1.

ஒரு பணக்கார, 95 வயதான கோடீஸ்வரன் தனது ஆடிட்டரை சந்தித்தான்.

அப்போது ஆடிட்டர் மிகவும் ஆர்வத்துடன் அந்த பணக்காரனிடம், “ஐந்து வருடங்களுக்குள் உங்களது
பணத்தை இரண்டுமடங்காக திருப்பித் தரும் ஒரு முதலீட்டை நான் உங்களுக்காக
கண்டுபிடித்திருக்கிறேன்” என்றார்.

அதற்கு அந்த பணக்காரர், “ஐந்து வருடங்களா விளையாடுகிறீர்களா” என்று
ஆச்சரியத்துடன் கேட்டார்.  “என்னுடைய இந்த வயதில் நான் வாழைப்பழங்களைக் கூட
பழுக்காமல் வாங்க முடியாதே” என்றார்.

ஆம். யாருக்குத் தெரியும் அவை பழுக்கும்போது நீங்கள் இல்லாமல் போய்
விடலாம்.

-

அனுபவங்கள் சில விஷயங்களை சொல்லித்தரும். என்னுடைய அனுபவம் என்னவென்றால்
நீ ஞானமடைந்துவிட்டால் பின் நீ மழைமேகம் போலாகி விடுவாய். நீ மழையை பொழிய
விரும்புவாய். அது டெக்ஸாஸ் ஆகவே இருந்தாலும்கூடத்தான்.

The Invitation  Ch.  6 Q  2

 

2.

ஒரு அழகான பெண், தனது அபார்ட்மெண்டில் பக்கத்துக்கு வீட்டிற்க்கு
சென்றவள், திரும்பி வந்து சலித்துக் கொண்டாள்.  “சீ என்னடி இந்த பையன்கள்
இப்படியிருக்கிறார்கள்.”

உடனே கூட தங்கியிருக்கும் பெண் ஆவலாக , “என்ன நடந்தது” என்று கேட்டாள்.

அதற்கு அவள்  “நான் அவனை மூன்று தடவை அறைந்தேன்” என்று கூறினாள்.

அப்போது இவள், “ஏன் அவன் அப்படி என்னதான் செய்தான்” என்று ஆர்வமாக கேட்டாள்.

அதற்கு அவள் “ஒன்றுமே செய்யவில்லை, தூங்கிக் கொண்டிருந்தான், அதனால்தான்
அறைந்தேன். விழித்துக் கொள்வானா என்று பார்த்தேன், ஆனாலும் அவன் எழவில்லை.” என்று
வருத்தப்பட்டாள்.

-

ஆனால் யாரும் எழுந்திருப்பதில்லை. ஆன்மீகத்தை பொறுத்தவரை நாம்
எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறோம். தியானம் தான் எழ செய்யும் முயற்சி.

The Invitation  Ch.  7 Q  1