரியில் பல ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்.

ஓஷோவைப் பொறுத்த வரை நாம் மனம் என்னும் தூக்கத்தில் உள்ள காரணத்தால் நாம் கேட்டுவிட மாட்டோமா எனும் நப்பாசையில் அவர் அனைத்து விதமான மக்களுக்கும் பேசும் காரணத்தால் தான் அவர் திரும்ப திரும்ப கூறுகிறார். அது அவருடைய குறைபாடல்ல. அது அவரது பெருந்தன்மை. ஓஷோ திரும்ப திரும்ப சொல்வதன் காரணம் நாம்தானேயன்றி அவரல்ல.

ஓஷோ சிந்தனை சிக்கல்களை தருவதில்லை ஓஷோவின் எளிமை தொடக்கம்தான் ஓஷோ சிந்தனையின் ஆரம்ப பள்ளியை சேர்ந்தவர். தீவிர சிந்தனை என்பது வேறு சிந்தனை என்பது அடுக்கடுக்காக செல்லக்கூடியது முரண் இயக்குகளால் ஆனது ஒன்றிலிருந்து இரண்டிற்கு போவதல்ல ஒன்றிலிருந்து 88க்கு தாவ வேண்டியது அது தெரியும் வரை நீ ஓஷோ விடம் அமர்ந்திருப்பாய் என ஜெய மோகன் கூறுகிறார்.

ஆமாம் ஓஷோ சிந்தனை சிக்கல்களை தருவதில்லை. ஓஷோவின் பேச்சு எளிமையானது தான். ஆனால் ஓஷோ அந்த எளிமையான பேச்சின் மூலம் சிக்கலற்ற சிந்தனை மூலம் நமக்கு வார்த்தைகளற்ற மெளன அனுபவத்தை வழங்குகிறார். அவருடைய நோக்கம் உங்களை ஒரு சிறந்த சிந்தனையாளராக மாற்றுவது அல்ல. மாறாக எண்ணங்களற்ற சிந்தனை அற்ற வார்த்தைகளற்ற மெளன உலகத்தை உங்களுக்கு அனுபவ பூர்வமாக அறிமுகம் செய்வது.

சமுதாயம் பற்றியோ கடந்தகாலத்தைப் பற்றியோ சிந்தனைகளைப் பற்றியோ ஓஷோ கவலைப்படுபவரல்ல.
அதைப் போன்ற ஒரு வட்டத்தில் ஓஷோவை கொண்டு வருவது ஓஷோவை தவறாக புரிந்து கொள்வதே யாகும்.

ஆகவே தான் இந்த முட்டாள்தனங்களை ஓஷோ தியானம் செய்து அனுபவம் பெற்ற எவரும் செய்வதில்லை.

ஓஷோ எந்த இடத்திலும் என்னை பின் தொடருங்கள் என்று சொன்னதே இல்லை. யாரையும் பின் தொடராமல் உங்கள் சொந்த உணர்வு படி வாழுங்கள் என்றே கூறியுள்ளார்.

ஓஷோவின் அன்பர்களுக்கு எந்த சொந்த கருத்தும் இருப்பதில்லை ஓஷோ சொல்கிறார் என்று மட்டுமே பேசுகிறார்கள் என்றும் அதற்கு எதிராக தான் பேசுவதாகவும் ஜெய மோகன் கூறுகிறார். ஆனால் நாம் நம்முடைய சொந்த கருத்து என நினைத்திருக்கும் எதுவும் உண்மையில் நம் அனுபவமல்ல அனைத்தும் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கப்பட்டது என உணர்ந்திருப்பதால் தன் சொந்த கருத்தை விட ஓஷோவின் கருத்தை வாழ்வியலை வாழ முயல்பவனாக ஓஷோ அன்பர்கள் இருக்கிறார்கள்.

ஓஷோ அன்பர்கள் சிந்தனை ஓஷோ போலவே இருக்கவேண்டும் என்றும் மாற்று சிந்தனை பற்றி தெரியாதவர்கள் என்பது போல ஜெய மோகன் பேசுகிறார்.

ஓஷோ ஒரு தத்துவ வாதி அல்ல.
ஓஷோ ஒரு சிந்தனையாளர் அல்ல
ஓஷோ ஒரு ஞானி.

ஆனால் உண்மையில் ஓஷோவின் மூலம் அவர்கள் தீவிர சிந்தனையின் தேவையை கடந்து வாழ்வை தொட்டுவிடுகின்றனர். வாழ்வை தொட்டுவிட்டவனுக்கு வாழ்வைப் பற்றிய விளக்கங்கள் தேவைப்படுவதில்லை என்பதே உண்மை.