மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இதுவரை இருந்த மனிதர்களில் இப்போது இருக்கும் மனிதர்கள்தான் மிகவும் வசதியாக உள்ளனர். ஏனெனில் மனிதர்கள் உருவான காலத்தில் மிருகங்கள் போல உணவுக்காக விலங்குகளை வேட்டையாடி உணவு உண்ண வேண்டி வந்தது. ஆக ஒரு நாளில் இருக்கும் இருபத்து நான்கு மணி நேரத்தில் 14 மணி நேரம் வேட்டையாடி உணவை உண்ண வேண்டி வந்தது.‌ உணவை பாதுகாக்க அப்போது எந்த வழியும் இல்லாத காரணத்தால் தினந்தோறும் வேட்டையாட வேண்டி வந்தது.‌ அது மட்டுமல்ல. எவ்வளவு உணவு கிடைக்கும் என்பது உறுதியற்றதாக இருந்தது. பிறகு தனி மனிதனாக வேட்டையாடுவதை விட குழுவாக வேட்டையாடுவது சிறந்தது என கண்டு கொண்டனர். பிறகு உழவு தொழிலை விவசாயத்தை கண்டறிந்தனர். ஆகவே வேட்டையாட‌முடியாத மழை காலங்களிலும் வேட்டையில்‌ எதுவும் கிடைக்காத காலத்திலும் கிடைத்த தானியங்களை பயிரிட்டு உணவை‌ வளர்த்தனர். அவ்வாறு‌ உணவை வளர்க்க நிலத்தை பதப்படுத்த வேண்டி வந்தது. ஆகவே பயிரிட்ட உணவு வளர‌ காலம்‌ பிடித்தது.‌ எனவே வேட்டையாடும்‌ போது தினந்தோறும்‌ ஓரிடத்தில் தங்கி நாடோடிகளாக இருந்தனர். ஆனால் விவசாயத்திற்கு பிறகு ஓரிடத்தில் தங்க தொடங்கினர். அவ்வாறு தங்க தொடங்கிய‌ போது உணவுக்கு பிறகு காமம் ஏற்பட்டது. அப்போது காமத்திற்கு‌ பிறகு குழந்தைகள்‌ பிறந்தன.‌ அவ்வாறு‌ பிறந்த குழந்தைகள் தனக்குதான்‌ பிறந்தன‌ என‌ உறுதி செய்துகொள்ள ஒருவனுக்கு ஒருத்தி என்னும் குடும்ப அமைப்பு தோன்றியது.  பிறகு அந்த குடும்ப அமைப்பு பல குடும்பங்களாக வளர்ந்து கிராமமாக மாறியது கிராமம் வளர்ந்து நகரமாக மாறியது.‌ குடும்பமும் பல சொந்தங்களுடன்‌ வளர்ந்தது. நகரம் நாடாக மாறியது. பாதுகாப்பின் தேவை காரணமாக இருப்பவர்களில் பலசாலி தலைவனாக மாறினான். அந்த தலைவனுக்கு உதவி புரிய பலர் தேவைப்பட்டனர். அவர்கள் என்ன செய்ய வேண்டும்  என திட்டமிடல் ராணுவமாக மாறியது. குடும்பத்தை காப்பாற்ற உருவான அமைப்பு சமுதாயமாகியது. பிறகு தலைவனாக இருக்க போட்டி ஏற்பட்டது. போட்டி இருவரின் வீரர்களுக்கும் போராக மாறியது. போரில் வென்றவன் அரசனாக மாறினான். அரசன்‌ தன் சமுதாயத்திற்கு வேண்டிய வசதிகளை‌ செய்து‌ கொடுத்து எதிரிகளிடமிருந்து தன்‌ மக்களை‌ பாதுகாத்து தன் மக்களிடையே‌ ஏற்படும் பிரச்சனைகளையும்‌ தீர்த்து தன் அரசாட்சியை நிலபரப்புகளை‌ வெல்வதன்‌ மூலம் விரிவுபடுத்தி கொண்டே இருக்க வேண்டும். அதன் பிறகு 17ம் நூற்றாண்டிலிருந்து பலத்தை விட நிலத்தை விட பெண்ணை விட சொத்துகளை விட பணம் முக்கியமாக மாற தொடங்கியது. 20ம் நூற்றாண்டில் பணத்தை விட அறிவு முக்கியமாக மாறியது. தற்போதைய‌ 21 ம் நூற்றாண்டில் தொழில் நுட்பம் முக்கியமாக உள்ளது. அறிவு முக்கியமாக மாற தொடங்கிய காலத்தில் இருந்து அறிவியல் மிக பிரமாண்டமாக வளர்ந்த காரணத்தால் மின்சாரம் வீட்டு வேலைக்கு உணவு சமைக்க சாதனங்கள் பொழுது போக்கிற்கு திரைப்படம்‌ மற்றும் பாடல்கள்‌ தொலைகாட்சி, கணிப்பொறி, கைப்பேசி. என அந்த கால அரசர்கள் கூட கற்பனை செய்ய முடியாத அளவு வசதிகள் இன்றைய சாமானிய மனிதனுக்கு கிடைக்கின்றன. ஆனாலும் உங்கள் அனைவரையும் விட நான் சிறந்தவன் என்பதை நிரூபிக்க விழையும் அகங்காரத்தின் கருவிகள் தான் மாறியுள்ளன. வேட்டையாடும்‌ காலத்தில் அதிக விலங்குகளை வேட்டையாடியவன் சிறந்தவன். விவசாயம் செழித்த காலத்தில் அதிக நிலத்தை வைத்திருந்தவர் சிறந்தவன். குடும்ப அமைப்பு வந்த பிறகு அதிக குழந்தைகளை பெற்றவன் எவனோ அவனே சிறந்தவன். அரசனாக மாறிய‌ பிறகு அதிக நிலப்பரப்பை ஆட்சி‌ செய்பவன் எவனோ அவனே சிறந்தவன். 17ம் நூற்றாண்டில் பணம் முக்கியமாக மாறிய பிறகு பணக்காரன் எவனோ அவனே சிறந்தவன். 21 ம் நூற்றாண்டில் அறிவும் அறிவியலும் முக்கியமாக மாறிய பிறகு அதிக அறிவாளி எவனோ‌ அவனே சிறந்தவன். இன்றைய தொழில் நுட்ப உலகில் அதிக தொழில் நுட்பங்களை அறிந்தவன் எவனோ அவனே சிறந்தவன். ஆகவே இத்தனை‌ காலத்தில் தன்னை சிறந்தவனாக நிரூபிக்கும் கருவிகளும்‌ அடையாளங்களும் தான் மாறியுள்ளனவே அன்றி‌ தன்னை‌ சிறந்தவனாக நிரூபிக்க வேண்டும் என்ற வேட்கை மாறவில்லை. தியானம்‌ செய்து விழிப்புணர்வு பெற்று‌ ஞானமடைந்த மக்கள்‌ மட்டுமே  கைவிட்டு உள்ளனர். அந்த வேட்கையை‌ கை விட்ட பிறகே உண்மையான வாழ்க்கையை‌ அறிய‌ இயலும். ஆகவே ஓஷோ கொடுத்த தியான யுக்திகளை‌ பயன்படுத்தி விழிப்புணர்வு பெற்று தன்னை‌ சிறந்தவனாக நிரூபிக்க வேண்டும் என்ற வேட்கையை கை விடுவோம். உண்மையான வாழ்வை கண்டு கொள்வோம்.

நேசத்துடன்
நிர்தோஷ்.