இரண்டாவது கேள்வி – இது ஹரீஷிடமிருந்து

ஒரு சிறிய வெண்மையான வட்டம் உங்கள் தலைக்கு மேல்
தெரிகிறது. அது ஏன் வண்ணத்தில் தெரியவில்லை.

அது வண்ணம் கொண்டதுதான். ஆனால் அதில் அனைத்து வண்ணங்களும் உள்ளன. அதனால்தான் அது வெண்மையாக தெரிகிறது. வெண்மை என்பது வண்ணங்கள் இல்லாதது அல்ல. எல்லா வண்ணங்களும் அதில் ஒன்றாக இருக்கின்றன. இந்த உலகத்திலேயே
வெண்மை தான் மிகவும் வண்ணமயமானது. அதனால்தான் அது வெள்ளையாக தெரிகிறது.

ஒரு வெண்மையான ஒளி ரேகையை முப்பட்டைக்கண்ணாடி வழியாக
செலுத்தினால் அது ஏழு வண்ணங்களாக பிரிந்து தெரியும். அப்படித்தான் மழைக்காலங்களில்
வானவில் உருவாகிறது. காற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் நீரின் சிறு துளி
பட்டைக்கண்ணாடி போல செயல்படுகிறது. சூரியனின் வெண்மையான ஒளிக்கதிர் அந்த நீரின்
துளி வழியாக செல்லும் போது அது ஏழு வண்ணங்களாக பிரிகிறது. எல்லா வண்ணங்களையும்
சரியான விகிதத்தில் கலந்து நீ வெண்மையை உருவாக்கலாம். வெண்மை எல்லா வண்ணங்களையும்
கொண்டது.

நான் புத்ததுறவியல்ல, நான் ஒரு இந்து அல்ல, நான்
ஒரு கிறிஸ்துவனுமல்ல, நான் ஜெயின் மதத்தை சேர்ந்தவனல்ல, நான் ஒரு முகம்மதினுமல்ல.
மேலும் நான் அனைத்துமானவன். எல்லா கலர்களையும் கொண்டவன். அதனால்தான் அது வெண்மையாக
தெரிகிறது. வெண்மை ஹாரா மிகப் பெரிய சாத்தியக்கூறாகும்.

மக்கள் வேறுவேறுவிதமான ஹாராவை கொண்டவர்கள்.
ஒருவருக்கு கறுப்பு ஹாரா இருக்கும், கறுப்புதான் இருப்பதிலேயே மிகவும் தாழ்வானது.
ஏனெனில் கறுப்புதான் எந்த நிறமும் இல்லாத ஒன்றாகும். அதனால்தான் எல்லா
புராணங்களிலும் நாம் சைத்தானை கறுப்பு நிறத்தில் தீட்டி வைத்திருக்கிறோம். அதுதான்
அதன் ஹாரா. நாம் சைத்தானை கறுப்பாக வரைந்து வைத்திருக்கிறோம். நீக்ரோக்கள் கூட
சைத்தானை கறுப்பாகத்தான் வண்ணமடித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் சைத்தானுக்கு
வெள்ளை நிறம் தந்திருக்க வேண்டும், ஆனால் அவர்களும் சைத்தானை கறுப்பாகத்தான்
வண்ணமடித்து வைத்திருக்கிறார்கள்.

கறுப்பு எனறால் எந்த நிறமும் இல்லாதது என்று
தான் பொருள். எதுவும் இல்லாதது. கறுப்பு எதிர்மறையானது. கறுப்பு என்பது
ஒன்றுமில்லாதது. கறுப்பு என்றால் எதிரானது என்று அர்த்தம். கறுப்பு மரணம்.
அதனால்தான் மரணத்தையும் கறுப்பு நிறத்தில் வண்ணமடித்து வைத்திருக்கிறார்கள். மேலும்
நாம் யாரையாவது துக்கம் கேட்க போகும்போது நாம் கருப்பு நிறத்தைத்தான்
உபயோகிக்கிறோம். வெண்மை கறுப்புக்கு நேர் எதிர் விதமானது. கறுப்பு எந்த நிறமும்
இல்லாதது, வெண்மை எல்லா நிறங்களையும் கொண்டது. வெண்மை என்பது மறைந்திருக்கும்
வானவில்.

கண்ணாடியில் உன்னுடைய முகத்தை போய்ப் பார்.
அடுத்த முறை கண்ணாடியின் எதிரில் நிற்கும்போது உன்னுடைய இந்த முகத்தின் வெளிப்புற
தோற்றத்தை பற்றி கவலைப்படாமல் உன்னுடைய ஹாராவை பார்க்க முயற்சி செய். ஆரம்பத்தில்
அது கண்ணுக்குத் தெரியாது, ஆனால் நீ அதை தொடர்ந்து பார்க்க முயற்சி செய்தால்
மூன்று மாதங்களுக்குள் உன்னுடைய முகத்தை சுற்றியுள்ள மெலிதான ஹாராவை உன்னால்
பார்க்க முடியும்.

மேலும் அது உன்னுடைய வளர்ச்சிக்கு மிகப் பெரிய அளவில் உதவும்,
ஏனெனில் அது சுட்டிக்காட்டும். நீ எங்கே இருக்கிறாய் என்பதை அது தெரியப்படுத்தும்.
அது கறுப்பாக இருந்தால் நீ இன்னும் அதிகமாக உன் மீது வேலை செய்ய வேண்டும், அது
சாம்பல் நிறத்தில் இருந்தால் நீ உன் வளர்ச்சியில் நடுவில் இருக்கிறாய், பாதி தூரம்
வந்தாகி விட்டது, இன்னும் பாதி தூரம் பயணப்பட வேண்டும்.

நீ, ஏன் அது ஏதாவது ஒரு வண்ணத்தில் தெரிவதில்லை
என்று கேட்கிறாய். ஏனெனில் எல்லா நிறங்களும் தெரிவதால் அது ஏதோ ஒரு நிறமாக மட்டும்
இருக்க முடியாது. ஏதாவது ஒரு நிறம் எண்ணும்போது ஒரு நிறம்தான் தெரியும். மேலும் நீ
கலர்களைப் பற்றி தெரிந்த மனரீதியான வல்லுனர்களை பார்த்து இதை பற்றி கேட்டால் நீ
மிகவும் வியப்படைந்து போவாய். நீ சிவப்பு வண்ண ஆடையை அணிந்திருக்கிறாய் என்றால்
அது சிவப்பு வண்ணத்தை பிரதிபலிக்கிறது என்றுதான் பொருள். அந்த ஆடை சிவப்பு
வண்ணத்தைத்தான் இந்த உலகிற்கு திரும்ப தருகிறது. உன்னுடைய உடை மற்ற அனைத்து
வண்ணங்களையும் உறிஞ்சிக் கொள்கிறது, சிவப்பு நிறம் மட்டும் உறிஞ்சப்படவில்லை, ஆகவே
அது பிரதிபலிக்கிறது, அது அந்த வண்ணத்தை மட்டுமே திரும்ப தருகிறது, இந்த
பிரபஞ்சத்துடன் அது சிவப்பு நிறத்தை பகிர்ந்து கொள்கிறது. அது சிவப்பு வண்ணத்தை
ஏற்க வில்லை, எனவேதான் அது சிவப்பாக இருக்கிறது என்பதை அறிந்தால் மிகவும்
ஆச்சரியப்படுவாய்.

இது முரண்பாடாக தோன்றும். சிவப்பு வண்ண ஆடை
உண்மையில் சிவப்பல்ல. அது சிவப்பை மறுக்கிறது, அதனால்தான் அது சிவப்பாக
தோன்றுகிறது. மக்கள் உன்னை பார்க்கும் போது சிவப்பு நிற ரேகை சென்று அவர்கள்
கண்களில் விழுவதால் அவர்கள் அதை சிவப்பு நிறஆடையாக பார்க்கின்றனர். கறுப்பு நிற
ஆடை எனில் எல்லா நிறங்களையும் உறிஞ்சிக் கொள்கிறது என்றே பொருள். அது எதையும்
திரும்ப தருவதில்லை. அது எல்லா வண்ணங்களையும் எடுத்துக் கொள்கிறது. கறுப்பு
துயரமானது, அது எதையும் பகிர்ந்து கொள்ளாது. அது ஒருவிதமான ஆன்மீக மலச்சிக்கல்
போன்றது. அது எடுத்துக் கொள்ளும், ஆனால் எதையும் வெளிவிடாது.

வெண்மை எல்லா நிறங்களையும் பிரதிபலித்து
விடுகிறது. எல்லாவற்றையும் திரும்ப தந்து விடுகிறது. அதனால்தான் இந்தியாவில்
வெண்மை துறத்தலின் அடையாளமாக மாறிவிட்டது. வெண்மை எனில் எதையும் உறிஞ்சிக்
கொள்ளாது என்பதே அர்த்தம்.

எல்லா நிறங்களும் பிரபஞ்சத்திற்க்கு நன்றியுடன்,
நன்றியுணர்வுடன் திரும்ப வருகிறது. எல்லா நிறங்களும் உனது கண்களில் விழும்போது அது
வெண்மையாக தெரிகிறது. ஏதாவது ஒரு நிறம் – சிவப்பு, நீலம், பச்சை – மட்டும்
தெரிந்தால் அது வண்ணமயமானது.

வெண்மையான ஹாரா மிகச் சிறந்த ஹாரா. மேலும் நான்
ஹரீஷிடம் அவன் மிகவும் உணர்வுள்ள மனிதன் என்பதை சொல்ல விரும்புகிறேன். ஒரு விதத்தில்
அவன் ஒரு புதிய சன்னியாசி, மற்றொரு விதத்தில் அவன் மிகவும் பழமையான சன்னியாசி.
எனக்கு அவனை முன்பே தெரியும். அவனுக்கும் இது தெரியும். அவனுக்கு இதை பற்றிய
அறிதல் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவன் அதைப் பற்றி உணர்ந்துள்ளான். அவன் மிகவும்
உணர்வானவன், அளவற்ற உணர்தல் உள்ள மனிதன். அதனால்தான் அவனால் ஹாராவை பார்க்க
முடிந்திருக்கிறது. அவன் ஒரு சிறிதளவு முயற்சி செய்தால் அவனால் அவனுடைய ஹாராவையும்
பார்க்க முடியும். மேலும் அவன் இன்னும் முயற்சி செய்தால் அவன் ஹாரா கண்டுபிடிக்கும்
வல்லுனன் ஆகி விடலாம். அவனால் மற்றவர்களின் ஹாராவையும் பார்க்க முடியும். மேலும்
அது அவனுடைய வேலையில் உதவி புரியும். அவன் ஒரு மனவியலாளன். இது அவனுக்கு மிகப்
பெரிய அளவில் உதவி புரியும்.

கிழக்கில், இதை ஒரு மனவியல் காணும் கருவியாக
ஞானிகள் உபயோகித்துள்ளனர். ஒருவன் குருவிடம் வரும்போது முதலில் அவர் அவனுடைய ஹாராவைத்தான்
பார்ப்பார். ஏனெனில் அது எல்லாவற்றையும் தீர்மானம் செய்யும். அவர் அவனுடைய ஹாராவை
அலசி பார்ப்பார், ஏனெனில் அது எல்லாவற்றையும் காட்டிக் கொடுக்கும். அது அவனுடைய
மனதின் ஆழ்நிலைகளை கூட காட்டிக் கொடுத்து விடும், சுய உணர்வுள்ள மனம், சுயஉணர்வற்ற
மனம் ஆகியவற்றையும் அது காட்டும்.

என்னிடம் வரும் மக்களில் சிலர் அவர்கள் தாங்கள்  சன்னியாஸ் எடுக்க விரும்பவில்லை எனக் கூறுவார்கள், ஆனால்
அவர்களது ஹாராவில் அவர்கள் தயாராக இருப்பதை நான் பார்ப்பேன். அன்றொரு நாள்
பராஸ்தானின் முன்னாள் மனைவி இங்கிருந்தாள். அவள் தயாராக இருப்பதை நான் பார்த்தேன்,
ஆனால் அவள் நான் அதை பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றாள். அவளது ஹாரா
மிகவும் தெளிவாக இருந்தது. அவள் இந்த உலகை தொடர்பை விட்டு விட்டாள். ஆனால்
அவளுக்கு அது தெரியவில்லை. நான் அவளிடம் என்னைப் பொறுத்தவரை நீ சன்னியாஸ்
எடுத்தாகி விட்டது. உன்னைப் பொறுத்தவரை நீ சிந்திக்க சிறிது காலம் எடுத்துக் கொள்
என்றேன். சன்னியாஸ் எடுத்துக் கொள்ள விரும்பும் மக்கள் இருக்கிறார்கள், நான்
அவர்களுக்கு சன்னியாஸ் கொடுத்து விடுவேன், ஆனால் எனக்கு அவர்களது ஹாரா, அவர்கள்
இன்னும் இந்த உலகில் ஈடுபாட்டோடு இருப்பதை, இந்த உலகத்தை பற்றிக் கொண்டிருப்பதை
காட்டும். நான் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவர்களது ஆசை
சிறந்தது, ஆனால் அவர்களிடம் அதற்கான உழைப்பு ஏதுமில்லை.

மக்களுக்கு தங்களது ஹாராவை பற்றிய விழிப்புணர்வு
இல்லை. இல்லாவிடில் அவர்களால் தங்களை தாங்களே சுயஅலசல் செய்து கொள்ள முடியும்.
ஹரீஷ் இந்த ஆற்றலை மிக எளிதாக அடைய முடியும்.

OSHO, A   Sudden Clash of Thunder,  ch  4, Q  2