ஒரு நாள் மெரூன் அங்கி அணிந்திருந்த ஒருவன், ஜெர்மன் பேக்கரிக்குள் நுழைந்து வரிசையில் நிற்காமல் இடித்துக் கொண்டு முன்னால் போய் நின்று டீயும் கேக்கும் ஆர்டர் செய்தான்.

அவன் நூறு ரூபாயை கொடுத்து விட்டு இந்த டீக்கும் கேக்குக்கும் விலை மிகவும் அதிகம் என்று குறை கூறியதோடு அங்கு வரிசையில் நிற்பதையும் கேவலமாக பேசினான்.  ஒரு பெரிய கேக் துண்டையும் பெரிய கப் டீயையும் எடுத்துக் கொண்டு சென்ற அவன் ஒரு கிழவியை இடித்து தள்ளி விட்டு அந்த இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். அங்கே நின்று கொண்டிருந்த ஒருவனுக்கு இவன் இப்படி செய்வது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எனவே அவன், ஏன் இப்படி செய்கிறாய்? என்று கேட்டான்.

அதற்கு அவன், “ஏனா, மிகவும் ஒருமித்த (crystalised) ஆணவத்தை மட்டுமே விட முடியும் என்று ஓஷோ சொல்லியிருக்கிறார்” என்றான்.

-

என்னை சரியாக புரிந்து கொள்வதை விட நான் சொல்வதை மிகவும் தவறாக புரிந்து கொள்ளக் கூடிய சாத்தியக்கூறே மிகவும் அதிகம். அந்த தவறான புரிதலில்தான் உனக்கு ஆறுதலும் தேறுதலும் கிடைக்கும்.

===

அன்றொரு நாள் முல்லா நசுரூதீன் என்னிடம் வந்தான். அவன், இனிமேலும் நான் உங்களை நம்ப போவதில்லை. எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது என்றான்.

நான், என்னவாயிற்று முல்லா, நீதான் வெகு நாட்களாக இருக்கும் மிகவும் சிறப்பான கீழ்படிதல் கொண்ட என்னுடைய சீடனாயிற்றே என்று கேட்டேன்.

அதற்கு அவன், இப்போது அதனால்தான் பிரச்னை வந்துவிட்டது. அன்று நான் குதிரைபந்தய மைதானத்திற்கு சென்றிருந்தேன். யாரோ ஒருவர் சில்லறையை தவற விட்டு விட்டார். அதை பொறுக்குவதற்காக குனிந்தேன். அப்போது ஒரு குடிகாரன் கண்மண் தெரியாமல் குடித்துவிட்டு கிறுக்குத்தனமாக என்னை குதிரை என்று நினைத்துக்கொண்டு என்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு விட்டான். என்றான்.

நான், நீ ஏன் நிமிர்ந்து கொண்டிருக்க கூடாது என்று கேட்டேன்.

அதற்கு முல்லா, “ நீங்கள்தான் எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ள சொல்லியிருக்கிறீர்களே “, ஆகவே நான் ஓஷோ எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள சொல்லியிருக்கிறார், எனவே நான் அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு என்ன நிகழ்கிறது என்று பார்த்தேன். இந்த பைத்தியக்கார மனிதன் என் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டதை ஏற்றுக் கொண்டேன் ”. என்றான்.

எனக்கு ஆவல் பிறந்தது. எனவே அதன் பின் என்ன நடந்தது என்று கேட்டேன்.

முல்லா, “ வேறு என்ன செய்வது, நான் ஓட வேண்டி வந்தது. நான் பந்தயத்தில் மூன்றாவது இடத்தில்தான் வந்தேன். அவமானம். அதுவே எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது. எனவே இனிமேலும் என்னால் உங்களை நம்ப முடியாது “ என்றான்.

-

என்னை தவறாக புரிந்து கொள்ளக் கூடிய சாத்தியம் எப்போதும் உள்ளது. மேலும் அதை
காரணகாரிய படுத்தவும் முடியும். இப்படித்தான் மனம் முட்டாளாக இருப்பது மட்டுமல்லாமல் உன்னையும் முட்டாளாக்கிக் கொண்டும் இருக்கிறது. அது எப்போதும் தன்னை பாதுகாத்துக் கொள்ள வழிகளை கண்டுபிடிக்கும். நான் ஆணவத்தை விட்டு விடு என்று சொன்னால் நீ சரி என்று சொல்லி விட்டு அதை விட முயற்சி செய்கிறாய். உடனே உன்னுடைய ஆணவம் மிகவும் பணிவுள்ளதாக மாறுகிறது. அதனால் நீ நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அலைகிறாய். மற்றவர்கள் எல்லோரும் நரகத்திற்கு போவார்கள் என்பது போல மற்றவர்களை பார்க்கிறாய். மற்றவர்களை விட நான் சிறப்பானவன், இங்கிருக்கும் எல்லோரையும் விட நான் மிகவும் பணிவான மனிதன் என்ற நினைப்போடு நீ திரிகிறாய். நான் ஆணவம் மிகவும் திமிர் கொண்டதாக பெரிதாக இருந்தால் அப்போது அதை எளிதாக எரிக்க முடியும் என்று நான் சொன்னால் சரி, அதைத்தான் நான் எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருந்தேன். இப்போது நீங்களே அதற்கு ஆதரவாக பேசி இருக்கிறீர்கள். இதை என்னால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. இதை நான் சுலபமாக செய்து விடுவேன் என்று கூறுகிறீர்கள்.

எப்போது நீங்கள் என்னை சரியாக புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?  நீங்கள் நான் சொல்வதை கேட்கும்போது உங்கள் மனம் அதை திரித்து கூறுவதற்கு தயாராக உள்ளது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மிக மிக கவனமாக இல்லையென்றால் உங்களது மனம் அதை மாற்றி விடும். மனம் மிகவும் தந்திரமானது. அது எப்போதும் வெளியேறுவதற்கான வழிகளை கண்டு பிடித்து விடும். அதற்கு அறிவு அதிகம், ஆகவே அது எப்போதும் காரணகாரியங்களை, தர்க்கங்களை கண்டுபிடித்து அவற்றை உபயோகித்து உங்களை வீழ்த்தி விடும். அது மிகவும் சரியானது என்பதை போன்ற தோற்றத்தை கொடுத்துவிடும். அது இந்த காரணத்தால்தான் என்பது போன்ற மாயையை உங்களுக்கு தோற்றுவிக்கும்.

OSHO , Ecstasy:  The Forgotten  Language,  ch.  # 4   Q.  5