நான் அவரை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன்.

17-11-2012  அன்று இங்கே இப்போது இருப்பது என்பதில் நினைவு கூர்ந்தது. மா ப்ரேம திவ்யா (aka Zulma Reino) தான் ஓஷோவுடன் கழித்த காலங்களை நினைத்துப் பார்க்கிறார்.

 

நான் அவரை நேரிடையாக சந்திப்பதற்கு வெகு காலத்திற்க்கு முன்பே நான் அவரை கனவுகளில் சந்தித்திருக்கிறேன். அவர் ஒரு நண்பராகவும், ஒரு தேவதையாகவும், ஒரு தந்தையாகவுமாக ஒருவரே இருந்திருக்கிறார். அவர் என்னை ஒருபோதும் ஏமாற்றத்திற்க்கு உள்ளாக்கியதேயில்லை. ஏதோ சதியாலோசனையில் ஈடுபடுவது போன்றிருக்கும் அவரது குறும்பான பார்வையை நான் மிகவும் நேசித்திருக்கிறேன்.

அவர் எப்போதும் உண்மையானவராகவே தான் இருந்திருக்கிறார், அவரது நேசத்திலாயிருந்தாலும் சரி, அல்லது மக்களை குதூகலமடையச் செய்யவோ குலுக்கவோ அந்த பலவிதமான ஆடைகளை அவர் அணிந்து வந்ததாக இருந்தாலும் சரி.  அவர் மிகச் சிறந்த மனோதத்துவ வாதி. எப்பொழுதும் மனம் எப்படி வேலை செய்யும் என்பதை புரிந்து கொள்பவர். அவர் அவரிடம் வாய்க்கும் அனைத்தையும் நாம் நமது அடையாளப்படுத்துதலின் முட்டாள்தனத்தை பார்க்கவும், மேலும் மேலும் நாம் நமக்குள் ஆழ்ந்து செல்ல தள்ளவும், நாம் நம்மை நேர்கொள்ளவும், முடிவற்றதனுள் கரைந்து செல்லவும், உதவுவதற்காகவே உபயோகப்படுத்துவார்.

ஒவ்வொருவரிடமும் அவர் கொண்டுள்ள தொடர்பு  தனிப்பட்ட குறிப்பிடத்தக்க தனித்துவம் பெற்றதாக இருக்கும். அவரால் எங்களுக்குள் ஆழ்ந்து பார்க்க முடியும். அதை அவர் எப்போதும் நிரூபித்துக் கொண்டேயிருப்பார். அவர் உருவாக்கும் அபாயகரமான சூழல்களையும் அவர் ஏற்படுத்தி தரும் அழகையும் நாங்கள் மிகவும் ரசித்து விரும்புவோம். அது எங்கள் ஆழ் மையத்துடனான நேச சந்திப்பு.

65 – 70 களில் உருவான புதுவகையான மனோதத்துவ சிகிச்சையாளர்களில் நானும் ஒருவராக இருந்தேன். ஜான் பேழ், டைலன் தாமஸ், பீட்லெஸ், – போதைமருந்துகளின் உணர்வை பாதிக்கும் தன்மை, உடல் – மன உணர்வுகள் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து கடலாக வரும் அனுபவம் தரும் நியோ-ரெய்ச்சியன் தாக்கம் மிகவும் போதையூட்டுவது. நான் அவரது ஆளுமையின் கீழ் வரும்வரை இவையெல்லாம் என்னுடைய அடையாளப்படுத்தலின் பாகமாக இருந்தன.

நான் அவரை நேரிடையாக சந்திப்பதற்கு முன்பே நான் அவரை கனவில் கண்டிருக்கிறேன். முதன்முதலில் நான் எதிர்கொண்ட பிரச்னையில் இருந்து பின் தொடர்ந்து வந்த அத்தனை பிரச்னைகளின் போதும் அவர் என்னுடைய தொடர்ந்த உள்ளார்ந்த பாதுகாவலனாகவே இருந்தார்.

நான் அவரை சந்தித்த தினத்தில் -மனித ஆற்றல்- அமைப்பிலிருந்து வந்திருந்த ஒன்பது பேருடன் விமானத்தில் பறந்து வந்திருந்தேன். அவர் வசித்துவந்த பம்பாயின் அப்பார்ட்மென்ட்டின் இருண்ட குளிர் அறையில் முதல் ஆளாக நுழைந்தேன். அங்கு ஒரு நாற்காலியையும் ஒரு சிறிய மேஜையையும் தவிர வேறேதும் இல்லை. அவர் தனது கரங்கள விரித்து அருகழைத்து தனது வலது பக்கத்தில் கீழே தரையில் உட்காரச் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். அவர் தனது காலைத் தூக்கி எனது மடி மீது வைத்தார். நான் அதை பிடித்துவிட ஆரம்பித்தேன். நான் அதை வெகு காலமாக செய்து கொண்டிருக்கும் உணர்வு வந்ததோடு என்னுடைய சந்தேகங்கள் அனைத்தும் மங்கின. ஆனால் நான் அவர் என்ன சொல்கிறார் என்பதை கவனிக்க ஆரம்பித்தேன். அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு பெயரும் புதிதாக வந்திருந்தவர்களுக்கு மிகச் சரியாக பொருந்தியது. எனது மனேதத்துவ மனம் முழுமையாக நேர்மறையான விதத்தில் வசீகரிக்கப்பட்டது.

அவர் என்னை மா ப்ரேம் திவ்யா என்றழைத்து இதுதான் என் தியானமுறை என்றார். என்னுள் ஏற்கனவே இருந்த அந்த குணத்துடன் நான் இணைந்தேன். பார்த்த கணத்திலேயே நான் அவரை இந்த அளவு விரும்பக்கூடும் என்று நான் எண்ணிப் பார்த்திராத அளவு நான் அவருடன் அன்யோன்யமாகவும் மிகவும் பழகியவராகவும் நெருக்கமானவராகவும் உணர்ந்தேன். இறைமை அன்பு என்பது எப்படியிருக்குமென்று என்னால் முதன் முதலில் உணர முடிந்தது. நான் எப்போதும் அவரால் நேசிக்கப்பட்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரிந்தது.

எங்களுடைய மன விளையாட்டுக்களை ஒதுக்கிவிட்டு, எங்களை எங்களிடமிருந்தே காப்பாறுவதில் பகவானுடைய திறமை அசாதாரணமானது. நான் அவரிடம் மிக குறைந்த கேள்விகளே கேட்டிருக்கிறேன். அவரால் சரியாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். நான் கம்யூனை விட்டு வெளியேறி வந்து பதிமூன்று ஆண்டுகள் கடந்த பின்னும் எங்கள் இருவருக்கிடையே இருந்த அந்த இணைப்பு இன்னும் இறுக்கமாகவே உள்ளது. அந்த கடைசி காலங்களில் இறுகிய அந்த பந்தம் இன்னும் இன்னும் ஆழ்ந்து சென்று கொண்டே இருக்கிறது. இது வரை யாரும் செய்து காண்பித்திராத அளவு அவர் உண்மையையும் சத்தியத்தையும் வெளிக் காட்டினார், காரண காரியத்திற்க்கான தொடர்புகளை வகுத்துக் காட்டினார், இந்த பிரபஞ்சத்தின் சுதந்திரத்தையும், ஒளியையும், அன்பையும் உணர வழி காட்டினார்.

அந்த பனிரெண்டு வருடங்கள்தான் என் வாழ்வில் மிகவும் ஆழமான மிகவும் முக்கியமான பயணமாகும். சாதாரண மக்களை உலுக்கி எடுக்கும் பல விஷயங்களில் நான் ஈடுபடுத்தப்பட்டேன். ஆனால் நான் ஒருபோதும் அவரை தவறாக நினைத்ததேயில்லை. குணாதிசியங்களின் மையம் வரை சென்று விஷயத்தின் ஆழம் வரைசென்று தாக்குவார். அவரது ஆணை போன்ற அவரது விமர்சனங்கள் புரட்ச்சிக்கான வித்துக்கள் ஆகும். அவர் தொடர்ந்து நேரிடையாகவோ, மறைமுகமாகவோ எது என்னை அவரிடம் இழுத்து வந்தது என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். அது நல்ல காலமல்ல.

பூனாவில் பகவானுடன் இருந்த காலங்களில் என்னை அவர் செதுக்குவதில் பழக்கப்பட்டாலும் நாங்கள் ஓரகானுக்கு சென்ற போது நான் சகிப்புத்தன்மையையும் கீழ்படிதலையும் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அது வேர் பிடிக்கும் காலம், எனக்கு அந்த சூழல் பிடிக்கவேயில்லை. காலம் வந்துவிட்டது என்று நான் உணர்ந்த போது என் வாழ்க்கையை மறுபடியும் மாற்றிய அந்த கடிதத்தை நான் எழுதினேன். நான் அவரது அறிவுரையை தேடவில்லை. நான் செல்கிறேன் என்று மட்டுமே எழுதினேன். அவர் என்னுடைய ஆசீர்வாதம் என்றும் உனக்கு உண்டு என்று மட்டுமே அவர் எழுதினார். எனக்கும் அது தெரியும், நான் அதை எப்போதுமே அறிந்திருக்கிறேன்.

எனது நண்பர்களிடம் மூன்று மாதங்கள் மட்டுமே செல்கிறேன் என்று சொன்னாலும் எனக்குத் தெரியும் இது நிரந்தரமானது என்று. நட்பு வெளி உலகத்தில் பலப்படுவதை விட அதிக அளவு ஆழமாக இருந்தது அங்கு. அது உண்மையானதாக அழுத்தமானதாக இருந்தது. ஒரு பந்தம் உருவாகியிருந்தது. உன்னை எல்லா விதமான சூழல்களிலும் பார்த்து பழகி இருந்தாலும் தொடர்ந்து உன்னை நேசிக்கும் நபர்களுடன் விவரிக்க முடியாத தொடர்பு ஏற்பட்டு விடுகிறதல்லவா இன்னும் இந்த உலகம் எவ்வளவு சிறப்பாக இருக்கலாம் என்பதை பற்றி, இந்த உலகிலுள்ள சொர்க்கத்தைப் பற்றிய, யார் உண்மையிலேயே இந்த வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறார்கள் என்பதைப் பற்றி பேசியவாறே, சேர்ந்து வாழும் நபர்களுடன் வளரும் நட்பு………..

அங்கு வசிக்கும் மக்கள் ஒரே நோக்கத்திற்காக பார்த்து உணர்ந்து இணைந்து வேலை செய்கிறார்கள். அப்போது நாங்கள் பகிர்ந்து கொண்ட நிபந்தனையற்ற அன்யோன்யத்தை அது போன்ற ஒரு அன்பை நான் எங்குமே உணர்ந்ததேயில்லை. நாங்கள் எவ்வளவு முயன்றாலும் கூட எங்களது எந்த உணர்வையும் எங்களால் மறைக்க முடிந்ததேயில்லை. நாங்கள் உடலாலும் உள்ளத்தாலும் மறைக்க ஏதுமின்றி நின்றோம். நாங்கள் ஒன்றாக அழுதோம், சிரித்தோம், கொண்டாடினோம், பிரார்த்தனை செய்தோம். மேலும் நாங்கள் ஒன்றாகவே இறந்தோம், மேலோட்டமான எந்த வளர்ச்சியும் தராத பலன் மட்டுமே கருதும் இந்த உலகத்தை பொருத்தவரை நாங்கள் இறந்ததுதான் நாங்கள் வாழும் காலம் வரை எங்களை ஒன்றிணைக்கும், நாங்கள் பகிர்ந்து கொள்ளும் மிக முக்கியமான ஒன்றான விஷயமாக இருந்தது.

1985 வசந்த காலத்தில் நான் என்னுடைய பழைய முட்டை வடிவத்தில் இருந்த சன்னியாஸ் மாலையை கழற்றி விட்டேன். ஆனால் அது முடிவல்ல. அதன்பின் இரண்டு வருடங்கள் நான் அதன் உடல் மற்றும் மனோரீதியான பின் விளைவுகளை சந்தித்தேன். பதுங்கிக் கிடந்த என்னுடைய பல்வேறு துண்டுகளை பொறுக்கியெடுத்து  அவைகளை புதிதாக பிறந்த பல்வேறு துண்டுகளுடன் இணைத்து ஒருங்கிணைத்து உருவாக்க வேண்டி இருந்தது. நான் சுதந்திரமானவளாகவும் நிதர்சன தன்னுணர்வு கொண்டவளாகவும் பொறுப்புள்ள மனிதனாகவும் மாற பல துன்பங்களையும் கடந்த காலத்தில் நான் செய்த பல தவறுகளின் விளைவுகளையும் சந்திக்க வேண்டி இருந்தது. ஆனால் இந்த மறு சீரமைப்பு கட்டம் என் வாழ்க்கை சரிதத்தில் மற்றொரு மிக நீண்ட அத்தியாயமாகும்.

மா ப்ரேம் திவ்யா அமெரிக்காவில் பிறந்தவர், பியோர்டியோ ரியோவில் வளர்ந்த அவர் 65 – 70 களில் மனித திறமை அமைப்பில் பங்கேற்றார். அவர் 1973 ல் சன்னியாஸ் பெற்ற அவர் 12 ஆண்டுகள் பூனாவிலும் ரஜனீஷ்புரத்திலும் வாழ்ந்தார். அவரது முதல் புத்தகம் லார்ட் ஆப் புல் மூன் 1980 ல் வெளியிடப்பட்டது. அதன்பின் அவர் 11 புத்தகங்கள் எழுதியுள்ளார். அவை பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. திவ்யா ஒரு ஆன்மீக குருவாகவும், சொற்பொழிவாற்றுபவராகவும் பல்வேறு விதமான சிகிச்சை குழுக்கள் நடத்துபவராகவும் இருக்கிறார். அவர் தற்போதைு நடத்துவரும் அகவுணர்வுக்குழு பீயிங் இன்னர் வுமன். அவர் ஸ்பெயினில் உள்ள பால்மா டீ மலோர்கா என்ற இடத்தில் வசித்து வருகிறார்.