மனநல மருத்துவர் ஒருவரை சந்திக்க வந்த நோயாளி,

“டாக்டர் எனக்கு ஒரு பிரச்னை “ என்றார்.

டாக்டர்,  “சொல்லுங்கள்“ என்றார்.

வந்தவர் தனது சட்டை காலரை தளர்த்திய படி,

“ எனக்கு ஒரு மகன் ஹார்வேர்டிலும் மற்றொரு மகன் யேலிலும்
இருக்கிறார்கள். நான் அவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான பிராரி கார் வாங்கிக்
கொடுத்தேன். மேலே ஐந்தாவது அவென்யூவில் எனக்கு சொந்தமாக ஒரு பங்களா இருக்கிறது.
கிழக்கு ஹம்ப்டன்னில் ஒரு கோடைபங்களா இருக்கிறது. வெனிசுலாவில் ஒரு திராட்சை
தோட்டம் இருக்கிறது.” என்றார்.

‘சரி’, என்று கூறிய டாக்டர்,

“ ஒன்று நான் எதையாவது தவறாக புரிந்து கொண்டிருக்க வேண்டும், அல்லது
உங்களுக்கு ஏதும் பிரச்னை இல்லாதிருக்க வேண்டும்”
என்றார்.

“டாக்டர்,” என்று கூவிய நோயாளி,

“ ஒரு வாரத்திற்க்கு எனக்கு எழுபத்தி ஐந்த டாலர்கள்தான் சம்பளம் டாக்டர்” என்றார்.

-

உனது நிதர்சனத்திற்கும், உனது ஈகோவிற்கும் உள்ள இடைவெளிதான் இது.