தியான யுக்தி – 1

பிரச்னையை ஓரமாக நகர்த்தி வை

ஓய்வான சில கணங்களை அனுபவிக்க
ஆரம்பி. ஒரு பிரச்னை அங்கு இருந்தாலும்கூட – அது அங்கிருப்பதை நீ உணர்கிறாய், நான்
அது அங்கில்லை என சொல்லவில்லை. அது அங்கிருக்கிறது – அதை ஓரமாக நகர்த்தி
வைத்துவிட்டு, அதனிடம் காத்திரு, வாழ்வு இருக்கிறது, முழு வாழ்வும்
காத்திருக்கிறது. அதனால் நான் உன்னை நிவர்த்தி செய்து விடுவேன். ஆனால் இப்போது
எந்த பிரச்னையும் இல்லாமல் சிறிது நேரம் இருக்க என்னை அனுமதி என்று கூறு. சில
கணங்கள் எதுவும் இல்லாமல் இருந்து பார். ஒருமுறை நீ அதை அனுபவித்து விட்டால் பின்
பிரச்னைகள் உன்னால் உருவாக்கபட்டவைதான் எனும் உண்மையை நீ உணர்வாய். ஏனெனில் உனக்கு எதுவுமின்றி இருக்கும் கணங்களை அனுபவிக்க தெரியாததால் அந்த இடங்களை பிரச்னைகள் நிரப்பிக் கொள்கின்றன.

தியான யுக்தி – 2

ஒருமையில் அமர்ந்திரு

இதை முயற்சி செய்து பார், உணர்ந்து பார். ஒருமையில் சிறிது நேரம் அமர்ந்து பார். ஒருமையில் வெறுமனே எதையும் செய்யாமல் அமர்ந்திருப்பது – இதுதான் தியானம் எனப்படுவது. நீ தனிமையை உணர்ந்தால் அப்போது உன் இருப்பில் உள்ள ஏதோ ஒன்றை நீ இன்னும் உணரவில்லை என்றுதான் பொருள். நீ யார் என்று இன்னும் நீ தெரிந்து கொள்ளவில்லை.

அப்போது அந்த தனிமையில் ஆழ்ந்து போ. அப்போது திடீரென அந்த தனிமையே ஒருமையாக நிலைமாறுதலடையும் ஒரு கட்டத்திற்கு நீ
வருவாய். தனிமை என்பது ஒருமையின் எதிர்மறை பாகம். நீ அதனுள் ஆழ்ந்து போனால் நீ
அதன் நேர்மறையான பாகத்தை உணரும் கட்டம் வந்தே தீரும். அது திடீரென வரும். ஏனெனில் அந்த இரண்டு பாகங்களும் எப்போதும் ஒன்றாகவேதான் இருக்கும்.  

தியான யுக்தி  – 3

நீ இல்லை

இது உண்மையிலேயே மிக அழகான தியானமாகும். நீ இதை ஒரு நாளின் 24 மணி நேரத்தில் பலமுறை செய்யலாம். ஒரு கணத்தில் பாதி அளவு நேரமே போதுமானது. அரைவினாடி நேரம் வெறுமனே நிறுத்திவிடு. – நீ இல்லை –
இதை உணர்ந்து பார். இந்த உலகம் தொடர்ந்து இயங்கும். நீ இல்லாவிட்டாலும் இந்த உலகம்
தொடர்ந்து மிகச் சரியாகவே இயங்கும் என்ற உண்மையை நீ மேலும் மேலும் கவனத்தில்
கொண்டால் பின் அப்போது பல காலமாகவே பல பிறவிகளாகவே உதாசீனப்பட்டு வரும் உனது இருப்பின் மற்றொரு பாகத்தை நீ கற்றுக் கொள்ளலாம். அதுதான் வாங்கிக்கொள்ளும் சக்தி. நீ வெறுமனே அனுமதித்துவிடு, நீ ஒரு வாசலாகி விடு. விஷயங்கள் நீயில்லாமலேயே
நிகழும்.

தியான யுக்தி  – 4

மறந்து போனதை நினைவுபடுத்திக் கொள்ளல்

நீ ஒரு சாட்சி பாவம் மட்டுமே என்பதை தொடர்ந்து நினைவில் கொள். ஒரு கணம் கூட இந்த நினைவை விட்டு விடாதே. பல முறை நீ மறந்து போய் அதனுடன் அடையாளப்பட்டு விடுவாய். நீ மறந்து போய் விட்டது உனக்கு நினைவு வந்தவுடன் வருத்தப்படாதே. வருத்தப்படுதலில் நேரத்தை வீணடிக்காதே. ஏனெனில்
அது அடையாளப்பட்டுக் கொள்ள ஒரு புதிய வழி. வருத்தப்படும் வழி.

குற்றவுணர்ச்சி கொள்ளாதே. இல்லாவிடில்
திரும்பவும் நீ அடையாளப்பட்டு விடுவாய். நீ மறந்துவிட்டாய் என்பதை குறித்துக்
கொள், போதும். திரும்பவும் நினைவு கொள். வருத்தப்படவோ, குற்றவுணர்ச்சி கொள்ளவோ
தேவையில்லை. திரும்பவும் கவனமாக இருக்க ஆரம்பி.

இதை செய்வதன் மூலம் ஒருவர்
கற்றுக் கொள்கிறார். மறப்பதன் மூலம் தான், நினைவில் கொள்ள முடியும் , அழிவதன்
மூலம்தான் ஒருவர் திரும்பவும் வர முடியும். ஒருவர் தவறுகளும் தப்புகளும் செய்வதன்
மூலம் தான் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். யாரும் உனக்கு இதை கற்றுக் கொடுக்க
முடியாது. ஆனால் நீ இதை கற்றுக் கொள்ள முடியும்.