அன்பர்களே !!
பட்டாசு வெடிப்பது சுற்று சூழலுக்கு கேடு என்று கூறுகின்றனர். ஆனால் தினமும் வாகனங்கள் விடும் புகை அதை விட கொடுமையானது அதை தடுத்து நிறுத்த எந்த வழியும் யாரும் சொல்வதில்லை.
அதே போல் சுற்று சூழல் மாசு, குடிநீர் மாசு, மழை நீர் பாதுகாப்பு என்று கூறுகின்றனர். ஆனால் ஒரு ஆற்றையே காலி செய்யும் அளவிற்கு ஒரு நாளைக்கு பத்தாயிரம் லிட்டர் அளவிற்கு குளிர்பானம் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதை யாரும் தடுக்க முயற்சி செய்வதில்லை.
அதே போல் பிளாஸ்டிக் பயன்பாடு சுற்று சூழலுக்கு மாசு மண்ணுக்கு மாசு என்று கூறுகின்றனர். ஆனால் செல் போன் தயாரிப்பதையும் கார்கள் பிளாஸ்டிக்கில் தயாரிப்பதையும் தடுப்பதற்க்கு யாரும் தயாராக இல்லை. கார்பொரேட் நிறுவனங்கள் என்ன செய்தாலும் கேட்க யாரும் இ ல்லை. ஆனால் பொதுமக்கள் என்ன உபயோக படுத்தினாலும் அது கேடு இது கேடு என்று கூறுகின்றனர்.
ஆனால் கார்பொரேட் நிறுவனங்களை கேள்வி கேட்க யாரும் இல்லை. அது அரசாங்கம் ஆகட்டும் அல்லது வேறு சில சுற்று சூழல் ஆர்வலர்கள் ஆகட்டும் ஆகவே பணம் மட்டுமே இந்த சரி தவறை முடிவு செய்கிறதா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்
பிளாஸ்டிக் கழிவு மண்ணுக்கு உகந்தது இல்லை என்றால், செல்போன்களையும் கார்களையும் தயாரிப்பதை தடுத்து நிறுத்தி தடை செய்ய வேண்டும். அதேபோல் தண்ணீர் மாசுபட கூடாது நீரை சேமிக்க வேண்டும் என்றால் குளிர்பான நிறுவனங்கள் நீரை ஆயிரக்கணக்கான லிட்டர்கள் உபயோக படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
அதேபோல் தீபாவளி பட்டாசு வெடிக்க கூடாது என்றால் முதலில் வாகனங்கள் விடும் கரியமிலவாயு புகையை நிறுத்த வேண்டும்.
ஏனெனில் தீபாவளி பட்டாசு வெடிப்பதில் சிவகாசி போன்ற ஏகப்பட்ட ஊர்களை சார்ந்த தொழிலார்கள் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. அதை தடை செய்து அவர்கள் வாழ்வாதாரத்தை கெடுப்பது தேவை இல்லாதது. மேலும் அதைவிட ஒரே ஒருநாளில் இந்தியாவில் வாகனங்கள் விடும் புகை, காற்றை அதிகமாக மாசு படுத்துகிறது.
எனவே எது பெரியதோ அதை முதலில் தடுக்க வேண்டும். அதேபோல் கேரி பேக் தயாரிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை விட இவர்கள் கார் மற்றும் செல்போன் தயாரிக்க பயன் படுத்தும் பிளாஸ்டிக் மிக அதிகமானது. எனவே அதை முதலில் தடை செய்ய வேண்டும்
நீர் சேகரிப்பை பொறுத்த வரை மழைநீர் சேகரிப்பு வழியிலோ அல்லது வேறு வழியில் நீரை சேகரிக்கும் முயற்சியை விட குளிர்பான கம்பனிகளுக்கு ஆற்றை ஏலம் விடுவதை நிறுத்த வேண்டும் . அந்த கம்பெனிகள் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் நீரை உபயோக படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவையே செய்ய வேண்டிய காரியங்களே அன்றி பொது மக்களை இதை செய்ய கூடாது அதை செய்ய கூடாது என்று அரசாங்கம் வழியாக தடுத்து நிறுத்துவது மிகப்பெரிய யானையை விட்டுவிட்டு கட்டெறும்பை கொடுமையானது என்பது போன்றது. யானை காட்டையே அழிப்பதை வேடிக்கை பார்த்து விட்டு ஒரு எறும்பு கடிதத்திற்கு கூச்சலிடுவது போன்றதாகும் .
நேசத்துடன்
நிர்தோஷ்