ஒரு புகழ்பெற்ற நீதிபதியும் ஒரு புகழ்பெற்ற பாதிரியாரும், தங்களில்
யாருக்கு மக்களின் மேல் அதிக அதிகாரம் உள்ளது என்ற நட்பான விவாதத்தில்
ஈடுபட்டிருந்தனர்.

ஏய் வயதான நண்பனே, நீ ஒருவனிடம் – உன்னை தூக்கில் போடுகிறேன் – என்று
மட்டுமே சொல்ல முடியும், ஆனால் நான் – நீ பாவி, கடவுள் அருள் உனக்கு இல்லை –
என்பது வரை கூற முடியும் தெரியுமா, – என்றார் பாதிரி.

உண்மைதான், ஆனால் வித்தியாசம் எதில் என்றால், நான் – தூக்கில்
போடுகிறேன் – என்று சொன்னால் அவன் தூக்கில் போடப்பட்டு விடுவான், என்பதுதான் –
என்றார் நீதிபதி.

-

இது மிகப் பெரிய வித்தியாசம். ஏனெனில் பாதிரியார் அல்லது பூசாரிகள்
கட்டுக்கதையில் வாழ்பவர்கள். அவர்களது சொர்க்கம், அவர்களது நரகம், அவர்களது
கடவுள், எல்லாமே கட்டுக்கதை. அவைகளுக்கான எந்த நிரூபணமும் அவர்களிடம் இல்லை,
மேலும் அவைகளைப் பற்றி சந்தேகிக்கும் அளவுகூட தைரியம் இல்லாதவர்கள் அவர்கள்.

—ஓஷோ