சிரமப்படாதீர்கள்..
ஏனெனில் சிரமப்பட்டு நீங்கள் ஒரு விஷயத்தை செய்தால் அந்த விஷயத்தின் விளைவு பற்றிய எதிர்பார்ப்பு உங்களுக்கு உருவாகும். அந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் ஏமாற்றத்தையே அளிக்கும். ஏனெனில் எதிர்பார்ப்புகள் எப்போதும் ஏமாற்றத்தின் விதையை தனக்குள் வைத்திருக்கின்றன. அப்படி நீங்கள் ஏமாற்றத்தை சந்திக்கும் போது அந்த ஏமாற்றம் உங்களிடம் கோபத்தை உருவாக்கும். அந்த கோபம் உங்கள் வாழ்வில் உங்களை சுற்றியுள்ள எல்லா சூழ்நிலைகளிலும் பிரதிபலிக்கும். அந்த கோப கண்ணாடியை அணிந்துகொண்டு பார்க்கும் போது எல்லா சூழ்நிலைகளும் எல்லா மனிதர்களும் தவறாக தெரிவார்கள். அப்போது அதை சரி செய்ய இயலாத காரணத்தால் உங்கள் மனதில் இயலாமை தோன்றும். அந்த இயலாமையின் காரணமாக உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு தோன்றும். அந்த வெறுப்பு உங்கள் வாழ்வு முழுவதும் படரும். பிறகு வாழ்வே எதிர்மறையாக தோன்றும்.
இதுவே நீங்கள் சிரமப்படாமல் வாழ்ந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.உங்களை உங்களுக்கு பிடிக்கும் உங்களுக்கு பிடித்த செயல்களை செய்து நீங்கள் மிக விரைவாக அடுத்த கட்டத்திற்கு நகர்வீர்கள் எல்லா அத்தியாவசியமான செயல்களையும் முழு மனத்துடனும் முழு சக்தியுடனும் விருப்பத்துடனும் நேசத்துடனும் செய்ய இயலும் உங்களுக்கு எதிர்பார்ப்புகள் தோன்றாது. ஆசைகள் குறையும் சிரமப்படாமல் எது கிடைக்கிறதோ அதை மட்டுமே வைத்துகொண்டு தேவைகளை மட்டும் நிறைவேற்றி கொண்டு எளிமையாக நிறைவாக வாழ இயலும். அப்படி எளிமையாக இயல்பாக மகிழ்வாக நீங்கள் வாழும்போது வாழ்க்கையே வசந்தமாக இருக்கும். உங்கள் விழிப்புணர்வு வளரும்.
எனவே சிரமப்படாமல் வாழ்ந்து விழிப்புணர்வை வளர்த்து கொள்ளுங்கள்.
நேசத்துடன் நிர்தோஷ்.