அன்பு நண்பர்களே!

மக்கள் பணத்திற்காக வாழ்க்கையை பணயம் வைக்கின்றனர். ஏனெனில் இன்றைய நவீன உலகில் பணத்தை விட முக்கியமான விஷயம் எதுவும் இல்லை என மனிதன் நம்புகிறான். எனவே பணத்தை தராத கலையும் படைப்பு திறனும் செல்லா காசாகிவிட்டது. ஆனால் பணத்தால் வசதிகளை தர முடிகிறது ஆனால் வாழ்ந்தோம் என்ற உணர்வின் காரணமாக எழும் நிறைவை தர இயலவில்லை. எனவே இன்றைய மனிதன் வசதிகளுடன் ஆனால் உணர்வில் வெறுமையாக இருக்கிறான்.  

முதல் தளமான தலைக்கு முக்கியமான விஷயம் பணம்.

அதற்கு காரணம் வாழ்வில் மூன்று தளங்கள் உள்ளன அவை 

  1. தலை, தர்க்கம், காரண அறிவு. காரண காரியம் சார்ந்த பகுத்தறிவு.
  2. இதயம், உணர்ச்சிகள், உணர்வுகள், மனநிலை, படைப்பு திறன்,
  3. இருப்பு, தன்ணுணர்வு, விழிப்புணர்வு, இருக்கிறேன் என்ற உணர்வு.

இரண்டாம் தளமான இதயத்திற்கு முக்கியமான விஷயம் அன்பு

மூன்றாம் தளமான இருப்புக்கு முக்கிய விஷயம் விழிப்புணர்வு.

இவை மூன்றையும் முழுமையாக வாழ்ந்தால் மட்டுமே மனிதன் முழுமையாக மகிழ்ச்சியாக இருக்க முடியும். 

அதில் முதலாவதான தலையை தவிர மற்ற நிலைகளை வாழ்வதற்கு இன்றைய‌ நிலையில் தியானம் அவசிய தேவை. தியானம் இல்லாத மனிதன் தலையில் வாழ்வதால் பணத்தை முக்கிய விஷயமாக கருதி  வெறும் வசதிகளை மட்டுமே பெருக்கி கொண்டு உணர்வில் வெறுமையாக உணர்கிறான். ஆதலால் வாழ்க்கையும் வெறுமையாக காட்சியளிக்கிறது. எனவே விரக்தியடைந்துவிடுகிறான் ஆகவே இந்த மன விரக்தியில் இருந்து வெளி வருவதற்கு இன்றைய மனிதன் தியானத்தின் துணை கொண்டு வாழும் தளத்தை மாற்றிக்கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். ஆதலால் தியானம் செய்வீர்! வாழ்வை எல்லா தளங்களிலும் முழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வீர்!

நேசத்துடன் நிர்தோஷ் !!!