இன்றைய தமிழக சமூகத்தில் குடி போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.  அவ்வாறு  அடிமையானவர்களை குணப்படுத்துவது எப்படி என்பதற்கான நடவடிக்கைகள் பல எடுக்கப்பட வேண்டும்.

அவற்றை இப்போது தள்ளி வைத்து விட்டு, இவ்வாறு பெரும்பாலான ஆண்கள் குடிக்கு அடிமை ஆவதற்கான காரண காரியங்களை ஆராய முயற்சிப்போம்.

அதில் முதல் கரணம் கிட்ட தட்ட எல்லோரும் ஏதோ ஒரு கடனில் சிக்கியுள்ளனர். எனவே அது பணம் சம்பித்திக்க வேண்டிய கட்டாயத்தை, மாதாமாதம் இவ்வளவு தொகை கட்டாயம் என்ற அழுத்தத்தை உருவாக்கி விடுகிறது.

அதன் காரணமாக வெளியிலோ அல்லது வியாபாரத்திலோ பொய் பேசவேண்டியதாகவோ அல்லது சொன்ன சொல்லை காப்பாற்ற இயலாத நிலையோ ஏற்பட்டு விடுகிறது. இங்கே நம் உணர்வுப்படி, வாழ இயலாத காரணத்தால் குற்ற உணர்ச்சி உருவாகி விடுகிறது.

எனவே குற்ற உணர்ச்சியில் இருந்து தினந்தோறும் சிறிதளவாவது விடுபட தியானத்தை அறியாத மக்களுக்கு இருக்கும் ஒரே வழி போதை தான். போதையிலிருந்தும் அந்த போதைக்கு காரணமாக இருக்கின்ற குற்ற உணர்விலுருந்தும் விடுபட அனைவரும் தியான யுக்திகளை செய்ய வேண்டும். ஓஷோவின் தியான யுக்திகள் எளிமையானவை.

எனவே ஓஷோவின் தியான யுக்திகளை செய்து போதையிலிருந்தும் குற்ற உணர்விலுருந்தும் விடுபடுவோம் வாருங்கள்

 

நேசத்துடன்
நிர்தோஷ்