இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் ஆகிய மருத்துவ முறைகளுக்கும் ஆங்கில மருத்துவ முறையான அலோபதிக்கும் மிக முக்கிய வேறுபாடு ஒன்று உள்ளது.
இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் மனிதனை ஆரோக்கியமானவனாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு இயற்கை மூலிகைகளில் இருந்து மருந்து தயாரித்து அளிக்கின்றன.
ஏனெனில் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தை பொறுத்த வரை மனித உடலின் சமநிலை தவறியுள்ளது. ஆகவே இந்த மருத்துவ மூலிகைகள் அந்த சமநிலையை உடல் மீண்டும் அடைய உதவி புரிகின்றன. உடல் சமநிலையுடன் இருப்பதையே நாம் ஆரோக்கியம் என்று கூறுகிறோம். இதுவே இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தின் முக்கிய நோக்கம்.
ஆனால் ஆங்கில மருத்துவத்தை பொறுத்தவரை நோய் ஏதுமற்ற நிலையே ஆரோக்கியம். அது உடலின் சமநிலை குறித்து கவலைப்படுவதில்லை. அதனாலேயே ஆங்கில மருத்துவத்தில் அதிக பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஏனெனில் ஆங்கில மருத்துவம் மருந்தின் துணை கொண்டு நோயை தீர்க்கவே முயல்கிறது. இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதமும் மற்றும் சித்த மருத்துவமும் ஆரோக்கியத்தின் மீது தன் முழு கவனத்தை செலுத்துகின்றன. ஆங்கில மருத்துவம் நோயை தீர்க்க வழி தேடி நோயின் மீது தன் முழு கவனத்தை செலுத்துகின்றது. ஆங்கில மருத்துவத்தை பொறுத்த வரை நோய் ஏதும் இன்றி இருப்பதே ஆரோக்கியமாக கருதப்படுகிறது.
எனவே இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திற்க்கும் ஆங்கில மருத்துவத்திற்க்கும் அடிப்படை புரிதலிலும் பார்வையிலும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாட்டை புரிந்துகொள்வது இந்திய நாட்டின் மக்களாகிய நம் மிக முக்கிய கடமையாக இருக்கிறது. இல்லாவிடில் நம் பாரம்பரிய முறைகளான ஆயுர்வேதத்தையும் சித்த மருத்துவத்தையும் நாம் முழுமையாக இழந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே இது பற்றி விழிப்புணர்வு கொண்டு உடலெனும் ஆலயத்தை பாதுகாப்போம்!
நேசத்துடன் நிர்தோஷ்.