ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் தங்களுக்குள்
முடிவில்லாத வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இறுதியில் அங்கிருந்தவர்கள்
டிக்கட் பரிசோதகரை வரவழைத்தனர். அவர் வந்தவுடன் ஒரு பெண், “இந்த ஜன்னல்
திறந்திருந்தால் எனக்கு சளி பிடிக்கும், காய்ச்சல் வரும், நான் இறந்துகூட போகலாம்”
என்றாள்.

மற்றொருத்தி வேகத்துடன் அதை மறுத்தபடி, “ஆனால் இந்த ஜன்னல் இப்படி மூடி
இருந்தால் எனக்கு மூச்சு முட்டி நான் இறந்து போவேன்” என்றாள்.

இருவரும் ஒருவரையொருவர் முறைத்து பார்த்தபடி இருந்தனர். பரிசோதகர்
என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். அப்போது அவர்கள்
அருகில் அமர்ந்திருந்த ஒருவன் கூறினான். “முதலில் ஜன்னலை திறந்து வையுங்கள். அது
ஒருத்தியை கொன்றுவிடும். பின்பு அதை மூடி விடுங்கள் அது மற்றொருத்தியையும் கொன்று
விடும். பின்பு நாங்கள் இங்கு நிம்மதியாக இருப்போம்”.

-

உனக்கு அமைதி வேண்டுமென்றால் நீ இப்படித்தான் உனது மனதை பொறுத்தும்
செய்ய வேண்டும்.

The Invitation  Che  7 Q  2