இன்றைய மனிதனுக்கு முக்கியமான ஆர்வம் பொழுது போக்கிலும் அரசியலிலும் அது இரண்டையும் தவிர சாப்பாட்டிலும் உள்ளது. மற்ற விஷயங்களில் புது புது கைப்பேசி மாடல்கள் அல்லது புதுமையான மின்னணு சாதனங்களிலும் அல்லது புதுவித கார் மாடல்களிலும், பைக் மாடல்களிலும் உள்ளது. பெண்களாக இருந்தால் புதுவித ஆடம்பர பொருள்களில் உள்ளது.
இவை அனைத்தையும் தவிர அனைவருக்கும் பொதுவான மிகப்பெரிய ஆர்வம் அதிகம் உழைக்காமல் எளிதாக அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை பேரார்வமாக அனைவரிடமும் உள்ளது. அந்த பேராசையை தூண்டுவதை வர்த்தக வியாபார தந்திரமாக கொண்டு அனைத்து பெரிய நிறுவனங்களும் மற்றும் online, யூடியூப், பேஸ்புக் போன்ற நிறுவனங்களும் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை பிடித்து தருவதை பெரு வர்த்தகமாக செய்கின்றன. அவர்கள் நம் விளம்பரத்தை வாடிக்கையாளராக மாறும் வாய்ப்புள்ளவர்களுக்கு அனுப்புவர். அவர்கள் நம்மை தொடர்பு கொள்வர். அவர்களை நம் வாடிக்கையாளர்களாக மாற்றிக்கொள்வது நம் பொறுப்பு. இந்த நிறுவனங்கள் தொடர்பு கொள்ள செய்தமைக்கு கட்டணம் வசூலிப்பர்.
இந்த பணம் சம்பாதிக்கும் பேராசையை கைவிட்டு உண்மையான உலகிற்கு வாருங்கள். ஏனெனில் உங்களிடம் இருக்கும் பணத்தை புது மாடல் கை பேசியையோ அல்லது ஏசி அல்லது கார் பைக் அல்லது பொழுதுபோக்கையோ காட்டி இந்த நிறுவனங்களின் கிளை நிறுவனங்களே வாங்கிகொள்வர். இந்த . பொழுதுபோக்கோ, கை பேசியோ, வாகனமோ நம் வசதியே அன்றி வாழ்வல்ல. உணர்வும் உணர்ச்சியுமே உண்மையான வாழ்வு.
எனவே ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உண்மையான உணர்ச்சியோடும் உண்மையான உணர்வோடும் வாழ்கிறீர்கள் என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அப்படி நீங்கள் வாழ்வதே உண்மையான வாழ்வு.உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்வது வசதி தானே அன்றி உண்மையான வாழ்வல்ல. அதற்காக உணர்வும் உணர்ச்சியும் உள்ள வாழ்வை பணயம் வைக்காதீர்கள். நீங்கள் மனிதர்களிடம் தான் உணர்வையும் உணர்ச்சியையும் வாழ இயலும். நான் அறிவேன். எவ்வளவே அபாயகரமானதாக தோன்றினாலும் மனிதர்கள் மீது, வாழ்க்கை மீதே நம்பகத்தன்மை கொள்வதே நாம் செய்ய வேண்டியது. அவ்வாறு நம்பகத்தன்மை கொண்டால் மட்டுமே மனிதர்களோடு நாம் உணர்வாகவும் உணர்ச்சியோடும் கலந்த உண்மையான வாழ்வை தொட இயலும். அதற்கு முடிந்த வரை முயற்சி செய்யுங்கள்.
நேசத்துடன் நிர்தோஷ்.