வாழ்க்கை ஏன் மகிழ்ச்சியாக இல்லை?

ஏனெனில் நாம் சிறு வயதிலிருந்தே பிறர் சொல்வதை கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம்.

சிறு‌வயதில் படிக்க பிடிக்கவில்லை... ஆனால் வீட்டில் பெற்றோரால் கட்டாயப்படுத்தபட்டோம். பல விஷயங்கள் சமுதாயத்தை சமாளிப்பதில் உதவி புரிய கூடியதாக இருந்தாலும் நாம் பிடிக்காத விஷயத்தை செய்கிறோம். பிறகு கல்லூரிக்கு வந்த பின் குடும்ப நிதி நிலையைப் பொறுத்தும், எந்த படிப்பு படித்தால் அதிக சம்பளம் மற்றும் மரியாதை கிடைக்கும் என்ற கணக்கை கொண்டு வீட்டில் உள்ளோர் மற்றும் நண்பர்களின் கருத்தை கொண்டும் பிடிக்காத அல்லது புரியாத படிப்பை தேர்ந்தெடுத்து பலவித கனவுகளோடு படிக்கிறோம். ஆனால் கல்லூரி படிப்பை முடித்து வேலை தேடும் படலத்தில் நமக்கு அவமானங்களே வெகுமதியாக கிடைக்கிறது. அதையும் தாண்டி வேலை கிடைத்தால் அங்கும் ஒன்றும் தெரியாது என அவமானப்படுத்துகிறார்கள். பிறகு சிரமப்பட்டு ஒரு வேலையிலோ அல்லது தொழிலிலோ, வளர்ந்த பிறகு திருமணத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள். திருமணத்திற்கு பிறகு குழந்தை எனும் புதிய பொறுப்பு.

எனவே இத்தகைய விஷயங்களை சமாளிப்பதற்கே ஏகப்பட்ட சக்தியும் நேரமும் செலவிட வேண்டிய வருவதால்.... நாம் மகிழ்ச்சியாக இல்லை என்பது நமக்கு மறந்துவிட்டது. எனவே நாம் தினசரி பழக்கவழக்கத்திற்கு அடிமையாகி பிடிக்காத மனைவி அல்லது கணவன், பிடிக்காத வேலை, பிடிக்காத சொந்த பந்தங்கள் என‌ நம்மை சுற்றி மகிழ்ச்சி என்பது மருந்துக்கு கூட இல்லாத அளவிற்கு வாழ்க்கையை அமைத்துக் கொண்டுவிட்டோம். அதனாலேயே உலகில் வெறுப்பு வெகுவாக வளர்ந்துவிட்டது.

எனவே இந்த நிலை பற்றி விழிப்புணர்வு கொண்டு தினசரி ஏதாவது ஒரு 2 மணிநேரம் தனக்கு பிடித்த விஷயத்தை அது நடனமாக இருக்கலாம்; இசையாக இருக்கலாம்; அல்லது புத்தகம் படித்தலாக இருக்கலாம்; கதை கவிதை எழுதுவதாக இருக்கலாம். இப்படி படைப்பு தன்மையுடன் தொடர்புள்ள தனக்கு பிடித்த விஷயத்தை ஒவ்வொருவரும் செய்தால் அதிலிருந்து உன்னை உனக்கே பிடிக்க தொடங்கும். அதிலிருந்து உன்மீது நீ அன்பு கொள்வாய். அது வளர்ந்து மற்றவர்களுக்கும் பரவ‌ தொடங்கும். இதுவே வெறுப்பை தவிர்த்து அன்பை வளர்க்கும் வழி.


- நேசத்துடன் நிர்தோஷ்.